Wednesday, November 9, 2011

இல்லறத்திலும் ஷைத்தானின் ஊசலாட்டம் !


ஒருவனின் இல்லற (உடலுறவு) வாழ்விலும் கூடஷைத்தான் கெடுத்து விடுவதை அன்றாடம் பார்த்து வருகிறோம். மார்க்கத்திற்கு முரணாண வகையில் மனைவியர் அல்லாதவர்களிடத்தில் தவறான கள்ளத்தனமான உறவு வைத்துக் கொள்வதின் மூலமோ, அல்லது மனைவியிடத்திலேயே மார்க்கம் தடை செய்த காலங்களில் கட்டுப்பாடில்லாத உறவைத் தூண்டுவதின் மூலமோ மனிதனை ஷைத்தான் ஆட்டிப் படைக்கிறான்.

இன்னும் சொல்வதென்றால், கணவன் மனைவி இல்லறத்தில் ஈடுபடும் போதும் இறைவனை மறந்து விடாமலிருக்க நபியவர்கள் அழகிய பிரார்த்தனையைக் கற்றுத் தந்துள்ளார்கள். அந்தப் பிரார்த்தனையை மறப்பதுவும் அதை சொல்லாமல் விட்டுவிடுவதும் கூட ஷைத்தானின் ஊசலாட்டமே!

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் தம் மனைவியுடன் (தாம்பத்திய உறவு கொள்ளும் எண்ணத்தில்) செல்லும் போது "பிஸ்மில்லாஹ்-அல்லாஹ்வின் திருப்பெயரால்... இறைவா! ஷைத்தானை எங்களை விட்டு விலகியிருக்கச் செய்! எங்களுக்கு நீ அளிக்கின்ற குழந்தைச் செல்வத்திலிருந்தும் ஷைத்தானை விலகியிருக்கச் செய்!'' என்று பிரார்த்தித்து (விட்டு உறவு கொண்டாரெனில்,) அதன் மூலம் அவ்விருவருக்கும் குழந்தை வழங்கப்படுமானால் அக்குழந்தைக்கு ஷைத்தான் தீங்கு விளைவிப்பதில்லை.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 141, 3271, 6388, 7396 முஸ்லிம் 2825

எனவே யார் இறைவனின் பெயரை உச்சரித்து இந்தப் பிரார்த்தனையைச் செய்து இல்லறம் நடத்துகிறாரோ அவ்விருவருக்கும் அவர்களது குழந்தைக்கும் இறைவனின் பாதுகாப்பு கிடைக்கிறது.

0 comments:

Post a Comment