இனி நேட்டோ படையினர் தாக்கினால், மீண்டும் திருப்பி அடி கொடுக்க மேலிடத்து உத்தரவுக்காக காத்திருக்க வேண்டாம் என்று பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி அஸ்பாக் பர்வேஸ் கயானி பாக் ராணுவ படைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நேட்டோ படையினர் சில நாட்களுக்கு முன்பு பாகிஸ்தான் ராணுவத்தின் மீது நடத்திய தாக்குதலில் 24 பாகிஸ்தான் ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இதனால் பாகிஸ்தானில் கொந்தளிப்பு நிலவுகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவ நிலைகளை அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினர் தாக்கினால் திருப்பித் தாக்குமாறு கயானி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ஆப்கானிஸ்தானுடனான எல்லைப் பகுதியில் நிலை கொண்டுள்ள பாகிஸ்தான் ராணுவத்தினரை எதிராளிகள் தாக்கினால், திருப்பித் தாக்கலாம். எதிரி யாராக இருந்தாலும் சரி, என்ன செய்ய வேண்டும் என்று மேலிடத்தின் உத்தரவுக்காக காத்திருக்கத் தேவையில்லை. உங்களிடம் உள்ள அனைத்துப் பலத்தையும் பிரயோகித்து பதிலடி கொடுக்க உங்களுக்கு உரிமை உள்ளது என்றார்.

இவ்வாறு சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாகிஸ்தானில் தற்போது செல்வாக்கு மிக்க இராணுவத் தளிபதியாக கயானி அடையாளம் காணப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
yarlmuslim
0 comments:
Post a Comment