டில்லியில், நேற்று நடந்த ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையின் நிகழ்ச்சி ஒன்றில், வீடியோ கான்பரன்ஸ் மூலம், லண்டனில் இருந்து விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் பேசினார். அவர் கூறியதாவது: வெளிநாடுகளில், இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கறுப்புப்பணம் பற்றிய தகவல்கள், அவர்களின் வங்கிக் கணக்குகளுடன், அடுத்தாண்டு வெளியிடப்படும்.
சி.பி.ஐ., மின்னஞ்சல்களில் இருந்து, சீன உளவுத் துறை தகவல்களைத் திருடியதற்கு, என்னிடம் ஆதாரங்கள் உள்ளன. இந்தியாவின் தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் தொடர்புகளை, மேற்கத்திய நாடுகள் ஒட்டுக் கேட்டு வருகின்றன. அதனால், இந்தியா, பாதுகாப்பான தகவல் தொடர்பை கையாள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது, என்றார்.
as
thedipaar.com
0 comments:
Post a Comment