Wednesday, May 4, 2011

பின்லேடன் புகைப்படம் கோரமானது என்பதால் வெளியிட்டால் பிரச்சினை வரும்: அமெரிக்கா

வாஷிங்டன்: பின்லேடன் கொல்லப்பட்டது தொடர்பான புகைப்படங்கள் பார்க்க மிகவும் கோரமாக இருப்பதால் அவற்றை வெளியிட்டால் பிரச்சினை வரும் என கருதுகிறோம் என்று அமெரிக்கா கூறியுள்ளது.


பாகிஸ்தானில் நடந்த தாக்குதலின்போது பின்லேடன் கொல்லப்பட்டு விட்டதாக அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்தார். இதையடுத்து உலகெங்கும் பரபரப்பு ஏற்பட்டது. கொல்லப்பட்ட சில மணி நேரங்களிலேயே பின்லேடன் உடலில் டிஎன்ஏ சோதனை நடத்தப்பட்டு உடலையும் கடலில் வீசி விட்டதாக அமெரிக்கா கூறியுள்ளது.

இதனால் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. உண்மையிலேயே பின்லேடன் கொல்லப்பட்டு விட்டானா அல்லது ஒபாமாவின் செல்வாக்கை அதிகரிப்பதற்காக அவரது நிர்வாகம் டிராமா போடுகிறதா என்ற கேள்விகள் அமெரிக்காவிலேயே எழுந்துள்ளன.

இதையடுத்து புகைப்படங்களை வெளியிடுவது குறித்து யோசித்து வருவதாக அமெரிக்கா கூறியது. இந்த நிலையில் புகைப்படத்தை வெளியிட வாய்ப்பில்லை என்பதை அமெரிக்கா தற்போது மறைமுகமாக தெரிவித்துள்ளது.பின்லேடன் கொல்லப்பட்டபோது எடுக்கப்பட்ட படங்கள் மிகவும் கோரமாக உள்ளது. அவற்ற வெளியிட்டால் பிரச்சினை வரலாம் என கருதுகிறோம். எனவே அவற்றை வெளியிடுவது குறித்து பரிசீலனை செய்த பிறகே முடிவெடுக்கப்படும். பின்லேடன் கொல்லப்பட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ, புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை வெளியிடுவது குறித்து தீவிரப் பரிசீலனை நடந்து வருகிறது என்றார்.

0 comments:

Post a Comment