Friday, November 30, 2012

அறிந்துகொள்​வீர் TNTJ வின் அயோக்கிய தனத்தை!

    அதிரை AJ பள்ளிவாசல் சுற்றுச் சுவர் பாலா என்பவனால் இடிக்கப்பட்டபோது, அதிரை ஊர் மக்கள் ஓர் அணியில் திரண்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியபோது அதிலிருந்து விலகி இருந்தவன் தான் இந்த TNTJவின் Y.அன்வர் அலி.     அது மட்டுமின்றி இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அனைவரின் சார்பாக தலைவராக இந்த TNTJ வின் Y.அன்வர் அலி நியமிக்கப்பட்டபோது ஆர்ப்பாட்டத்திற்கு முதல் நாள் இரவு காவல்துறை வழங்கிய அனுமதியை யாருக்கும் தெரியாமல் வாபஸ்...

அதிராமபட்டிணம் கொலை சம்பவம்! நடந்தது என்ன? எஸ்.டி.பி.ஐ கட்சி தஞ்சை மண்டல பொறுப்பாளர் G.அப்துல் சத்தார் விளக்கம்

            அதிராமபட்டிணம் கீழத்தெருவை சேர்ந்த காஜா முகைதீனுக்கும், பிலால் தெருவை சேர்ந்த காதர் முகைதீனுக்கும் ஏற்பட்ட தகராறின் முடிவில் 23 நவம்பர் 2012 அன்று மாலை காதர் முகைதீன் கத்தியால் குத்தியதில் காஜாமுகைதீன் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். சிகிச்சை பலனின்றி 24ம் தேதி அதிகாலையில் மரணமடைகிறார். கத்தியால் குத்திய காதர் முகைதீன் காவல் நிலையத்தில் சரணடைகிறார்.       ...

முகமது நபியை இழிவுபடுத்தி படம் எடுத்த ஏழு நபர்களுக்கு தூக்கு

     கெய்ரோ : முஸ்லீம்களின் இறுதி தூதரான முஹம்மது நபியை இழிவுபடுத்தும் வகையில், 'இன்னோசன்ஸ் ஆப் முஸ்லீம்ஸ்' என ஓர் திரைப்படம் இணையதளத்தில் வெளியிடப்பட்டதும், அதை எதிர்த்து சென்னை உட்பட, உலகெங்கும் அமெரிக்காவுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றதும் அறிந்ததே.     இப்படத்தை எடுத்த ஏழு பேர் மீதும் எகிப்தில் வழக்கு தொடரப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட ஏழு நபர்களும் எகிப்திற்கு வெளியே உள்ள நிலையில் இவ்வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை...

அஸ்ஸாம் முதல்வர் பேட்டி :முஸ்லிம்களின் இரத்தம் கொதிக்கிறது!

    NOV30, அஸ்ஸாமில் ஒரே ஒரு "வங்கதேசத்தவர்" கூட இல்லை என, அஸ்ஸாம் மாநில முதல்வர் "தருண் ககோய்" தெரிவித்துள்ளார்.     டெல்லியில் உள்ள அஸ்ஸாம் பவனில் நேற்று (29/11) செய்தியாளர்களை சந்தித்த அஸ்ஸாம் முதல்வர், மாநிலத்தில் பல்வேறு ஆய்வுகள் மற்றும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையிலும், ஒரே ஒரு வங்கதேசத்தவர் கூட கண்டு பிடிக்கப்படவில்லை, என தெரிவித்தார்.     மேலும், கலவரத்தில் கொல்லப்பட்டவர்களில் ஒருவர் கூட "அந்நிய...

மும்பை 7/11 குண்டுவெடிப்பு : போலீஸ் மீது நீதிபதி சரமாரி வசை ; எருமை மாட்டின் மீது மழை!

