Friday, June 29, 2012

ராகிங் செய்தால் பாஸ்போர்ட் பெற முடியாது !

 கோவை - ராகிங் குற்றம் செய்தவர்கள் பாஸ்போர்ட் பெற முடியாது என காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டக் காவல்துறை, ராகிங் தடுப்புக் கூட்டத்தினை கவுண்டம்பாளையத்தில் 26.06.2012 அன்று நடத்தியது. இதில் பல்கலைக்கழக டீன், கல்லூரி முதல்வர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்இந்தக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக காவல்துறை கண்காணிப்பாளர் உமா கலந்து கொண்டார். அவர் பேசுகையில், ” ராகிங் செய்வது மிகக் கடுமையான குற்றம்,...

செல்போனில் பேசியதால்தான் அண்ணா மேம்பால விபத்து-பஸ் டிரைவர் கைது !

சென்னை: செல்போனில் பேசியபடி மாநகரப் போக்குவரத்துக் கழக டிரைவர் பஸ்ஸை ஓட்டியதால்தான் விபத்து நேரிட்டதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அண்ணா மேம்பாலத்தில் பஸ்சை விபத்துக்குள்ளாக்கியதாக பஸ் டிரைவர் பிரகாஷ் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து இரண்டு செல்போன்களும் பறிமுதல் செய்யபப்ட்டுள்ளன. சென்னை பாரிமுனையிலிருந்து வடபழனி நோக்கி 17எம் பஸ் நேற்று பிற்பகல்சென்று கொண்டிருந்தது. அண்ணா சாலையில் உள்ள அண்ணா மேம்பாலத்தில் பஸ் போய்க் கொண்டிருந்தபோது...

ஆமா...நான் பாகிஸ்தானுக்கு உளவு பார்க்கத்தான் போனேன்: விடுதலையான சுர்ஜித்சிங் பேட்டி !

அட்டாரி: பாகிஸ்தானுக்கு தாம் உளவு பார்க்கவே சென்றதாக 30ஆண்டுகால சிறைவாசத்துக்குப் பின் நாடு திரும்பிய சுர்ஜித்சிங் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானால் விடுவிக்கப்பட்டு இன்று இந்தியா வந்து சேர்ந்த சுர்ஜித்சிங் அட்டாரியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:30 ஆண்டுகளுக்குப் பிறகு நான் எனது குடும்பத்தினரையும் குழந்தைகளையும் சந்திப்பது மகிழ்ச்சியளிக்கிறது. பாகிஸ்தான் சிறைகளில் இந்திய கைதிகள் நல்ல முறையில் நடத்தப்படுகின்றனர். சரப்ஜித்சிங்கும் கூடநன்றாகத்தான்...

கே.ஜி புத்தகத்தில் இறைத்தூதர் அவர்களை சித்தரித்து வரைபடம் – மணிப்பூர் முஸ்லிம்கள் போராட்டம்

இம்பால்:இறைத்தூதர் முஹம்மத் நபி(ஸல்) அவர்களை சித்தரித்து கே.ஜி புத்தகத்தில் பதியப்பட்டுள்ள கார்ட்டூன் மணிப்பூரில் முஸ்லிம் மக்களிடையே போராட்டத்தை தூண்டக் காரணமாக அமைந்தது.பண்கால் ஸ்டூடன்ஸ் ஆர்கனைசேசன்(PSO) அமைப்பு மற்றும் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவின் மணிப்பூர் பிரிவு இணைந்து போராட்டத்தை நடத்தினர். போராட்டத்தில் அந்த KG புத்தகத்தின் பிரதிகள் எரிக்கப்பட்டன. இம்பாலை மையமாகக் கொண்ட பிரைம் பப்ளிகேசன் திங்கட்கிழமைக்குள் தங்களது அலுவலகத்திற்கு வந்து...

