Saturday, December 3, 2011

நஷ்ட ஈடு வழங்கிய கொலைக் குற்றவாளிக்கு மரண தண்டனை ரத்து. சார்ஜா நீதிமன்றம் உத்தரவு.


மரண தண்டனை விதிக்கப்பட்ட இரு இந்தியர்கள், கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்துக்கு நஷ்ட ஈடு (ரத்தப் பணம்) வழங்கியதால் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்ஜாவில் உள்ள சஹாரிய நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை இந்தத் தீர்ப்பை அளித்தது.

ஹைதராபாதைச் சேர்ந்த சின்னகங்கண்ணாவை கொலை செய்த வழக்கில் பஞ்சாபைச் சேர்ந்த தல்வீந்தர் சிங், பரம்ஜீத் சிங் ஆகிய இருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவர்கள் இருவரும் 2009-ம் ஆண்டிலிருந்து சிறையில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் சின்ன கங்கண்ணாவின் குடும்பத்தாருக்கு நஷ்ட ஈடாக ரூ. 8 லட்சம் வழங்கப்பட்டு, அவர்களிடமிருந்து மன்னிப்புக் கடிதமும் பெறப்பட்டு நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது.

பின் அவர்களது மரண தண்டனை ரத்து செய்யப்பட்டு, மூன்று வருடம் சிறைத் தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

அவர்கள் இருவரும் 3 வருட சிறைத் தண்டனையை அனுபவித்து விட்டதால் இன்னும் ஒரு வாரத்துக்குள் விடுதலை செய்யப்படுவர் என ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்திய பஞ்சாப் கூட்டமைப்பின் தலைவரான சிங் ஓபராய் தெரிவித்தார்.

இதற்கு முன் பாகிஸ்தானியரைக் கொன்ற வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 17 பேர் இதே போல் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

as
thedipaar.com

0 comments:

Post a Comment