    NOV30, மும்பை 7/11 புறநகர் ரெயில் குண்டுவெடிப்பு வழக்கில், அப்பாவிகளை சிக்கவைத்துள்ள போலீசின் தவறுகளை "மோப்பம்" பிடித்துவிட்டதாக தெரிவித்த நீதிபதி "அபை தப்சே" நீதிமன்றத்தின் "சந்தேகம்" உறுதியாகிவிட்டால், "கடுமையான தீர்ப்பு" வழங்கப்படும்,என்று எச்சரித்தார். இந்த வழக்கில் போலீசின் "தகிடு தத்தங்"களின் விவரமாவது:     மும்பை லோக்கல் ரெயில் குண்டு வெடிப்பு வழக்கில் "தொலைபேசி உரையாடல்"களை முக்கிய ஆதாரமாக சொல்லப்பட்டு,...

எகிப்து அரசியல் சாசனத்திற்கு ஷரீஅத் அடிப்படையாக தொடரும்!

30 Nov 2012     கெய்ரோ:அரசியல் சாசன உருவாக்கத்திற்கு முக்கிய அடிப்படையாக ஷரீஅத்தின் தத்துவங்கள் தொடரும் என்று எகிப்தின் அரசியல்  நிர்ணய சபை முடிவுச் செய்துள்ளது.     முந்தைய அரசியல் சாசனத்தில் தொடரும் ஷரீஅத் தொடர்பான வார்த்தையை நீக்க தேவையில்லை என்று முடிவு எடுக்கப்பட்டது. அரசியல் நிர்ணய சபையில் இஸ்லாமிய வாதிகளுக்கும், மதசார்பற்றவாதிகளுக்கும் இடையே கடுமையான சர்ச்சையை இவ்விவகாரம் கிளப்பியிருந்தது.     அரசியல்...

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி மீண்டும் காஸ்ஸாவில் இஸ்ரேல் தாக்குதல்!

30 Nov 2012     காஸ்ஸா:தற்போது அமலில் இருக்கும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி மீண்டும் இஸ்ரேல் அடாவடியாக காஸ்ஸா மீது தாக்குதலை நடத்தியுள்ளது. வியாழக்கிழமை காலை யூதப்படையினர் காஸ்ஸாவின் தெற்கு பகுதியில் உள்ள கான் யூனுஸின் மத்திய பகுதியில் தாக்குதலை நடத்தியுள்ளனர்.     புல்டோஸர்கள், பீரங்கிகளை பிரயோகித்து இஸ்ரேல் ராணுவம் பாதுகாப்புக்கு வேலிக்கு அருகே தாக்குதலை நடத்தியுள்ளது. இப்பகுதியில் மேலும் கொஞ்சம் இடத்தை ஆக்கிரமித்து வேலியை மாற்றி நிறுவுவதே இஸ்ரேலின் திட்டம் என்று காஸ்ஸா அதிகாரிகள் கூறுகின்றனர்.     காஸ்ஸாவிற்கு...

இஸ்ரேலுக்கு நோபல் பரிசை வென்றவர்கள் எதிர்ப்பு!

30 Nov 2012     லண்டன்:காஸ்ஸாவின் மீது ராணுவ தாக்குதல் நடத்திய இஸ்ரேலை கண்டித்தும், இனிமேலும் இதுபோன்ற அணுகுமுறையை தொடரக் கூடாது எனவும் நோபல் பரிசை வென்றவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். பிரிட்டனில் முக்கிய பத்திரிகையான கார்டியன் இத்தகவலை வெளியிட்டுள்ளது.     160க்கும் மேற்பட்ட ஃபலஸ்தீன் மக்களின் உயிரை பறிக்க காரணமான போரில், ஆயுதங்களையும், ஆதரவையும் அளிக்கும் அமெரிக்கா உள்ளிட்ட வளர்ச்சியடைந்த நாடுகளையும் அவர்கள் கண்டித்துள்ளார்கள்....

ஃபலஸ்தீனுக்கு ஐ.நா வில் கண்காணிப்பு உறுப்பினராக அங்கீகாரம்!

