Saturday, April 30, 2011

உலகின் மிக நீளமான பேருந்து !

பிரேசிலில் தாவர எண்ணெய் மூலம் ஓடும் உலகின் மிக நீளமான பேருந்து தனது பயணத்தை தொடங்கியது. பிரேசிலில் பிரபல நிறுவனம் பி.ஆர்.டி என்ற உலகின் நீளமான பேருந்து ஒன்றை தயாரித்துள்ளது. 28 மீற்றர் நீளமுள்ள அந்த பேருந்தில் 250 பேர் பயணிக்கலாம். இயற்கை எரிபொருளான தாவர எண்ணெயில் இயங்குகிறது என்பது தான் அதன் தனிச் சிறப்பு. தற்போது இந்த பேருந்தின் சேவை குருடிபா நகரில் தொடங்கப்பட்டு உள்ளது. நாள் ஒன்றுக்கு சராசரியாக 25,000 பயணிகள் 10 கிலோ மீற்றர் தொலைவுக்கு பயணம்...

தனது பிறப்புச் சான்றிதழை வெளியிட்டார் ஒபாமா.

வாஷிங்டன் - அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒபாமா, அமெரிக்காவில் பிறந்தவரல்ல என்றும் வெளிநாட்டில் பிறந்த ஒருவர் அமெரிக்காவின் முறையான அதிபராக இருக்க முடியாது என்ற சர்ச்சையை எதிர்க்கட்சிகள் கிளப்பின. இருப்பினும் தாம் அமெரிக்க மாநிலத்தில் தான் பிறந்ததாக ஒபாமா விளக்கமளித்தார். எனினும் அந்த சர்ச்சை ஒயாத நிலையில் தனது பிறப்புச் சான்றிதழை  வெள்ளை மாளிகை இணையத் தளத்தில் ஒபாமா நேற்று வெளியிட்டார்.அமெரிக்காவின் ஹாவாய் மாநிலம், ஹானோலுலு என்ற...

உணவில் காரத்தை குறைத்தால் எடை குறையும்

உணவில் சிவப்பு மிளகாய் தூளை மிதமாக சேர்த்துக் கொண்டால் பசி குறைந்து உணவின் அளவும் குறையும். அதன் மூலம் உடல் எடையைக் குறைக்கலாம் என்று இங்கிலாந்தில் நடைபெற்ற ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. பசி ஏற்பட்டால் அளவுக்கு அதிகமான அளவு உணவு சாப்பிடுவது வழக்கம். அதனால் உடல் எடை அதிகரித்து பல்வேறு நோய்கள் வந்து சேரும். பொதுவாக சதை போட விரும்பும் ஒல்லியானவர்கள் உணவுக்கு முன் பசியைத் தூண்டும் பானங்களை குடிப்பதுண்டு. அதற்கு நேர்மாறாக உடல் பருமனாக இருப்பவர்கள் உணவின்...

Thursday, April 28, 2011

சிறப்பாக நடந்து முடிந்த(AFFC) கிரிக்கெட் தொடர்ப் போட்டி...

அதிரையில் இன்று (28-04-2010 ) நடந்து முடிந்த கிரிக்கெட் தொடர் போட்டியின் இறுதி ஆட்டத்தில் (AFFC)அதிரை பிரெண்ட்ஸ் கிரிக்கெட் அணியும் (KCC) கறம்பக்குடி அணியும் இறுதி ஆட்டத்தில் மோதின அதில் (AFFC)அதிரை பிரெண்ட்ஸ் கிரிக்கெட் அணி ரூபாய்12000 பரிசை தட்டிச்சென்றது, இரண்டாம் பரிசு 10000 த்தை கறம்பக்குடிஅணி தட்டிச்சென்றது முன்றாம் பரிசு ரூபாய் 8000 த்தை அதிரை WCC மேலத்தெரு அணி தட்டிச்சென்றது. இந்த தொடர் போட்டியில் சுமார் 46 அணிகள் பங்கு பெற்றது என்பது&nb...

