முஸ்லிம் சமூகத்தின் வரலாற்றில் நவம்பர் 27, 2011 ஆம் தேதி பொன் எழுத்துக்களால் பதியப்படவேண்டிய நாள். புதுடெல்லி புகழ்பெற்ற ராம்லீலா மைதானத்தில் 27ஆம் தேதி குவிந்த மக்கள் வெள்ளம் ஆதிக்க சக்திகள் மற்றும் வகுப்புவாத சக்திகளின் முடிவு நாள் நெருங்கிக்கொண்டே வருவதை உணர்த்துவதாக அமைந்தது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய “சமூக நீதி மாநாடு” என்ற நிகழ்ச்சிதான் வட இந்தியாவில் அதுவும் ராம்லீலா மைதானத்தில் முஸ்லிம்களால் நடத்தப்பட்ட மிகப்பெரும் நிகழ்ச்சி என்ற செய்தி வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இன்றைய காலகட்டத்தில் முஸ்லிம் சமூகத்தின் நிலை நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டே செல்கிறது. தென் இந்தியாவைக் காட்டிலும் வட இந்தியாவில் வாழும் முஸ்லிம்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகவே உள்ளது. பொருளாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு போன்ற எல்லாதுறைகளிலும் பின் தங்கியே இருக்கும் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக மிகப்பெரும் சவாலாக இருப்பது அரச பயங்கரவாதமும், வகுப்புவாத சக்திகளுமேயாகும்.
ராஜஸ்தான், பீஹார், அஸ்ஸாம், உத்திரபிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்களில் வாழும் முஸ்லிம்களின் நிலை கொடுமையானது. நித்தம் நித்தம் கல்வரம், பல்லாயிரக்கணக்கான அப்பாவி முஸ்லிம்கள் கொடூரமான முறையில் எரித்து கொலை செய்யப்படுவதும், முஸ்லிம் பெண்கள் வயது வித்யாசமின்றி பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுவதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்தியாவில் நடைபெற்ற பெரும்பாலான குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியது சங்கப்பரிவார இந்துத்துவ வெறியர்கள் தான் என்று தெளிவாக தெரிந்திருந்த பின்னரும் ஒவ்வொரு குண்டு வெடிப்பின் போதும் முஸ்லிம்களே குறிவைக்கப்படுகிறார்கள். எத்துனையோ முஸ்லிம் இளைஞர்கள் போலி எண்கவுண்டர் மூலம் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்கள். இப்படி எல்லா துறைகளிலும் பின் தங்கிய முஸ்லிம் சமூகத்திற்கு கல்வி, பொருளாதாரம், வேலை வாய்ப்பு போன்றவற்றில் சதவீதத்திற்கு ஈடாக இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட கமிஷன்கள் பரிந்துரை செய்தும் செவிடன் காதில் ஊதிய சங்கு என்பது போலவே அரசாங்கங்கள் செயல்பட்டுவருகிறது. முஸ்லிம் சமூகத்தின் வலிமைக்காவும், அதன் முன்னேற்றத்திற்காகவும் ஒரு வலுவான இயக்கம் இல்லாதது இந்திய முஸ்லிம்களிடத்தில் மிகப்பெரும் குறையாகவே இருந்தது.
முஸ்லிம்களை கூண்டோடு ஒழிக்க வேண்டும் என்ற கிரிமினல் அஜண்டாவைக் கொண்ட சங்கப்பரிவாரங்கள் நாடு முழுவதும் பரவிக்கொண்டு நாச வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்க முஸ்லிம்களோ சிறு சிறு குழுக்களாக, ஒரு குறிப்பிட்ட வட்டதிற்குள்ளேயே சுற்றித்திரிந்து கொண்டு சக்திகளை வீணடித்துக்கொண்டார்கள். அதிலிருந்து விதிவிலக்காக ஒரு சில இயக்கங்கள் தேசிய தேசிய அளவிலான இயக்கம் என்ற சாயத்துடன் வலம்வந்தாலும் வெறும் பெயரளவில் தானே தேசியம் இருந்ததே தவிற செயல்பாடுகளில் ஒன்றுமில்லாமல் போனது. முஸ்லிம்களின் வலிமைக்காக ஒரு பிரம்மாண்ட தேசிய இயக்கம் உருவாக வேண்டிய இடம் வெற்றிடமாகவே இருந்து வந்தது. அப்பேற்பட்ட ஒரு கூட்டத்திற்காக முஸ்லிம் சமூகம் காத்துக்கொண்டிருந்தது.