சிரியாவை தாக்கமாட்டோம்: எர்துகான்

இஸ்தான்புல்:துருக்கி விமானத்தை சுட்டு வீழ்த்திய சம்பவத்தில் சிரியா மீது தாக்குதல் நடத்த உத்தேசிக்கவில்லை என்று அந்நாட்டின் பிரதமர் ரஜப் தய்யிப் எர்துகான் தெரிவித்துள்ளார். துருக்கியை தாக்குவதற்கு அரசோ, பொதுமக்களோ விரும்பவில்லை. எந்தவொரு நாட்டின் மீதும் எவ்வித பகைமையும் துருக்கி சமூகத்திற்கு இல்லை.சிரியா வான் எல்லையில்அத்துமீறி பறந்ததாக கூறி துருக்கி விமானத்தை சிரியா ராணுவம் சுட்டு வீழ்த்தியது. இதனைத் தொடர்ந்து எர்துகான், சிரியாவை தாக்க தயங்கமாட்டோம்...

Wednesday, June 27, 2012

எஸ்.டி.பி.ஐ நிர்வாகிகள் மீது கொலை வெறி தாக்குதல்.

 வட சென்னை மாவட்டம் லாலா குண்டா பகுதியில் குடிபோதையில் பெண்களை கேலி செய்து இழிவுபடுத்திய தமுமுக வினரை தட்டிக் கேட்டதால் எஸ்.டி.பி.ஐ யினர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டது. லாலாகுண்டா பகுதியில் உள்ள எஸ்.எம். தெருவில் இரவு நேரங்களில் குடித்துவிட்டு அப்பகுதியில் செல்லும் பெண்களை த.மு.மு.க கும்பல் கேலி செய்து வந்தது. அதே போல் மின் இணைப்பை துண்டித்துவிட்டு அப்பகுதியில் வரும் பெண்களை இடிப்பது, கேலி செய்வது போன்ற ஈன செயல்களிலும் ஈடுபட்டு வந்தனர்....

ஹைதராபாத்தில் பள்ளி செல்வோம் பிரச்சாரம்

ஹைதராபாத்: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக பள்ளி செல்வோம் பிரச்சார நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடைபெற்றது. தேசிய அளவில் பாப்புலர் ஃப்ரண்ட் மேற்கொண்டு வரும் பள்ளி செல்வோம் பிரச்சாரம் நாட்டின் பல பாகங்களிலும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சுமார் 250 குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரை நிகழ்த்திய பாப்புலர் ஃப்ரண்டின் ஆந்திர மாநில தலைவர் முஃப்தி அப்துல்...

பாப்புலர் ஃப்ரண்ட் உருவாக்க இருக்கும் மக்கள் எதிர்ப்பு சக்தி

கோழிக்கோடு: "இறைவன் கேரளாவை பாதுகாத்தான்" என்ற தலைப்பில் ஒரு மாதகாலம் நடைபெற்ற பிரச்சாரத்தின் இறுதியாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா "மக்கள் எதிர்ப்பு சக்தி" என்ற நிகழ்ச்சியை வருகின்ற ஜூன் 29 தளச்சேரி அருகே நடத்த இருக்கின்றது. ஷஹீத் முஹம்மது ஃபஜல் சமீப காலமாக மலையாள பத்திரிகைகளிலும் தொலைக்காட்சி சேனல்களிலும் அதிக அளவில் விவாதிக்கப்பட்ட விஷயம் என்.டி.எஃப் (இன்று பாப்புலர் ஃப்ரண்ட்) உறுப்பினரான சகோதரர் ஃபஜல் அவர்களின் கொலை வழக்கை பற்றித்தான்....

நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி பதவியை ராஜினாமா செய்தார் !

டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வேட்பாளராகப் போட்டியிடும் பிரணாப் முகர்ஜி தமது நிதி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.டெல்லி நார்த் பிளாக்கில் உள்ள நிதி அமைச்சக அலுவலகத்துக்கு மாலையில் சென்ற பிரணாப் முகர்ஜி அதன் பினன்ர் மாலை 4.30 மணிக்கு பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து தமது ராஜினாமா கடிதத்தைக்கொடுத்தார். பிரணாப் முகர்ஜிக்கு காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் நேற்று பிரியாவிடை அளிக்கப்பட்டது. இன்று நிதி அமைச்சர் பொறுப்பை...

