Saturday, December 31, 2011

சிரியா: பொதுமக்கள் ஊர்வலத்தில் சரமாரியாக சுட்ட ராணுவம். 50 பேர் பலி

சிரியாவில் பஷார் அல்-ஆசாத் ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தற்போது இது கலவரமாக மாறியுள்ளது. இதில் இதுவரை சுமார் 3 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் நேற்று தலைநகர் டமாஸ்கஸ் அருகே சதுக்கத்தில் சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டு போராட்டம் நடத்தினார்கள்.   அப்போது போராட்டத்தில ஈடுபட்ட மக்கள் மீது ராணுவம் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டது. டாங்கிகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இச்சம்பவத்தில் சுமார் 50...

கிரிமினல்கள் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கும் மசோதா தாக்கல். குரேஷி

கிரிமினல்கள் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கும் மசோதா வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படக் கூடும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரேஷி தெரிவித்தார். பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், குளிர்காலக் கூட்டத் தொடரிலேயே தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான மசோதாக்கள் தாக்கல் செய்யப்படாதது வருத்தமளிக்கிறது என்றும் குறிப்பிட்டார். மத்திய அரசு முக்கிய திருத்தம்: கொலை, கொள்ளை, ஆள்கடத்தல், பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட...

சவுதிஅரேபியாவுக்கு ஈரான் அச்சுறுத்தலாம் - அமெரிக்கா போர் விமானங்கள் வழங்குகிறது

சவுதிஅரேபியாவுக்கு அமெரிக்கா போர் விமானங்களை விற்கிறது.   சவுதிஅரேபியாவுக்கு அதன் அண்டை நாடான ஈரான் அச்சுறுத்தலாக உள்ளது. எனவே அது தனது ராணுவ பலத்தை பெருக்கி வருகிறது. அதற்காக தனது நட்பு நாடான அமெரிக்காவிடம் இருந்து ஆயுதங்களை வாங்கி குவிக்கிறது.  இந்த நிலையில் போர் விமானங்களை வாங்குவது குறித்து கடந்த ஆண்டு அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்து இருந்தது. அதன்படி சவுதி அரேபியாவுக்கு 84 போயிங் எப்-15 ரக போர் விமானங்களும், மற்றும் 70 அதிநவீன போர்...

ஆளில்லா ஹெலிகாப்டரை அமெரிக்கா தயாரித்தது

அமெரிக்கா ‘டிரோன்’ என்றழைக்கப்படும் ஆளில்லா தானியங்கி விமானங்களை தயாரித்துள்ளது. அந்த விமானங்கள் மூலம் மறைவிடங்களில் பதுங்கி ஏவுகணை வீசி அழிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நடவடிக்கை பாகிஸ்தானில் மேற்கொள்ளப்பட்டது. கடந்த மாதம் ஆப்கானிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் முகாம் மீது தாக்குதல் நடத்தியதில் 24 வீரர்கள் உயிரிழந்தனர்.  அதைத்தொடர்ந்து ஏற்பட்ட கருத்து வேறு பாட்டினால் அங்கிருந்து அமெரிக்க ராணுவம் வெளியேற்றப்பட்டது.    அதைத்தொடர்ந்து...

அஹமதாபாத் குண்டுவெடிப்பில் முஸ்லிம் இளைஞர் கைது.

புதுடெல்லி: கடந்த 2008ஆம் ஆண்டு அஹமதாபாத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் ஈடுபட்டதாகக் கூறி மெளலானா ஹபீஃப் ஃபலாஹி என்ற 26 வயது முஸ்லிம் இளைஞர் குஜராத் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த புதன்கிழமை அன்று லக்னோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு சிறையில் அடைத்துள்ளனர். வட இந்தியாவை பொருத்தவரை எந்த குண்டுவெடிப்பு வழக்காக இருந்தாலும் ஆஜம்கர் நகரிலிருந்தே பெரும்பாலான அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அவ்வாறே ஆஜம்கர்...

Friday, December 30, 2011

இரண்டாம் உலகப்போர் - ஹிரோஷிமா

THE AFTER PICTURES ARE VISUALLYEXTRAORDINARY HIROSHIMA 64 YRS LATER...Hiroshima, Nagasaki 1945 இரண்டாம் உலகப்போர் அல்லது உலகப்போர் 2 (World War II, அல்லது Second World War) என அறியப்படுகிறது இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் காணப்பட்ட இரண்டு வெவ்வேறுபட்ட அரசியல்,போரியல்முரண்பாடுகளின் சேர்கைக் காரணமாக உலகின் பெரும்பாலான பகுதிகளில் நடைபெற்ற பெரும் போரைக் குறிக்கும். முதல் முரண்பாடானது 1937 ஆம் ஆண்டு ஆசியாவில் இரண்டாம் சீன யப்பானிய போராகவும்...

பல்கலையில் ஜோதிட பாடம் இணைக்கத் திட்டம்: ஆசிரியர் கடும் எதிர்ப்பு!