யெமன் நாட்டில் சட்டத்தை மீறும் பிரச்சாரம் துவங்கியது

28 Apr 2011ஸன்ஆ:அதிபர் அலி அப்துல்லாஹ் ஸாலிஹ் பதவி விலகக்கோரி 2 மாதங்களை தாண்டியுள்ள மக்கள் எழுச்சிப் போராட்டம் புதிய வழிமுறைகளை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது.இதன் ஒரு பகுதியாக சட்டத்தை மீறும் போராட்டத்தை நேற்று எதிர்ப்பாளர்கள் துவக்கியுள்ளனர்.இப்போராட்டத்தில் 18 நகரங்கள் பங்கேற்கும் என எதிர்கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.இப்பிரதேசங்களில் கடைகள் திறக்கவில்லை. பள்ளிக்கூடங்களும், அரசு அலுவலகங்களும் மூடப்பட்டன. இரண்டுவாரம் நீண்ட போராட்டமாக இது...

ஆப்கானில் எட்டு நேட்டோ படையினரை சுட்டுக்கொன்ற பைலட்

28 Apr 2011காபூல்:ஆப்கானிஸ்தானில் காபூல் விமானநிலையத்தில் வைத்து எட்டு நேட்டோ படையினரை ஆப்கானிஸ்தானைச் சார்ந்த பைலட் ஒருவர் சுட்டுக் கொன்றுள்ளார்.நேட்டோ படையினருடன் ஏற்பட்ட வாய் தகராறில் ஆப்கான் பைலட் துப்பாக்கியால் சுட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. இதில் ஒரு காண்ட்ராக்டரும் கொல்லப்பட்டார். உள்ளூர் நேரம் 11 மணிக்கு இச்சம்பவம் நிகழ்ந்ததாக அமைச்சக செய்தித் தொடர்பாளர் முஹம்மது ஸாஹிர் ஆஸ்மி தெரிவிக்கிறார். மேலும் விபரங்களை அவர் தெரிவிக்கவில்லை.ஆனால்,...

எண்டோஸல்ஃபான்:தடை செய்யக்கோரி எஸ்.டி.பி.ஐ டெல்லியில் தர்ணா

28 Apr 2011புதுடெல்லி:எண்டோ ஸல்ஃபான் பூச்சிக்கொல்லி மருந்தை நாடு முழுவதும் தடைச் செய்யக்கோரி சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா கட்சியின் டெல்லி பிரிவு சார்பாக ஜந்தமந்தரில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.கேரளாவிலும்,கர்நாடகா மாநிலத்திலும் தடை செய்யப்பட்டுள்ள எண்டோஸல்ஃபான் பூச்சிக்கொல்லி மருந்தை நாடு முழுவதும் தடை செய்வதற்கு பதிலாக தடை எதிர்க்கும் நிலைப்பாட்டை அரசு மேற்கொள்வதாக போராட்டத்தில் கலந்து கொண்டோர் குற்றஞ்சாட்டினர்.எண்டோஸல்ஃபான் குறித்து...

ஹைதராபாத்தில் கேம்பஸ் ஃப்ரண்டின் தேசிய பிரதிநிதிகள் மாநாடு

28 Apr 2011கோழிக்கோடு:கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற மாணவர் இயக்கத்தின் தேசிய பிரதிநிதிகள் மாநாடு மே மாதம் முதல் தேதியில் ஹைதராபாத்தில் வைத்து நடைபெறும் என அவ்வமைப்பின் தேசிய பொதுச்செயலாளர் அனீஸுர்ரஹ்மான் பத்திரிகைச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.ஹைதராபாத் நாரோ ஆடிட்டோரியத்தில் நடைபெறும் மாநாட்டில் புதிய தேசிய நிர்வாகிகள் தேர்வுச் செய்யப்படுவர். கடந்த ஒன்றரை ஆண்டிற்கு முன்னால் இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த மாணவர் அமைப்புகள் ஒன்றிணைந்து...