இந்தியாவில் செயல்படுகின்ற எந்த தேசிய அமைப்பாக இருக்கட்டும், அவை அனைத்துமே வடக்கிலிருந்து தொடங்கி தெற்கு நோக்கி வந்திருக்கிறது. இதனாலேயே பாதிக்கப்பட்ட ஒவ்வொரு முஸ்லிம்களும் அப்பேற்பட்ட ஒரு இயக்கம் உருவாகாதா? என்ற ஏக்கத்துடன் வட இந்திய மாநிலங்களை நோக்கிக் கொண்டிருந்தார்கள்.. ஆனால் இறைவனுடைய நாட்டமோ வேறு விதமாக இருந்தது.
1989ஆம் ஆண்டு கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள ஒரு சிறு கிராமத்தில் சமூக சிந்தனை கொண்ட சில இளைஞர்கள் ஒன்று திரண்டு முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பிற்காக நாம் பாடுபடவேண்டும் என்று முடிவெடுத்தனர்.
அப்போது அவர்களது மனதில் ஒரு இயக்கத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணமெல்லாம் இருக்கவில்லை. முஸ்லிம் சமூகத்தின் கண்ணியம், முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பு இந்த இரண்டுமே அவர்களுக்கு பெரிதாக தோன்றியது.
கேட்க நாதியில்லாமல் கொடூரங்களுக்கு ஆளாக்கப்பட்டு கொண்டிருக்கும் முஸ்லிம் சமூகத்திற்காக நாம் பணியாற்ற வேண்டுமெனில் அதற்காக கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும், இன்னும் கூறவேண்டுமென்றால் உயிரையே கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுமே? என்று தெரிந்திருந்தும் அந்த இளைஞர்கள் தங்களுக்குள் சபதம் எடுத்துக்கொண்டார்கள். அவர்களுடைய குழுவில் கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் சேர ஆரம்பித்தார்கள். நாளடைவில் அந்தக்குழு பரிணாமம் பெற்று “நேஷனல் டெவலப்மெண்ட் ஃப்ரண்ட் (என்.டி.எஃப்)” ஆக மாறியது. வியாபார நோக்கத்திற்காக கேரள சென்று வந்த ஒரு தமிழக சகோதரருக்கும் அவர்களுக்கும் தொடர்பு ஏற்பட்டு அவரும் அந்த கொள்கையினால் ஈர்க்கப்பட்டு தமிழகத்திலும் இந்த கொள்கைகள் நடைமுறைப்படுத்த எண்ணி பணியாற்றியதன் விளைவாக தமிழகத்தில் “மனித நீதி பாசறை (எம்.என்.பி)” உறுவானது. இதே லட்சிய வேட்கை கர்நாடக மாநிலத்திலும் வரவேற்பை பெற “கர்நாடகா ஃபாரம் ஃபார் டிகினிடி (கே.எஃப்.டி)” உருவானது.
ஒருவருக்கொருவர் கருத்து வேறுபாடு கொண்டோ, குற்றம் சுமத்திக்கொண்டோ இன்னொரு இயக்கத்திலிருந்து விலகி தனியாக தோன்றிய இயக்கமோ அல்லது ஒரு தனிமனிதனால் ஒரே இரவில் முடிவு செய்து தொடங்கப்பட்ட இயக்கமோ அல்ல என்பதை நன்கு விளங்கிக்கொள்ளவேண்டும்.
