Friday, December 9, 2011

ஊழல் வழக்கில் அமெரிக்க முன்னாள் ஆளுநருக்கு 14 ஆண்டுகள் சிறை.


அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் ராட் பிளாகோஜெவிசுக்கு, ஊழல் வழக்கில் 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

 இந்த வழக்கை விசாரித்த சிகாகோ நீதிமன்றம், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 16-ம் தேதி அவர் சிறை செல்ல வேண்டும் என்று புதன்கிழமை உத்தரவிட்டது.

 ஊழல் வழக்கில் தண்டனை அளிக்கப்பட்டுள்ள இரண்டாவது அமெரிக்க ஆளுநர் இவர். இதற்கு முன்பாக ஜார்ஜ் ரியான் என்ற ஆளுநருக்கு ஆறரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

 ஆளுநராக இருந்தபோது ஊழல் செய்ததாக பிளாகோஜெவிச் மீது 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வகித்த செனட் பதவியை ஏலம் விட்டு அதை பிரசார செலவுக்கும், சொந்த நலனுக்கும் பயன்படுத்த முயற்சித்தார் என்று அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

 இவருடன் ராஜிந்தர் பேடி, ரகுவீர் நாயக் ஆகிய அமெரிக்க இந்திய வர்த்தகர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
 thedipaar.com
as

0 comments:

Post a Comment