30 Nov 2012     ஐ.நா:ஐக்கிய நாடுகளின் பொது அவையில் கண்காணிப்பு உறுப்பினராக ஃபலஸ்தீனுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. ஃபலஸ்தீன் ஆணையம், தலைவர்கள் மற்றும் தூதரக பிரதிநிதிகளின் வெற்றியாக இந்த அங்கீகாரம் கருதப்படுகிறது.     193 நாடுகளை உறுப்பினராக கொண்ட ஐ.நா பொது அவையில் 138 நாடுகள் ஃபலஸ்தீனுக்கு ஆதரவாக வாக்களித்தன. 9 நாடுகளின் ஃபலஸ்தீனின் கோரிக்கையை எதிர்த்து வாக்களித்தன. பிரான்சு, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் ஃபலஸ்தீனுக்கு ஆதரவாக வாக்களித்தபோது...

தகவல் தொழில் நுட்பத்தில் திருத்தம்: பொது நல வழக்கை ஏற்றுக்கொண்டது உச்சநீதிமன்றம்!

30 Nov 2012 புதுடெல்லி:தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என டெல்லி மாணவி தாக்கல் செய்த பொதுநல மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது. இது குறித்து ஸ்ரேயா சிங்கல் என்பவர் தனது மனுவில் தெரிவித்துள்ள விவரம்: சமீப காலமாக இணையதளத்தில் கருத்து வெளியிட்டதற்காக சிலர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66ஏ பிரிவு அரசியல் சட்டம் வழங்கும் பேச்சு, கருத்து சுதந்திர உரிமைகளுக்கு எதிராக...

ஃபேஸ்புக்கில் கருத்து: பெண்கள் மீதான வழக்கு கைவிடப்பட்டது!

    30 Nov 2012 மும்பை:சிவசேனா தலைவர் பால் தாக்கரே மரணம் தொடர்பாக ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவித்த இளம்பெண்கள் மீதான வழக்கு கைவிடப்பட்டது.     சிவசேனைத் தலைவர் பால் தாக்கரே மரணத்தின்போது, சிவசேனை மீதான பயம் காரணமாகவே முழு அடைப்பு என்றும், உண்மையான மரியாதைக்காக அல்ல என்றும் பேஸ்புக்கில் கூறிய கருத்தால் சர்ச்சை ஏற்பட்டு, பின்னர் பெண்கள் இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.  நாடெங்கும் எழுந்த எதிர்ப்பு காரணமாக, இந்த...

காவிரி:கர்நாடகம் கைவிரிப்பு – இரு மாநில முதல்வர்களின் பேச்சு வார்த்தை தோல்வி!

    30 Nov 2012 பெங்களூர்:உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி, காவிரி நதி நீர் பங்கீட்டுப் பிரச்னை தொடர்பாக தமிழக, கர்நாடக முதல்வர்கள் இடையே பெங்களூரில் வியாழக்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. ஒரு சொட்டு தண்ணீர் கூட தர முடியாது என்று கர்நாடகம் கைவிரித்துவிட்டதாக பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.     பெங்களூரில் பழைய விமான நிலையச் சாலையில் அமைந்துள்ள லீலா...

தப்லீக் ஜமாத்தினர் மீது போலீஸ் அடக்குமுறை : மில்லி கவுன்சில் அவசரக்கூட்டம்! .

     NOV30, தப்லீக் ஜமாத்தினரை, ஓடும் ரயிலிலிருந்து நடுவழியில் இறக்கி "கையில் விலங்கு மாட்டி" இழுத்துச்சென்றது குறித்து, ஆலோசிக்க "ஆல் இந்தியா மில்லி கவுன்சிலின்" அவசரக்கூட்டம் டெல்லியில் நேற்று (29/11) மாலை நடைபெற்றது.     டெல்லிக்கு சென்றுக்கொண்டிருந்த தப்லீக் ஜமாத்தினரை "மதுரா" ரயில் நிலையத்தில் வலுக்கட்டாயமாக இறக்கியது, "ஹத்தன்" காவல் நிலையத்தில் வைத்து அடித்து உதைத்து - தண்ணீர் தொட்டியில் அமுக்கி சித்திரவதை...

