பஹ்ரைன் நாட்டின் தலைநகர் மனாமாவிலுள்ள இங்கிலாந்து தூதரகம் அருகே "ஞாயிற்றுக்கிழமை குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.
ராஸ் ரம்மான் பகுதியில் உள்ள இங்கிலாந்து நாட்டுத் தூதரகம் அருகே நிறுத்தப்பட்டிருந்த பஸ் ஒன்றின் முன்புறத்தில் வைக்கப்பட்டிருந்த இந்த குண்டு வெடித்ததாகத் தெரிவித்த அந்நாட்டு உள்துறை அமைச்சகம், உயிர்ச்சேதம் எதுவும் ஏற்பட்டதா என்பது குறித்துத் தகவல் ஏதும் தெரிவிக்கவில்லை.
இச்சம்பவம் குறித்துத் தெரிவித்த இங்கிலாந்து தூதரக செய்தித் தொடர்பாளர் ஒருவர், குண்டு வெடிப்பு தங்கள் தூதரகத்தை குறிவைத்து நடத்தப்பட்டதா என்பது தெரியவில்லை என்றார்.
as
thedipaar.com
0 comments:
Post a Comment