அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் ஆகியோரை விட ஆஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லார்டு அதிக சம்பளம் பெற்று வருகிறார்.
மேலும் எம்.பி.,க்களின் சம்பளத்தையும் உயர்த்த அந்நாடு முடிவு செய்துள்ளது. கில்லார்டின் சம்பளம் 90,000 அமெரிக்க டாலர்களாகும். மேலும் பார்லிமென்ட் உறுப்பினர்களின் சம்பளமும் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உயர்த்தப்பட உள்ளதாக ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது.
பிற ஊக்கத்தொகை ஆகியவைகளும் உயர்த்தப்பட்டுள்ளதால் பிரதமரின் சம்பள தொகை 160 சதவீதம் உயர்ந்து 470,000 டாலர்களாக இருக்கும். இது அமெரிக்க அதிபர் ஒபாமாவின் சம்பள தொகையான 400,000 டாலர்கள் மற்றும் பிரிட்டன் பிரதமர் கேமரூன் சம்பள தொகை 221,000 டாலர்களை விட அதிகமாகும்.
yarlmuslim
0 comments:
Post a Comment