Thursday, November 29, 2012

தப்லீக் ஜமாத்தினரை கையில் விலங்கிட்டு -அடித்து உதைத்து இழுத்து சென்ற போலீஸ்!

     NOV29, ஓடும் ரயிலில் "தப்லீக் ஜமாத்"தினரை கைது செய்த போலீஸ், அவர்களின் ஆடைகளை களைந்து, கையில் "விலங்கிட்டு" அடித்து உதைத்து இழுத்துச்சென்றது. இது பற்றிய செய்தியாவது:      இம்மாதம் 19ந்தேதி, கர்நாடக மாநிலம் கிராஸ்கரிலிருந்து டெல்லியை நோக்கி (வண்டி எண்:12181) ரயிலில் "தப்லீக் ஜமாத்"தின் 14 நபர்கள் கொண்ட குழுவினர், பயணித்துக்கொண்டிருந்தனர்.     உத்தரபிரதேச மாநிலமான "ஆக்ரா" ரயில் நிலையத்தில் "சாதாரண உடை"யில் ரயிலில் ஏறிய போலீஸ், அவர்களை கைது செய்வதாக சொன்னது. ஏன்? என சக பயணிகள் கேட்டபோது,...

இந்து முன்னனி மாவட்டச்செயலாளர் "கற்பழிப்பு வழக்கில்" கைது!

  NOV28, தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில், பெண் ஒருவரை கற்பழித்த வழக்கில், "இந்து முன்னணி" கட்சியின் மாவட்டச்செயலாளர் கண்ணாயிரம் கைது செய்யப்பட்டுள்ளார...

முர்ஸி காஸ்ஸாவில் தலையிடாமலிருக்க இஸ்ரேலின் சதித்திட்டம்!

   29 Nov 2012      லண்டன்:எகிப்தின் அதிபர் முஹம்மது முர்ஸியின் ஆட்சியை சீர்குலைக்க முன்னாள் அரபு லீக் தலைவர் அம்ர் மூஸாவும், இஸ்ரேலின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஸிபி லிவ்னியும் ரகசியமாக ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அல் குத்ஸ் அல் அரபி பத்திரிகையின் எடிட்டர் அப்துல் பாரி அத்வான், லண்டனில் அல் ஹிவார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இதனை தெரிவித்துள்ளார்.      இஸ்ரேல்...

டமாஸ்கஸில் இரட்டைக் குண்டுவெடிப்பு: 54 பேர் பலி!

   29 Nov 2012     டமாஸ்கஸ்:சிரியாவின் தலைநகரமான டமாஸ்கஸின் தென்கிழக்குப் பகுதியில் நிகழ்ந்த இரட்டை கார் குண்டுவெடிப்பில் 54 பேர் பலியாகியுள்ளனர். 83 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. குண்டுவெடிப்பில் ஏராளமான வாகனங்களும், கட்டிடங்களும் சேதமடைந்துள்ள காட்சியை சிரியா ஊடகங்கள் ஒளிபரப்புச் செய்தன.     சிரியாவின் ஜரமனா மாவட்டத்தில் கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியில் இக்குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துள்ளன....

ஃபலஸ்தீன்:மேற்கத்திய நாடுகளின் ஆதரவு பெருகுகிறது!

  29 Nov 2012      வியன்னா:ஐக்கிய நாடுகள் அவையில் ஃபலஸ்தீனின் பதவியை உயர்த்துவதற்கு 27 உறுப்பினர்களை கொண்ட ஐரோப்பிய யூனியனில் பாதிக்கும் மேற்பட்ட நாடுகள் ஆதரிக்கும் என்று ஆஸ்திரியா அறிவித்துள்ளது.     ஐ.நாவில் உறுப்பினர் அல்லாத கண்காணிப்பு நாட்டின் அந்தஸ்தை வழங்கக்கோரி ஃபலஸ்தீன் ஆணைய அதிபர் மஹ்மூத் அப்பாஸ், சமர்ப்பித்த மனுவின் மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெற உள்ளது. இந்நிலையில் ஆஸ்திரியாவின் அறிவிப்பு...

