Wednesday, May 4, 2011

மதானிக்கு ஜாமீன் வழங்குவது தொடர்பாக 2 நீதிபதிகளிடையே மாற்றுக் கருத்து



Abdul Nassar Madhani
டெல்லி: பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கேரள அரசியல்வாதி அப்துல் நாசர் மதானிக்கு ஜாமீன் வழங்குவது தொடர்பாக இரு நீதிபதிகளுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து தலைமை நீதிபதியின் தீர்ப்புக்கு பெஞ்ச் அனுப்பியுள்ளது.

2008ம் ஆண்டு பெங்களூரில் ஏற்பட்ட தொடர் குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பான வழக்கில் மதானி கைது செய்யப்பட்டு பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவர் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தை அணுகியிருந்தார். அவரது மனுவை நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜூ மற்றும் கியான் சுதா மிஸ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது.

மனுவை விசாரித்த பின்னர் ஜாமீன் அளிக்கலாம் என கட்ஜூ கருத்து தெரிவித்தார். ஆனால் மதானி மீது தேசப் பாதுகாப்பை சீர்குலைத்ததாக கடுமையான குற்றச்சாட்டு உள்ளதால் ஜாமீன் வழங்கக் கூடாது என்று தெரிவித்தார்.

இரு நீதிபதிகளும் தனித் தனியான கருத்தை தெரிவித்ததால் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து இதுதொடர்பாக தீர்ப்பளிக்குமாறு தலைமை நீதிபதிக்கு நீதிபதிகள் பரி்ந்துரைத்து மனுவை அவரிடம் அனுப்பி வைத்தனர்

0 comments:

Post a Comment