ஸ்டாக்ஹோம்: அமெரிக்காவைச் சேர்ந்த சால் பெரிமட்டர், பிரையன் ஷ்மிட் மற்றும் ஆடம் ரீஸ் ஆகிய 3 விஞ்ஞானிகளுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு கிடைத்துள்ளது.
அமெரிக்காவில் பிறந்த ஷ்மிட் (44) தற்போது ஆஸ்திரேலியாவில் உள்ள ஆஸ்திரேலியன் நேஷனல் பல்கலைக்கழகத்தில் ஆராயச்சி செய்து வருகிறார்.
பெர்ல்மட்டர் (52) பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பணிபுரிகிறார். ரீஸ் (42) மேரிலேண்ட், பால்டிமோரில் உள்ள ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் மற்றும் ஸ்பேஸ் டெலஸ்கோப் சயின்ஸ் இன்ஸ்டிடியூட்டில் பணிபுரிகிறார்.
1990களில் பெர்ல்மட்டர் ஒரு குழுவிலும், ஷ்மிட், ரீஸ் இன்னொரு குழுவிலும் சேர்ந்து ஆராய்ச்சி மேற்கொண்டனர். அவர்கள் சூப்பர்நோவா அல்லது வெடிக்கும் நட்சத்திரங்களை ஆராய்ந்து அதன் மூலம் பிரபஞ்சம் விரிவடைவதைக் கண்டுபிடித்தனர்.
நான் இரவு உணவு சாப்பிடுவதற்காக டைனிங் டேபிளில் உட்கார்ந்தேன். அப்போது ஒரு அழைப்பு வந்தது. எடுத்துப் பேசினால் உங்களுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு கிடைத்திருக்கிறது என்று கூறினார்கள். எனக்கு குழந்தைகள் பிறந்தபோது எப்படி உணர்ந்தேனோ அதே போன்று இருந்தது என்று நோபல் பரிசு கிடைத்ததது குறித்துக் கூறியுள்ளார் ஷ்மிட்.
1.5 மில்லியன் டாலர் பரிசுத் தொகை இந்த 3 பேருக்கும் பிரித்துக் கொடுக்கப்படும்.
சர் ஆல்பிரட் நோபல் நினைவாக வழங்கப்படும் இந்த விருது அவரது நினைவு நாளான டிசம்பர் 10-ம் தேதி வழங்கப்பட்டு வருகிறது.
0 comments:
Post a Comment