பாப்புலர்
பிராண்ட் ஆப் இந்தியாவின் மாநிலத்தலைவர் எ.எஸ். இஸ்மாயில்,மாநிலசெயலாளர் முஹம்மது
இலியாஸ்,மாநிலசெயற்குழு உறுப்பினர் அபூபக்கர் சித்திக் மற்றும் மதுரை மாவட்ட தலைவர் நஸ்ருதீன் ஆகியோர்.
பெரம்பலூர் மாவட்ட வீக்களத்தூர் பகுதியில் முஸ்லிம்கள்
அநீதிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து நேரடியாக அப்பகுதிக்கு சென்று
ஜமாத்தார்களிடம் குறைகளை கேட்டறிந்து அவர்களுக்கு ஆறுதல் கூறியதோடு அவர்களின்
நியாயமான போராட்டத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் உறுதுணையாக இருக்கும் என்பதை
மாநிலத்தலைவர் கூறினார்.
பிறகு திருச்சியில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடத்தி
வருகின்ற 7/03/2௦13 அன்று சென்னையில் மாபெரும் தருணா போராட்டத்தை அறிவித்தார்.
அப்போராட்டத்தில் வீக்களத்தூரில் நீண்ட காலமாக இரண்டு தரப்பினரக்கு மத்தியில்
நடந்து வரும் பிரச்சனையை தமிழக அரசு நேரடியாக தலையிட்டு சுமூகமான நிலைமையை
ஏற்படுத்த வேண்டும். ஒருதலைபட்சமாக நடந்த மாவட்ட நிர்வாகத்தை உடனடியாக
மாற்றவேண்டும் .
அப்பாவி முஸ்லிம்கள் மீது பொய்வழக்கு போட்ட
காவல்காணிப்பாளர் திரு. ராஜசேகரன் மீது நடவடிக்கை எடுத்து பொய்வழக்குகளை வாபஸ்
பெறவேண்டும். போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்படும் என்றார். thanks. asia nanban
0 comments:
Post a Comment