Saturday, May 7, 2011

அணு உலைகள் பாதிப்பு ஏற்படுவதை தடுக்க ஜப்பானில் 3 அணுஉலைகள் நிறுத்தி வைப்பு


டோக்கியோ: ஜப்பானில் மீண்டும் சுனாமி தாக்குதலால் அணு உலைகள் பாதிப்பு ஏற்படுவதை தடுக்க கடலில் தடுப்புச்சுவர் கட்டுவதற்காக மூன்று அணு உலைகளில் மின் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 11-ம் தேதி நிகழ்ந்த சுனாமி தாக்குதலில் புகூஷிமா, டெய்ச்சி அணு உலைகள் வெடித்து சிதறி கதிர்வீச்சை ஏற்படுத்தின. 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாயினர். ஜப்பானில் மொத்தம் 54 அணுஉலைகள் உள்ளன. இந்நிலையில் சுனாமி போன்று மீண்டும் நிகழாமல் தடுக்கு அந்நாட்டில் மேலும் கடல்கரையை ஒட்டியுள்ள அணு உலைகளில்பாதுகாப்பு குறித்த கூட்டம் நடந்தது. இதில் ஹ‌ேமோகா எனும் மிகப்பெரிய அணு உலை பசிபிக் கடற்கரையிலிருந்து 100 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.. இதனை சுனாமி தாக்காதவாறு கடல் மேல் தடுப்புச்சுவர் எழுப்ப முடிவு செய்து அதற்கான கட்டுமானப்பணிகளை துவக்கியுள்ளது. இதற்காக அப்பகுதியில் உள்ள மேலும் இரண்டு அணு உலைகளில் மின் உற்பத்தியை ஜப்பான் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இந்த தடுப்புச்சுவர்கள் இரண்டு வருடங்களில் கட்டிமுடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இது குறித்து ஜப்பான் பிரதமர் நெளட்டோ கான் கூறுகையில், இத்தகைய தடுப்புச்சுவர்கள் எப்படிப்பட்ட சுனாமி தாக்குதல்களையும் தாங்கும் அளவுக்கு 90 சதவீதம் உறுதியாக இருக்கும் என்றார்.

0 comments:

Post a Comment