Sunday, December 4, 2011

நெட் சாட்டிங் செய்து கொண்டிருந்த இங்கிலாந்து தொழிலதிபர் திடீர் தற்கொலை.


வர்த்தக விஷயமாக இந்தியா சென்ற  இங்கிலாந்துகாரர் தன்னை தானே கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார். அந்த கொடூர காட்சியை லண்டனில் இருந்த அவரது தோழி இன்டர்நெட் மூலம் பார்த்து அதிர்ச்சி அடைந்த தகவல் வெளியாகி உள்ளது. இங்கிலாந்தின் பெர்க்ஷைரில் உள்ள உட்லே பகுதியில் வசித்தவர் அட்ரியன் ரோலேண்ட். வயது 53. இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
உட்லேவில் உள்ள இன்ஜினியரிங் கம்பெனியில் பணியாற்றினார். வர்த்தக விஷயமாக இந்தியா சென்றார். அதே நிறுவனத்தில் ஜூலி ஜலின்ஸ்கி என்பவரும் பணியாற்றுகிறார். இருவரும் நெருங்கி பழகி வந்தனர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு இந்தியாவில் உள்ள அட்ரியனுடன் இன்டர்நெட்டில் சாட் செய்து கொண்டிருந்தார் ஜூலி. திடீரென அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் இருவரும் சேர்ந்து வாழ்வது குறித்து இருவரும் இன்டர்நெட் மூலம் சாட்டிங் செய்து கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த அட்ரியன் கத்தியை எடுத்து திடீரென தனது கழுத்தை தானே அறுத்துக் கொண்டார். ரத்தம் பீறிட்டு வெளியேற துடிதுடித்து அவர் இறந்தார். இந்த காட்சிகளை வெப் கேமரா மூலம் ஜூலி பார்த்து அலறினார்.
உடனடியாக இங்கிலாந்தின் அவசர உதவி எண் 999க்கும் உள்ளூர் போலீசுக்கும் தகவல் தெரிவித்தார். அவர்கள் உடனடியாக தூதரக அதிகாரிகள் மூலம் இந்திய அதிகாரிகளை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால், அட்ரியன் இந்தியாவில் எங்கு தங்கியுள்ளார் என்ற விவரம் தெரியவில்லை. அட்ரியன் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து சடலத்தை இங்கிலாந்து கொண்டு வரும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த தகவல் வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 thedipaar.com

0 comments:

Post a Comment