இம்மூன்று இயக்கங்களும் தென் இந்தியாவில் நன்கு அடித்தளமிட்டு சமூகப்பணிகளை ஆற்றிய போது. தென் இந்தியாவில் தலை தூக்க எண்ணிக்கொண்டிருந்த ஃபாசிஸ சக்திகளுக்கு பேரிடியாய் ஆனது. இம்மூன்று இயக்கங்களின் தலைவர்கள் ஒன்றினைந்து முடிவெடுத்து “பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா” என்ற ஒற்றை குடையின் கீழ் அணிவகுத்தனர். இது தென் இந்தியாவில் மட்டும் அடக்கி வைக்கவேண்டிய ஒரு சக்தி அல்ல, மாறாக வடக்கை நோக்கி பயணிக்க வேண்டிய ஒன்று என்ற அடிப்படையில் தேசத்தின் வடக்கும், மேற்கு, கிழக்கு என நான்கு திசைகளிலும் வேகமாக பரவி இன்று இறையருளால் ஒரு தேசிய இயக்கமாக வலுப்பெற்று செயலாற்றிக்கொண்டிருக்கிறது. கடந்த 2010 பிப்ரவரி தமிழக்த்தின் மதுரையில் “சமூக எழுச்சி மாநாட்டை” பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தியது. அப்போது அதில் பாப்புலர் ஃப்ரண்டின் அன்றைய தமிழக தலைவர் முஹம்மது அலி ஜின்னா கூறும்போது
“ஓ ஃபாசிஸ சங்கப்பரிவார கூட்டங்களே! ஹிந்துராஷ்டிரா என்ற உங்களது கிரிமினல் அஜண்டாவை ஒழிக்க இதோ உங்கள் மார்பிடத்தை நோக்கி வருகிறோம்!
என்று முழங்கினார். இன்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்கின்ற இந்த நதி சந்தோஷ செய்தியாக வடக்கு நோக்கி வேகமாக பாய்ந்து வருகிறது.
வலிமையான முஸ்லிம் சமூகத்தை உருவாக்குவதே பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் லட்சியமாகும். இன்றைய காலச்சுழ்நிலையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவிற்கு மட்டுமே அந்த ஆற்றல் இருக்கிறது என்பதை நம்மால் உரக்க கூற முடியும். காரணம் டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா, மஹாராஷ்டிரா, கோவா, ராஜஸ்தான், மணிப்பூர், உத்திர பிரதேசம், டெல்லி, மேற்கு வங்காளம், ஹரியானா, பீஹார் என 20ற்கும் மேற்பட்ட மாநிலங்களிலிருந்து மக்கள் அலைஅலையாய் சங்கமித்தனர். இன்றைக்கு கருத்து வேறுபாடு கொண்டு பிரிந்து இருக்கின்ற முஸ்லிம் சமூகம் மத்தியில் வெவ்வேறு மொழி பேசக்கூடிய பல்லாயிரக்கணக்கான மக்களை இன்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஒன்று திரட்டியுள்ளது. சுதந்திரம், நீதி, பாதுகாப்பு என்பது அனைத்து மக்களுக்கும் கிடைக்கவேண்டும் என்ற அடிப்படையில் புதிய பாதையில் புதிய இந்தியாவை உருவாக்க பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா புறப்பட்டுவிட்டது.
சமூக நீதியிலிருந்து புறக்கணிக்கப்பட்ட சமூகமாய் இருக்கும் முஸ்லிம் சமூகத்திற்கு சமூக நீதியை பெற்றுத்தருவதற்காக தலைநகர் டெல்லியில் மாபெரும் மாநாட்டை நடத்தியது. மாநாட்டை நடத்திவிட்டால் போதும் நம்மை நோக்கி சமூக நீதி தேடி வரும் என்று அமர்ந்துவிடுபவர்கள் அல்ல மாறாக நீதியை பெறுவதற்கான போராட்ட களத்திற்கு மக்களை தயார்படுத்தும் பணிகளில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தொடர்ந்து செயல்படும். எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே!
ஆக்கம்: முத்து
0 comments:
Post a Comment