எகிப்தில் இடம்பெற்ற முதல்கட்ட பாராளுமன்ற தேர்தலில் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் அரசியல் கட்சியான சுதந்திரத்திற்கும் நீதிக்குமான கட்சி முன்னிலை பெற்றுள்ளது. எகிப்து பாராளுமன்றத்தின் கீழ் சபைக்கான முதல்கட்ட தேர்தல் முடிவடைந்தது. எகிப்து தலைநகர் கெய்ரோ, அலக்சான்ட்ரிய போன்ற முக்கிய நகரங்களில் இரண்டு நாட்கள் நடைபெற்ற தேர்தலின் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
இதில் தாம் முன்னிலை பெற்றுள்ளதாக முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு அறிவித்துள்ளது. கட்சி அடிப்படையில் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு 40 வீத ஆசனங்கள் முன்னிலையில் இருப்பதாகத் தெரிய வருகிறது. வேட்பாளர்கள் அடிப்படையிலும் அந்தக் கட்சி முன்னிலை பெற்றுள்ளதாகக் கட்சி வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.
எகிப்த்து முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் மக்கள் கிளர்ச்சியின் மூலம் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்ட பின் அங்கு நடைபெறும் முதலாவது தேர்தல் இதுவாகும். இதில் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு ஹொஸ்னி முபாரக் ஆட்சிக் காலத்தில் தடைசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
thanks to yarlmuslim
0 comments:
Post a Comment