Friday, May 6, 2011

அல்-குவைதா தலைவர் ஒசாமா பாகிஸ்தானில் தங்கியிருந்தது ஆச்சரியம்: முஷாரப்

வாஷிங்டன்:"அல்-குவைதா தலைவர் ஒசாமா பின்லாடன், பாகிஸ்தானில் தங்கியிருந்தார் என்ற தகவல் எனக்கு ஆச்சர்யம் அளிக்கிறது. பாக்., புலனாய்வுத் துறையினரால் இதை கண்டுபிடிக்க முடியவில்லை. புலனாய்வுத்துறையின் இந்த தோல்வி குறித்துவிசாரணை நடத்த வேண்டும்'என, பாக்., முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் கூறியுள்ளார்.


பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டி:அல்-குவைதா தலைவர் பின்லாடன், பாகிஸ்தானில், ராணுவபாதுகாப்பு மிகுந்த அபோதாபாத் நகரில் தங்கியிருந்தார் என்ற தகவல், எனக்கு ஆச்சர்யம் அளிக்கிறது. இது பற்றிய எந்த தகவலும், பாக்., புலனாய்வுத் துறைக்கு தெரியாமல் போனது ஆச்சர்யமாக உள்ளது.புலனாய்வுத் துறையின் இந்த தோல்வி குறித்து, உயர்மட்ட அளவிலான விசாரணை நடத்த வேண்டும்.பின்லாடனுக்கு, பாகிஸ்தான் ராணுவமோ, பாக்., உளவுத்துறையோ, அடைக்கலம்கொடுத்து, ஆதரவு அளித்திருக்கக் கூடும் என்பதை, என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை.

ஒசாமா பற்றிய தகவலை கண்டுபிடிக்க முடியாமல் போனதற்கான பொறுப்பு, புலனாய்வுத் துறையினருக்கு தான் உள்ளது.இதில், தொடர்புடையவர்களை கண்டுபிடித்து, சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.பாகிஸ்தான் அரசின் அனுமதி பெறாமல், அங்கு ஊடுருவி தாக்குதல் நடத்திய அமெரிக்காவின் நடவடிக்கை கண்டனத்துக்குரியது. இது, பாகிஸ்தானின் இறையாண்மையை மீறிய செயல்.இவ்வாறு முஷாரப் கூறியுள்ளார்.



0 comments:

Post a Comment