உயிருடன் இருந்த தந்தையை இறந்து விட்டதாகப் போலி மரணச் சான்றிதழைச் சமர்ப்பித்து பிரித்தானியா செல்வதற்கான விசாவுக்கு விண்ணபித்துள்ளார். இது தொடர்பில் தெரிய வருவதாவது,
இலங்கையிலிருந்து பிரித்தானியாவுக்கு செல்ல வீசா பெறுவதற்கு போலிச் சான்றிதழ் சமர்ப்பித்த இலங்கையரொருவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் இன்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பிலுள்ள பிரித்தானிய தூதுவராலயம் தெரிவித்துள்ளது.
பிரித்தானியாவில் கடமையாற்றும் தாயுடன் இணைவதற்காக தனது இளைய சகோதரனுடன் குறித்த விண்ணப்பதாரி பிரித்தானிய தூதுவராலயத்தில் விண்ணப்பித்திருக்கிறார். போலியான கல்விச் சான்றிதழ்களை சமர்ப்பித்துள்ள இவர் உயிருடன் உள்ள தந்தையை இறந்ததாக போலி மரண சான்றிதழையும் வழங்கியுள்ளனார்.
மேலும், 18 வயதிற்கு மேற்பட்ட குறித்த விண்ணப்பதாரி போலி பிறப்புச் சான்றிதழ் மூலம் வயது குறைந்தவர் என காட்ட முனைந்துள்ளார். இவை விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளதுடன், குறித்த இருவரின் வீசா நிராகரிக்கப்பட்டதுடன் கைது செய்யப்பட்டவர் 10 வருடங்களுக்கு பிரித்தானியா செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளார்.
பிரித்தானியா குடியகல்வு விதிகளை மீறி போலி ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டாம் என பிரித்தானிய எல்லை முகவர் நிலைய முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
yarlmuslim
0 comments:
Post a Comment