மும்பையில் மீண்டும் கைது படலம்! ஃபேஸ்புக்கில் ராஜ் தாக்கரே குறித்து கருத்து தெரிவித்த மாணவர் கைது!

   29 Nov 2012     மும்பை:சிவசேனா தலைவர் பால்தாக்கரே மறைவையொட்டி மும்பையில் 2 நாட்களாக நடந்த முழு அடைப்பிற்கு எதிராக ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவித்த இளம்பெண்ணையும், அவரது கருத்துக்கு ஆதரவாக லைக் போட்ட பெண்மணியும் கைது செய்யப்பட்ட சம்பவம் எழுப்பிய சர்ச்சைகள் ஓயும் முன்னரே மீண்டும் மும்பையில் கைது சம்பவம் நடந்துள்ளது.     பால் தாக்கரே மருமகனும், மஹராஷ்ட்ரா நவ நிர்மாண் சேனாவின்(எம்.என்.எஸ்) தலைவருமான ராஜ்...

கெளரவக் கொலை:தொலைக்காட்சி சானல் நிகழ்ச்சியில் பங்கேற்ற இளைஞர் சுட்டுக் கொலை!

   28 Nov 2012     லக்னோ:தனியார் தொலைக்காட்சி சானல் ஒன்றில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கெளரவக் கொலையை குறித்து பேசிய இளைஞர் சுட்டுக் கொலைச் செய்யப்பட்டுள்ளார். மேற்கு உத்தரபிரதேசத்தில் அப்துல் ஹக்கீம்(வயது29) என்பவர்தாம் கொல்லப்பட்டுள்ளார்.      பாலிவுட் நடிகர் அமீர்கான் தனியார் தொலைக்காட்சி சானல் ஒன்றில் சத்யமேவ ஜயதே என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். சமூக நிகழ்வுகளை ஆராயும் இந்நிகழ்ச்சியில்...

மோடிக்கு நற்சான்றிதழ் வழங்கிய எஸ்.ஐ.டி அறிக்கை: எதிர் மனு தாக்கல் செய்ய ஸாகியா ஜாஃப்ரிக்கு அனுமதி மறுப்பு!

  28 Nov 2012      அஹ்மதாபாத்:கால அவகாசம் முடிந்துவிட்டதால் குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திர மோடிக்கு நற்சான்றிதழ் வழங்கியுள்ள எஸ்.ஐ.டி அறிக்கையை குறித்து கேள்வி எழுப்பி மனு தாக்கல் செய்யும் உரிமையை கொலைச் செய்யப்பட்ட இஹ்ஸான் ஜாஃப்ரியின் மனைவி ஸாகியா ஜாஃப்ரி இழந்துவிட்டார் என்று அஹ்மதாபாத் பெருநகர மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.      2002ஆம் ஆண்டு குஜராத்தில் ஹிந்துத்துவா பயங்கரவாத...

Wednesday, November 28, 2012

‘துப்பாக்கி’ படத்தின் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கம்: முதல்வரை சந்தித்து இஸ்லாமிய அமைப்பினர் நன்றி!

    28 Nov 2012      சென்னை:இஸ்லாமியர்களுக்கு எதிரான சர்ச்சைக்குரிய காட்சிகளை ‘துப்பாக்கி’ படத்தில் இருந்து நீக்க  நடவடிக்கை எடுத்ததற்காக முதலமைச்சர் ஜெயலலிதாவை, ஜமாதுல் உலமா சபையின் தலைவர் மெளலவி அப்துற்றஹ்மான் தலைமையில் தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பினர்  நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.      இதுத் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி...

