போர் தொடர்பில் பி.பி.சி கேள்வியெழுப்பியமையே அது தடைசெய்யப்பட்டமைக்கான காரணமென அந்நிறுவனம் அறிவித்துள்ளது. பாகிஸ்தானிய கேபல் டி.வி இயக்குநர்கள் தமது சர்வதேச செய்திச் சேவையை தடைசெய்துள்ளதாக பி.பி.சி தெரிவிக்கின்றது.
இரகசிய பாகிஸ்தான் "Secret Pakistan" என்ற பெயரில் பி.பி.சி ஆவணப்படமொன்றினை ஒளிபரப்பியுள்ளது. இதில் பாகிஸ்தான் தீவிரவாதத்திற்கு எதிராக உண்மையாக போராடுகின்றதா எனக் கேள்வியும் எழுப்பியுள்ளது.
மேலும் பாகிஸ்தான் இரட்டை வேடம் பூண்டுள்ளதாகவும் தீவிரவாதத்திற்கு எதிராக செயற்படுவது போல காட்டிக்கொண்டாலும் மறுபக்கத்தில் தலிபான்களுக்கு பயிற்சி அளிப்பதுடன், ஆயுதங்களையும் வழங்கிவருவதாக அமெரிக்க புலனாய்வுப்பிரிவினரை மேற்கோள்காட்டி அவ் ஆவணப்படத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான செய்திகளை வெளியிடும் எந்தவொரு ஊடகத்தினையும் தடைசெய்யவுள்ளதாக அந்நாட்டு 'கேபல் டி.வி இயக்குநர்களின் சங்கத்தலைவர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் மற்றும் மேற்குலகு நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர உறவு ஒசாமா கொல்லப்பட்டதன் பின்னர் பெரிதும் பாதிக்கப்பட்டது.
yarlmuslim
0 comments:
Post a Comment