Wednesday, May 4, 2011

கம்பியூட்டர்களோடு ஒட்டிக் கொண்டிருக்கும் இள வயதினருக்கு அதிகரிக்கும் ஆரோக்கியக் குறைபாடுகள்!

கம்பியூட்டர்களோடு பசை போன்று ஒட்டிக்கொண்டிருக்கும் இளவயதினருள் அரை வாசிக்கும் அதிகமானவர்கள் ஆரோக்கியக் குறைபாடுகளால் பாதிக்கப்படுகின்றனர். 

அத்தோடு அவர்கள் பயங்கரமான கெட்டப் பழக்கங்களுக்கும் ஆளாகின்றனர் என்று புதிதாக நடத்தப்பட்டுள்ள ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. 

கனடாவின் குயின்ஸ் பல்கலைக்கழகம் இந்த ஆய்வை நடத்தியுள்ளது. இணையத்தளத்தில் அளவுக்கு அதிகமான நேரத்தைச் செலவிடும் இளவயதினர் அதிகம் குடிப்பழக்கத்துக்கு ஆளாகின்றனர்.புகைக்கின்றனர், கஞ்சா பாவிக்கின்றனர், சட்டவிரோத போதை மருந்துகளுக்கு அடிமையாகின்றனர்.

மேலும் பாதுகாப்பற்ற பாலியல் நடவடிக்கைகளிலும் இவர்கள் அதிகம் ஈடுபடுகின்றனர். இவர்களுள் அதிகமானவர்கள் வாகனங்களில் செல்லும்போது கூட பாதுகாப்புப் பட்டிகளை அணிவதில்லை. 

டிவியில் பெழுதைக் கழிப்பதைவிட இவர்கள் அதிகம் இணையத்தளத்தில் பொழுதைக் கழிப்பதால் வேண்டத்தகாத பல விடயங்களை அதிகம் பார்க்கின்றனர்.

சமூகக் காரணிகளை அறிந்து கொள்ளும் ஒரு நடவடிக்கையாகவே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக அந்த ஆய்வுக் குழுவின் தலைவர் வெலரி கார்ஸன் தெரிவித்துள்ளார். 

சராசரியாக தினசரி நான்கு முதல் ஐந்து மணி நேரத்தை இணையத்தில் கழிப்பவர்களே இவ்வாறான ஆபத்துக்களை எதிர்நோக்கியுள்ளனர். 

50% மானவர்கள் இந்த ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அண்மைக் காலங்களில் இளவயதினர் மத்தியில் கம்பியூட்டர் பாவனையும் அதிகரித்துள்ளது.

0 comments:

Post a Comment