யானை வரலாறு சுருக்கம்

நபியே!) யானை(ப் படை)க் காரர்களை உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?அவர்களுடைய சூழ்ச்சியை அவன் பாழாக்கி விடவில்லையா?மேலும், அவர்கள் மீது பறவைகளைக் கூட்டங் கூட்டமாக அவன் அனுப்பினான்.சுடப்பட்ட சிறு கற்களை அவர்கள் மீது அவை எறிந்தன.அதனால், அவர்களை மென்று தின்னப்பட்ட வைக்கோலைப் போல் அவன் ஆக்கி விட்டான்.அத்தியாயம் - 105 அபீஸீனிய நாட்டு மன்னர் நஜ்ஜாஷியின் பிரதிநிதியாக யமனில் ஆட்சி செய்த அப்ரஹா என்பவன், அரேபியர்கள் மக்காவிலுள்ள கஃபதுல்லாஹ்வை ஹஜ் செய்வதையும் அதனை அவர்கள் புனிதப்படுத்துவதையும், மிகவும் தூரமான பகுதிகளிலிருந்தெல்லாம் அங்கு...

ஷைத்தானுடன் ஒரு உரையாடல்

ஒரு நாள் இரவு நான் ஆழ்ந்த நித்திரையில் இருக்கும் பொழுது பஜ்ர் தொழுகைக்கான பாங்கொலி கேட்டது. பள்ளிக்குச் சென்று ஜமாத்தோடு தொழ வேண்டும் என்ற எண்ணத்தில் எழ முற்பட்டேன். அப்பொழுது ஷைத்தான் அங்கு வந்தவனாக 'விடிவதற்கு இன்னும் நேரம் இருக்கிறது. ஒரு குட்டித்தூக்கம் போடு' என்றான். 'தூங்கினால் ஜமாத்தோடு தொழமுடியாமல் போய்விடுமே' என்றேன். அதற்கு ஷைத்தான் 'நான் அதை மறுக்கவில்லை. பகல் முழுவதும் நீ வெயிலில் கஷ்டப்பட்டு உழைத்து களைத்துப் போய் இருக்கிறாய். இந்த இமாமிற்கு என்ன வேலை? நிழலில், பள்ளியின் உள்ளே அமர்ந்து கொண்டு எந்த வேலையும் செய்யாமல் இருக்கிறார். தொழ...

இறுதி நபியின்... இறுதி பயணம்...

1.மாண்பு நபியின் மரண அறிகுறி! நபி (ஸல்) அவர்கள் இஸ்லாமிய பிரச்சாரத்தை பரிபூரணப்படுத்தி இஸ்லாம் பல பகுதிகளுக்கும் பரவியபோது நபியவர்களின் ,செயல்களிலிருந்து அவர்களின் மரணத்திற்கான அடையாளங்கள் தென்பட ஆரம்பித்து விட்டன. 1. ஹிஜ்ரி 10ஆம் ஆண்டு ரமழான் மாதத்தில் 20 நாட்கள் நபியவர்கள் இஃதிகாஃப் இருந்தார்கள். 2. இவ்வாண்டு ரமழான் மாதத்தில் இரண்டு முறை ஜிப்ரயீல் (அலை) அவர்கள் நபியவர்களுக்கு குர்ஆனை ஓதிக்காட்டினார்கள். 3. நபியவர்கள் கடைசி ஹஜ்ஜின் போது கூறினார்கள். இந்த வருடத்திற்குப்பிறகு இவ்விடத்தில் இனிமேல் உங்களை நான் சந்திக்காமல் இருக்கலாம். 4....

