Friday, May 6, 2011

50 ஆண்டுகளில் இந்திய மக்கள் தொகை 170 கோடியாகும்!


Population

நியூயார்க்: இந்த நூற்றாண்டின் இறுதியில் இந்திய மக்கள் தொகை சீனாவை விட இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

உலக மக்கள் தொகை பற்றிய ஆய்வறிக்கையை ஐ.நா சபை வெளியிட்டுள்ளது. அதில்,

இந்தியாவின் மக்கள் தொகை அடுத்த 50 ஆண்டுகளில், அதாவது 2060ம் ஆண்டு 171 கோடியைத் தாண்டும். அதன் பின்னர் மக்கள் தொகை விகிதம் படிப்படியாக குறைய வாய்ப்புள்ளது.

2025ம் ஆண்டில் சீனாவின் மக்கள் தொகை 139 கோடியைத் தொடும். அப்போது இந்திய மக்கள் தொகை சீனாவைவிட மிக அதிகமாக இருக்கும். 2025ம் ஆண்டு முதல் சீன மக்கள் தொகை குறைய ஆரம்பிக்கும். ஆனால், அதற்கு 35 ஆண்டுக்குப் பின்னர் தான் இந்திய மக்கள் தொகை குறைய ஆரம்பிக்கும்.

இந்த நூற்றாண்டின் இறுதியில் இந்திய மக்கள் தொகை சீனாவை விட இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும்.

2050ம் ஆண்டில், அதாவது, இந்த நூற்றாண்டின் மத்தியில் உலக மக்கள் தொகை 930ம் கோடியாக இருக்கும். அடுத்த நூற்றாண்டு பிறக்கையில், இது 1,000 கோடியைத் தாண்டிவிடும் என்று கூறப்பட்டுள்ளது.

பரப்பளவில் சீனா, இந்தியாவை விட 3 மடங்கு பெரியது என்பது குறிப்பிடதக்கது.

0 comments:

Post a Comment