பிராத்தல் பண்றவங்ககிட்ட போய் மாமூல் வாங்கி இருக்கியே...பெண் கவுன்சிலரிடம் சீறிய ஜெ !

சென்னை: முதல்வர் ஜெயலலிதா சமீபத்தில் சென்னை மாநகராட்சியின் அதிமுக கவுன்சிலர்கள் அத்தனை பேரையும் கூப்பிட்டு நடத்திய கூட்டத்தில் என்ன நடந்தது என்ற பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் ஒரு பெண் கவுன்சிலரிடம், பிராத்தல் பண்றவங்ககிட்ட போய் மாமூல் வாங்கி இருக்கீங்களே, உலகிலேயே இதை விட பெரிய அசிங்கம் வேறு எதுவும் இல்லை என்று முதல்வர் கடுமையாக சாடியதால் அந்தப் பெண் கவுன்சிலர் வெலவெலத்துப் போய்பதில் பேச முடியாமல் நின்றாராம். சென்னை மாநகராட்சியின் அதிமுக...

தரையில் படுத்த மதுரை ஆதீனம்... தலையேயே காட்டாத நித்தியானந்தா

மதுரை: மதுரை ஆதீன மடத்தில் இன்று போலீஸார் சோதனை நடத்தியபோது தனது அறையை விட்டு நித்தியானந்தா வெளியே வரவே இல்லையாம். அதேபோல மதுரை ஆதீனத்தை போலீஸார் அணுகியபோது தனக்கு உடம்பு சரியில்லை என்று கூறி தரையில் படுத்துக் கொண்டாராம். இருப்பினும் விடாத போலீஸார் அவரை கூப்பிட்டு விசாரணை நடத்தினராம்.மதுரை மாவட்ட இந்து மக்கள் கட்சித் தலைவர் சோலைக்கண்ணன் கொடுத்த புகாரின் பேரில்விளக்குத்தூண் போலீஸார் நித்தியானந்தா, வைஷ்ணவி உள்ளிட்டோர் மீது வழக்குத் தொடர்ந்துள்ளனர்....

மலேசியாவில் மொட்டை அடித்து கொண்ட "டிவி' பெண் வர்ணனையாளர் சஸ்பெண்ட் !

கோலாலம்பூர்:மலேசிய நாட்டு "டிவி' பெண் வர்ணனையாளர் மொட்டை அடித்து கொண்டதால், பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.மலேசியாவின் பிரபல "என்டிவி7' சேனலில் வர்ணனையாளராக, ராஸ் அடிபா முகமது ரட்சி என்பவர் பணிபுரிந்தார். மலேசியாவில் நடந்த புற்றுநோய் ஒழிப்பு பிரசாரத்திற்காக, இவர் தலைமை மொட்டையடித்து கொண்டார். மறுநாள் பணிக்கு மொட்டை தலையுடன் வந்த ராஸ் அடிபாவை,பணி செய்ய"டிவி' நிர்வாகம் மறுத்து விட்டது. நாங்கள் என்ன வழுக்கை தலை நபரையா பணிக்கு வைத்துள்ளோம்....

இராமநாதபுர​ம் காவல்துறையி​ன் சூழ்ச்சி முறியடிப்பு – கைது செய்யப்பட்​ட பாப்புலர் ஃப்ரண்ட் உறுப்பினர்​கள் விடுதலை !

பெரியப்பட்டிணம்:இராமநாதபுரம் மாவட்டம் பெரியப்பட்டிணத்தில் சுய ஒழுக்க பயிற்சி முகாமில் கலந்து கொண்ட பாப்புலர் ஃப்ரண்ட் உறுப்பினர்களை தீவிரவாத கும்பலை பிடிப்பது போல அதிரடியாக கைது செய்து பரபரப்பை ஏற்படுத்திய காவல்துறையின் சூழ்ச்சியை பாப்புலர் ஃப்ரண்ட் உறுப்பினர்கள் முறியடித்தனர். மேலும் கைது செய்யப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.இதுகுறித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயலாளர் காலித் முஹம்மது பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த அறிக்கையில்...