எகிப்து:நீதிபதிகளின் சச்சரவுகளுக்கு தீர்வு ஏற்படுகிறது!

  28 Nov 2012      கெய்ரோ:தனது அதிகார வரம்பை அதிகரித்தது தொடர்பாக நாட்டில் எழுந்த பிரச்சனைகளை தீர்ப்பதில் எகிப்து அதிபர் முர்ஸி நடத்திய முயற்சிகள் வெற்றிபெறும் வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.      நாட்டின் உயர் நீதிபதிகளுடன் நேற்று முன் தினம் முர்ஸி நடத்திய பேச்சுவார்த்தை வெற்றிக்கரமாக இருந்தது என்று அவரது செய்தி தொடர்பாளர் யாஸிர் அலி கூறியுள்ளார்.      முர்ஸிக்கு எதிராக நாடு...

குழந்தைகளை கொலைச் செய்யும் இஸ்ரேல்: மெளனம் சாதிக்கும் மேற்கத்தியர்கள்!

   28 Nov 2012     மேற்குகரை:எட்டு நாட்களாக நீண்ட காஸ்ஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் மழலையர் உள்பட ஏராளமான குழந்தைகள் கொலைச் செய்யப்பட்ட பிறகும் மேற்கத்திய நாடுகள் மெளனம் சாதிப்பதாக ஃபலஸ்தீனில்  மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.     ஃபலஸ்தீனில் உள்ள குழந்தைகளை கொலைச் செய்வதற்கே இஸ்ரேல் ராணுவத்தில் தனிப்பிரிவு ஒன்று செயல்படுவதாக, ஜபலியா ஃபலஸ்தீன் அகதி முகாமை மையமாக  கொண்டு செயல்படும்...

சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு: வாக்கெடுப்புடன் கூடிய விவாதத்திற்கு அரசு ஒப்புதல்!

   28 Nov 2012     புதுடெல்லி:சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை எதிர்த்த போதிலும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கவிழ்ந்துவிடக் கூடாது என்பதற்காக கசப்பான நிலையில், மத்திய அரசுக்கு ஆதரவான நிலை எடுப்போம் என்று திமுக அறிவித்துள்ள நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் நடத்தத் தயார் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.      டெல்லியில் நேற்று நடந்த...

"அல்லாஹ்வின் பூமியில் அல்லாஹ்வின் ஆட்சி" : மனோதைரியம் தேவை! - அப்துல் பத்தாஹ்!

       NOV28, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் பலவற்றிலும், இஸ்லாத்துக்கும் அதை ஏற்று நடப்போருக்கும் எதிராக நடந்து வரும் "வாழ்வா சாவா" போராட்டத்தில், இறை சட்டங்களை செயல்படுத்த முஸ்லிம்களிடம் துணிச்சலும் தைரியமும் தேவை என்றார், முப்தி அப்துல் பத்தாஹ்.     ஹைதராபாத்தின் ரியாசத் நகர் மஸ்ஜிதே ஹபீசியா பள்ளியின் இமாம் "முப்தி" அப்துல் பத்தாஹ், நேற்று "ஆஷூரா நாள்" சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சியில் பேசிய போது, இமாம்...

அப்பாவி முஸ்லிம்களை விடுதலை செய்யக்கோரி காலவரையற்ற உண்ணாவிரதம்!

    NOV27, அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை பயங்கரவாதிகளாக சித்தரித்து கைது செய்வதை கண்டித்தும் - அவர்களை விடுதலை செய்யக்கோரியும், நேற்று (26/11) மதியம் 2 மணி முதல், டெல்லியில் காலவரையற்ற உண்ணாவிரதம் துவங்கப்பட்டுள்ளது.        திரளான மக்கள் கூட்டத்துடன் லோக் ஜனசக்தி கட்சியின் பொதுச்செயலார் "அமானத்துல்லாஹ் கான்" துவங்கியுள்ள இந்த உண்ணாவிரத போராட்டத்தில், கட்சியின் தலைவரும் எம்.பி.யுமான ராம்விலாஸ் பாஸ்வான், ஜமாத்தே...

