Tuesday, May 3, 2011

கொல்லப்பட்டது உண்மையில் பென்லாடனா? அமெரிக்காவின் மோசடி! (வீடியோ இணைக்கப்பட்டுள்ளது)



Agence France Presse தமது சிறப்புக் கணினி மென்பொருள் மூலம் உலகத் தொலைக்காட்சிகளில் பென்லாடன் கொல்லப்பட்டதாகக் காட்டப்பட்ட படங்கள் போலியானவை என நிரூபித்துள்ளது. அவரது தாடியின் கலக்கமின்மையே முதலாவதாக எமக்கு எல்லாவற்றையும் விளக்கியது என AFP கூறியுள்ளது. இந்தப் படம் 2009ல் வெளியான படத்துடன் இணைக்ப்பட்டு கணினி வரைகலை மூலம் உருவாக்கப்பட்டுள்ளது என AFPன் புகைப்படங்களுக்காக தலைமை ஆசிரியர் Mladen Antonov தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்கா வெளியிட்ட தகவல்களே ஒன்றுக்கொன்று முரணானவையாக அமைந்துள்ளன. அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட தகவலின்படி, அமெரிக்க இரணுவத்தின் ஈரூடகப்படையணியினர் ஒசாமா பின் லேடனின் மறைவிடத்தில் தாக்குதல் நடாத்திப் பென்லாடனைக் கைது செய்யும்படி அதிபர் ஒபாமா ஆணையிட்டிருந்தார். ஆனால் பென்லாடனின் பாதுகாப்புப் படையினர் திருப்பித் தாக்குதல் நடாத்தியதால் பென்லாடனைக் கொல்ல நேர்ந்ததாக அறிவித்திருந்தனர். ஆனாலும் கொல்லப்பட்ட பின்னர் அவரது உடல் கைப்பற்றப்பட்டதாகவும் அறிவித்திருந்தனர்.
கைப்பற்றப்பட்ட உடலம் மக்களுக்கக் காண்பிக்கப்படவில்லை. அவரது உடலம் முஸ்லிம் சம்பிரதாயப்படி சடங்குகள் நடாத்தப்பட்டுக் கடலினுள் வீசப்பட்ட்டதாக அறிவித்தனர். ஆனால் பரிசின் பெரிய பள்ளிவாசலின் (La Grande Mosquée de Paris) மதத்தலைவர்கள் ஒரு முஸ்லிம்  உடலம் கடலில் வீசப்பட்டதை வன்மையாகக் கண்டித்துள்ளனர். இறந்த ஒரு முஸ்லிமின் உடலம் முதலில் சவர்க்காரம் கொண்டு கழுவப்படுதல் வேண்டும். பின்னர் வாசனைத் திரவியங்கள் பூசப்பட்டுப் பின்னர் மூன்று விதமான துணிகளால் சுற்றப்பட்டு மண்ணிலே புதைக்கப்படல் வேண்டும். சவப்பெட்டிகள் இருக்கக்கூடாது. புதைக்கும் போது கூட மெக்காவிற்கு சமாந்தரமாகப் புதைக்கப்படல் வேண்டும். இறந்தவரின் தலைப்பகுதி சிறிது வலப்பக்கமாகத் திருப்பப்பட்டு மெக்காவின் புனித சமாதியான காபாவை நோக்கியபடி இருக்கவேண்டும். இத்தனை மரியாதைகளும் சம்பிரதாயங்களும் கடைப்பிடிக்கப்பட்டுப் புதைக்கப்பட வேண்டிய உடலம் கடலிலே வீசப்படடிருப்பது முஸ்லிம்களை அவமதிப்பதாக உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
உடலத்தைக் கைப்பற்றிய அமெரிக்கப்படையினர் எதற்காக அவசர அவசரமாகக் கடலில் வீசியுள்ளனர் எனப் பல கேள்விகள் எழத் தொடங்கியுள்ளன. பென்லாடன் இறந்ததாககக் கூறப்படும் படத்தில் செய்யப்பட்ட மோசடிகள், மற்றும் உடலம் கடலில் வீசப்பட்டமை போன்றவை பெரும் சந்தேகங்களை எழ வைத்துள்ளது.
சரிந்திருந்த ஒபாமாவின் ஆதரவுத்தளங்கள் இதன் மூலம் உயர்த்தப்பட்டுள்ளது. உலகில் அரசியல் இலாபங்களுக்காக விடுதலைத் தலைவர்கள் மற்றும் தீவிரவாதத் தலைவர்கள் போன்றோர் மர்மமாகவே மறைக்கப்படுகின்றனர்!

0 comments:

Post a Comment