Monday, May 2, 2011

பெல்ஜியம்: புர்காவை தடைசெய்யும் மசோதா


A woman wearing a "Niqab" veil participa
ப்ருசெல்ஸ்:பெல்ஜியத்தின் கீழ்மட்ட பாராளமன்றம் பகுதியாகவோ முழுவதுமாகவோ முகத்தை மறைப்பதை தடை செய்யும் மசோதாவிற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் முஸ்லிம் பெண்மணிகள் பொது இடங்களில் புர்கா மற்றும் நிகாப் அணிய அனுமதி மறுக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கடந்த வியாழன் 136 வாக்குகளை பெற்று மசோதா வெற்றி பெற்றுள்ளது. இம்மசோதாவை செனட் உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்தால் பிரான்சிற்கு அடுத்து ஐரோப்பாவில் நிகாபை தடை செய்யும் இரண்டாவது நாடாகும்.
இந்த சட்டத்தின் நோக்கம் புர்கா மற்றும் நிகாப் அணியும் பெண்களை குறிவைப்பது ஆகும். இந்த சட்டத்தை மீறுபவர்களுக்கு 15 முதல் 25 யூரோக்கள் வரையில் அபராதம் விதிக்கப்படும் அல்லது ஏழு நாட்கள் சிறை தண்டனை விதிக்கப்படும். பெல்ஜியத்தின் கீழ்மட்ட பாராளமன்ற உறுப்பினர்கள் கடந்த ஆண்டு இம்மசோதாவிற்கு ஒப்புதல் அளித்திருந்தது. ஆனால் பிரெஞ்சு மற்றும் டட்ச் மொழி பேசும் அரசியல்வாதிகளுக்குள் ஏற்பட்ட பிளவால் பாராளமன்றத்தை கலைத்ததால் இச்சட்டம்
அமலுக்கு வராமல் போனது.
முன்னதாக பிரெஞ்சு அரசு நிகாபை தடை செய்தது நினைவிருக்கலாம். பிரெஞ்சு அரசு உள்நாட்டு பெண்களோ அல்லது வெளிநாட்டு பெண்களோ பிரான்சில் நிகாப் அணிந்து சென்றால் அவர்களுக்கு 150 யூரோக்கள் அபராதம் விதிக்கப்படும் என்றும் பெண்களை நிகாப் அணிய வற்புறுத்துபவர்களுக்கும் அதிகபட்ச அபராதமும் இரண்டு வருட சிறை தண்டனையும் விதிக்கப்படும் என்றும் சட்டம் வகுத்துள்ளது குறிப்பிடத்தக்கது

0 comments:

Post a Comment