இந்தியாவில் மதவாத பா.ஜ.கட்சி மத்தியில் ஆட்சி செய்த போது, வரலாற்று பாடத்திட்டங்களை திரிப்பது, மூட பழக்கவழக்கங்கள் மற்றும் பார்ப்பன சடங்கு, சம்பிரதாயங்களை பாடப்புத்தகங்களில் திணிப்பது, சரஸ்வதி வந்தனம் பள்ளிகளில் கட்டாயம் பாடுவது என்பது உள்ளிட்ட பல்வேறு திருத்தங்களை மேற்கொண்டது.இது கல்வித்துறை  இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆரியர்கள் இந்தியாவின் பூர்விக குடிகள் என்று பரப்ப வேண்டும் என்பதற்காக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட இந்திய வரலாறு பாடப்புத்தகத்தை திரும்பி பெற்றது. இந்தப் புத்தகத்தில் ஆரியர்கள் இந்தியாவில்...

ஏழைகளுக்கு கம்பளி போர்வைகளை வழங்கியது பாப்புலர் ஃப்ரண்ட்

குல்பர்கா: கர்நாடக மாநில பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக குல்பர்கா மாவட்டத்தில் ஏழைகள் குளிரில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்வதற்காக கம்பளிப்போரிவைகளை வழங்கியது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தற்போது அதிக அளவில் கவனம் செலுத்து வரும் துறையான சமூக மேம்பாட்டுத்து துறையில் மக்களுக்கான அடிப்படை தேவைகளை நிறைவேற்றி வருகிறது.‌ அதன் அடிப்படையில் கர்நாடகா மாநிலம் குல்பர்கா மாவட்டத்தில் குளிரில் இருந்து தங்களை காத்துக்கொள்வதற்காக கம்பளிப்போர்வையின்றி...

தொகாடியா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாப்புலர் ஃப்ரண்ட்

கோழிக்கோடு: விஷ்வ ஹிந்து பரிஷத்தின் அகில உலக தலைவரான பிரவீன் தொகாடியா மீது மாநில அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேரள பாப்புலர் ஃப்ரண்டின் பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது தெரிவித்துள்ளார். முஸ்லிம் சமூகம் மற்றும் கிறிஸ்தவ சமூகங்களின் ஓட்டுரிமையை பரிக்க வேண்டும். இதன் பிறகு இந்தியாவை ஹிந்து ராஷ்டிராவாக அறிவிக்க வேண்டும் என்ற தொகாடியாவின் பேச்சு மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். இந்திய தேசத்தின் இறையான்மைக்கும் அதன் வளர்ச்சிக்கும் எதிரான...

அமெரிக்காவின் நெருக்கடிகளை வேடிக்கை பார்க்கமாட்டோம் - ஈரான் எச்சரிக்கை

ஈரானின் அணு ஆயுத கொள்கையை அமெரிக்கா எதிர்த்து வருகிறது. எனவே, அந்த நாட்டுக்கு எதிராக பொருளாதார தடை மற்றும் எண்ணை வர்த்தகத்தை தடுக்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.  இதற்கு ஈரான் கடும் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்துள்ளது. இது குறித்து ஈரான் துணை அதிபர் முகமது ரெஷா ரகிமி விடுத்துள்ள எச்சரிக்கையில் கூறியிருப்பதாவது:-    ஈரானுக்கு எதிராக பொருளாதார தடை மற்றும் நெருக்கடியை ஏற்படுத்த அமெரிக்கா தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதற்கான...

வேண்டாத நாடுகளின் தலைவர்களுக்கு அமெரிக்கா புற்றுநோயை பரப்புகிறதா? வெனிசுலா அதிபர்

அமெரிக்கா தனக்கு வேண்டாத நாடுகளின் தலைவர்களுக்கு ரகசியமாக புற்றுநோயைப் பரப்பி வருகிறதா என்று வெனிசுலா அதிபர் சாவேஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.   அமெரிக்காவின் தீவிர எதிர்ப்பாளரான சாவேஸூம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அவர் தவிர பராகுவே அதிபர் பெர்ணான்டோ லுகோ, பிரேசில் அதிபர் டில்மா ரெüசெஃப், அவருக்கு அடுத்த நிலையில் உள்ள லூயிஸ் ஆகியோரும் இந்த ஆண்டில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் ஆர்ஜெண்டீனா அதிபர் கிறிஸ்டினா பெர்ணான்டஸூக்கு தைராய்டு...

எண்ணெய்க் கப்பல்களை ஈரான் மறித்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும். அமெரிக்கா எச்சரிக்கை

ஹோர்முஸ் நீரிணையை மூடப் போவதாக ஈரான் அறிவித்துள்ளதை அமெரிக்கா கடுமையாகக் கண்டித்துள்ளதோடு, இதனால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளது. ஈரானுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை மேலும் விதித்தால் வளைகுடா நாடுகளை இணைக்கும் ஹோர்முஸ் நீரிணையை மூடிவிடுவோம் என ஈரான் சமீபத்தில் அறிவித்திருந்தது. இது குறித்து அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஜார்ஜ் லிட்டில் செய்தியாளர்களிடம் கூறியது: உலகின் கச்சா எண்ணெய் தேவையில்...