தருமபுரி : ஒரு பெண்ணுக்காக ஊரை எரித்தனர்; 8 முஸ்லிம் பெண்களை பற்றி யார் பேசுவது?

     NOV 26, தர்மபுரியில் வன்முறை நிகழ்த்தப்பட்ட அதே கிராமங்களை சேர்ந்த வாலிபர்கள், 8 முஸ்லிம் பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துக்கொண்டு, துரத்திவிட்ட சம்பவங்களை பற்றி குரல் கொடுக்க நாதியில்லை.        தர்மபுரியில், ஒரு பெண்ணை ஜாதி மாறி திருமணம் முடித்த விவகாரம், ஜாதிய வன்முறையாக மாற்றப்பட்டு கொண்டாம்பட்டி, அண்ணாநகர் நத்தம் காலனி ஆகிய பகுதிகளைச்சேர்ந்த மக்கள் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர்.        இதற்காக குரல் கொடுக்க பலர் முன்வந்துள்ள அதேவேளையில், இதே கிராமங்களை சேர்ந்த வாலிபர்கள்,...

இயேசு பிறந்த நாள் "வரலாறு" தவறு! : போப் ஆண்டவர் "பென்னடிக்ட்" சர்ச்சை!

    NOV26, டிசம்பர் 25ந்தேதி இயேசு பிறந்தார், என்பதும் தவறு, வரலாற்றில் சொல்லப்பட்டுள்ள வருடமும் தவறு என்று, கத்தோலிக்க மத நிறுவனர் "போப்" ஆண்டவர் "பென்னடிக்ட்" தெரிவித்துள்ளார்.     போப் ஆண்டவர் "பென்னடிக்ட்" அவர்களால் எழுதப்பட்டுள்ள "The Infancy Narraatives" என்ற புத்தகத்தின் 3ம் பாகத்தில், இயேசு பிறந்த நாள் என்று சொல்லப்பட்டு வரும் "டிசம்பர் 25" என்பதும் தவறு, இயேசு பிறந்ததாக நம்பப்படும் வருடத்திலும் பல ஆண்டுகள்...

அப்பாவிகளின் வாழ்க்கையோடு விளையாட்டு : அலகாபாத் நீதிபதிகளின் தேவையற்ற கருத்துக்கள்!

    NOV25, பொய் வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய முயற்சி எடுத்த உ.பி.அரசை குறை கூறிய நீதிபதிகள், இன்று இவர்களை நீங்கள் விடுதலை செய்வீர்கள்; நாளை இவர்களுக்கு "பத்ம பூஷன்" விருது கொடுப்பீர்கள், என கிண்டலடித்தனர்.      கடந்த 2007ம்ஆண்டு, உ.பி.யின் லக்னவ், பைசாபாத் மற்றும் வாரணாசி பகுதிகளில் நடந்த குண்டு வெடிப்பு வழக்கில் சேர்க்கப்பட்ட அப்பாவி முஸ்லிம்கள் பலர் சிறையிலடைக்கப்பட்டனர்.     ...

இந்த வாரம் இஸ்லாத்தில் இணைந்தவர்கள்!

   NOV 25, கடந்த 18-11-2012 அன்று சென்னை பல்லாவரத்தை சேர்ந்த "வர்கீஸ்" என்பவர், தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்.      அதே நாளில், சென்னை சேப்பாக்கத்தை சேர்ந்த "ஞானசேகரன்" என்ற சகோதரர் இஸ்லாத்தை ஏற்று, அனீஸ் என்று தனது பெயரை மாற்றிக்கொண்டார்.      மேலும், 20-11-2012 அன்று தாம்பரத்தை சேர்ந்த "மகேந்திரன்" என்ற சகோதரர் இஸ்லாத்தை ஏற்று தன் பெயரை வாசிம் என மாற்றிக்கொண்டார்...