அதிபருக்கு எதிர்ப்பு வலுக்கிறது; சிரியா கலவரத்தில் 400 பேர் பலிs

டமாஸ்கஸ், ஏப். 28 சிரியாவில் அதிபர் பாஷார்-அல் ஆசாத்துக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதனால் போராட்டம் வலுவடைந்து வருகிறது. போராட்டத்தை அடக்க பொதுமக்கள் மீது ராணுவம் ஏவி விடப்பட்டுள்ளது. அவர்கள் போராட்டத்தில் ஈடுபடும் பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி வருகின்றனர்.இருந்தும் போராட்டம் குறைந்த பாடில்லை. டாரா, டமாஸ்கஸ், தவுமா உள்ளிட்ட அனைத்து நகரங்களுக்கும் போராட்டம் பரவியுள்ளது....

Wednesday, April 27, 2011

3 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா ஃபெடர்னிடி ஃபாரத்தின் உதவியால் விடுதலையான சுலைமான்

27 Apr 2011 தாயிஃப்:சுலைமான்(53) கர்நாடகா மாநிலம் மங்களூரைச் சார்ந்தவர். சவூதி அரேபியாவின் தாயிஃப் நகரில் ஓட்டுநராக பனியாற்றி வந்த சுலைமானுக்கு அன்றைய தினம் மறக்கமுடியாததாக மாறிவிட்டது.2008 ஆம் ஆண்டு தாயிஃபிலிருந்து ரியாதிற்கு ட்ரக்கை ஓட்டிச் சென்றுக் கொண்டிருந்தார் அவர். எதிர்பாராதவிதமாக அவருடைய ட்ரக் மீது ஸுலும் சாலையில் வைத்து கார் ஒன்று மோதியது. இந்த விபத்தில் கார் நசுங்கிப் போனது. அக்காரிலிருந்த 6 பேரும் இறந்து போயினர். இவ்விபத்துச் சம்பவத்தில்...

மோடி மீது சட்டநடவடிக்கை மேற்கொள்ள பாப்புலர் ப்ரண்ட் வலியுறுத்தல்

27 Apr 2011 புதுடெல்லி:குஜராத் இனப்படுகொலையில் அம்மாநில முதல்வர் நரேந்திரமோடியின் பங்கினை உறுதிப்படுத்தும் கூடுதல் ஆதாரங்கள் வெளியான சூழலில் அவர் மீது சட்டநடவடிக்கை மேற்கொள்ள பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா வலியுறுத்தியுள்ளது.சங்க்பரிவார சக்திகள் சிறுபான்மையினருக்கெதிராக திட்டமிட்டு நடத்தியதுதான் குஜராத் இனப்படுகொலை எனவும், ஹிந்துத்துவ சக்திகள் கோரத்தாண்டவம் ஆட மோடி போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் எனவும் மூத்த போலீஸ் அதிகாரி சஞ்சீவ் பட் உச்ச நீதிமன்றத்தில்...

யார் இந்த ஹசன் அல் பன்னா? ஒரு பார்வை .

...

சுவிஸ் வங்கி கணக்கு; இந்தியர்களின் பெயர் விரைவில் வெளியீடு: விக்கிலீக்ஸ் நிறுவனர்

சுவிஸ் வங்கிகளில் கறுப்புப் பணத்தை முதலீடு செய்துள்ள இந்தியர்களின் பெயர்கள் விரைவில் வெளியிடப்படும் என்று விக்கிலீக்ஸ் இணையதளத்தின் நிறுவனர் ஜுலியன் அசாஞ்ஜே கூறியுள்ளார். இந்தியாவைச் சேர்ந்த ஆங்கிலத் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் நேற்று அளித்துள்ள பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார். சுவிஸ் வங்கிகளில் கறுப்புப் பணத்தை ரகசியமாக முதலீடு செய்துள்ளவர்களின் பட்டியலில் இந்தியர்களின் பெயர்களையும் கண்டேன். விரைவில் அந்த பட்டியலை இணையதளத்தில்...