Monday, December 31, 2012

இந்தியாவில் குற்றங்கள் குறைவதற்கு இஸ்லாமியர்கள் அணிய கூடிய பர்தா போல உடை அணியுங்கள் என்று கூறியதில் தவறு இல்லை -மதுரை ஆதினம் அருணகிரிநாதர்



     இஸ்லாமியப் பெண்கள் எப்படி பர்தா அணிகிறார்களோ அதேபோல தமிழ்நாட்டுப் பெண்களும், ஒட்டுமொத்த இந்தியப் பெண்களும் பர்தா அணிய வேண்டும். இதன் மூலம் ஆண்களின் வக்கிரப் பார்வையிலிருந்து பெண்கள் தப்ப முடியும், பாலியல் குற்றங்களையும் குறைக்க முடியும் என்று மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் கூறியுள்ளார்.
 
    இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், இஸ்லாயமிப் பெண்கள் பர்தா அணிவது வழக்கம். கணவரைத் தவிர வேறு யாரும் தங்களது உடலைக் கண்டு விடக் கூடாது என்பதற்காக இந்தக்கட்டுப்பாட்டை அவர்கள் கையாளுகின்றனர். இதேபோல தமிழ்நாட்டுப் பெண்களும், இந்தியப் பெண்களும் கூட பர்தா அணிய வேண்டியது அவசியம். இதன் மூலம் ஆண்களின் வக்கிரப் பார்வையிலிருந்து பெண்கள் தப்ப முடியும். மேலும், பாலியல் குற்றங்களையும் குறைக்க முடியும் என்றார் ஆதீனம்.

     இந்த நிலையில் இன்று பெண்கள் அனைவரும் பர்தா அணிந்தால் ஆண்களின் காமப்பார்வையிலிருந்து தப்பிக்கலாம் என்று மதுரை ஆதினம் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மதுரை ஆதீனம் மடம் முற்றுகையிடப்பட்டு போராட்டம் நடத்தப்பட்டது.அருணகிரிநாதர் மன்னிப்பு கேட்கும்வரை போராட்டம் தொடரும் என்றும் பெண்கள் மாதர் சங்கம் (இவர்களுக்கு பெண்களுக்கு அரைகுறை ஆடைதான் பாதுகாப்பு என்று கூறுபவர்கள் ) எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

     ஆனால் தனது பேச்சு குறித்து கருத்தளித்துள்ளஅருணகிரி நாதர் தமிழ்நாட்டு பெண்கள் மீதான அக்கறையால் தான் சொன்னேன். எத்தனை போராட்டங்கள் வேண்டுமானாலும் நடத்திவிட்டு போகட்டும். நான் மன்னிப்பு கேட்கமாட்டேன்" "நான் ஒன்றும் தமிழ்நாட்டுப் பெண்களுக்கு எதிராகப் பேசவில்லை. தமிழ்நாட்டில் நடக்கும் பாலியல் வன்முறைக்கு பெண்கள் அணியும் அரைகுறை உடையும் ஒரு காரணமாக உள்ளது. அதனை பெற்றோர்களும், பெண்களும் உணர்ந்து கொள்ள வேண்டும்". என்று கூறிய அருணகிரிநாதர் முன்னர் வெள்யிட்ட பர்தா குறித்தான தனது கருத்தில் உறுதி காண்பித்துள்ளார்.என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
     அருணகிரிநாதர் என்ன தவறாக பேசிவிட்டார்  பெண்கள் அனைவரையும் ஆடையின்றி வெளியில் வாருங்கள் என்று கூறி இருந்தால் பெண்களின் போராட்டம் நியாயமானது, கணவனுக்கு மட்டுமே தெரிய வேண்டிய உடலை ஊருக்கும், உலகுக்கும் தெரியாதவாறு பர்தா அணிந்து வாருங்கள் என்று கூறியதில் என்ன தவறு இருக்கிறது மேலும் நீங்கள் பர்தா கூட அணிய வேண்டாம் பர்தா போல உடலை மறைக்க கூடிய ஆடைகளை கூட அணியலாமே...
     பாஜக வினர் சட்டசபையில் கில்பான்ஸ் படம் பார்த்தது, பாஜக அலுவலகத்தில் இளம்பெண் கற்பழிக்கப்பட்டது உள்ளிட்ட அனைத்து காமலீளைகளுக்கும் பின்னணியில் பாஜக வும், இன்னபிற இந்துத்துவ இயக்கங்களும் இருப்பதால்....மேற்கொண்டு இந்திய பெண்களின் வாழ்வை சீரழிக்க பர்தா தடையாகி விடும் என்ற அச்சத்தில் பாஜகவே பெண்கள் அமைப்பை ஏவி விடுவதாக மக்கள் சந்தேகிக்கின்றனர், பாஜக வின் காமலீலைகள் புரியாத பெண்களும் போராட்டம் என்ற பெயரில் சீன் போடுவது வருந்ததக்கது.

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் மாவட்ட மாநாடுகள் நடத்தப்படும் எஸ்.டி.பி.ஐ தமிழக தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி அறிவிப்பு

dhehlan imam 1     நேற்று (25.12.2012) நெல்லையில் நடை பெற்ற எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்திற்கு பிறகு எஸ்.டி.பி.ஐ ( சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா)கட்சியின் தமிழக தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் தெரிவித்தாவது:
 
    வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்ட மாநாடுகளை நடத்த உள்ளோம். இந்த மாநாடுகளில் லஞ்சம் ஊழல் கட்டுப்படுத்தப்பட வேண்டும்,பூரண மதுவிலக்கு தமிழகத்தில் அமல்படுத்தப்பட வேண்டும், முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு தமிழகத்தில் 7சதவீதமாக அதிகரிக்கப்பட வேண்டும் ஆகியன முக்கிய கோரிக்கையாக இருக்கும்.முதல் மாவட்ட மாநாடு வருகின்ற ஜனவரி 20 அன்று நேற்று (25.12.2012) நெல்லையில் நடை பெற்ற எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்திற்கு பிறகு எஸ்.டி.பி.ஐ ( சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா)கட்சியின் தமிழக தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் தெரிவித்தாவது:
 
    வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்ட மாநாடுகளை நடத்த உள்ளோம். இந்த மாநாடுகளில் லஞ்சம் ஊழல் கட்டுப்படுத்தப்பட வேண்டும்,பூரண மதுவிலக்கு தமிழகத்தில் அமல்படுத்தப்பட வேண்டும், முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு தமிழகத்தில் 7சதவீதமாக அதிகரிக்கப்பட வேண்டும் ஆகியன முக்கிய கோரிக்கையாக இருக்கும்.முதல் மாவட்ட மாநாடு வருகின்ற ஜனவரி 20 அன்று திருநெல்வேலியில் நடைபெறுகிறது.

    தமிழகத்தில் விவசாயிகளின் தற்கொலை அதிகரித்து வருவது வேதனைக்குரியது.இந்நிலைக்கு காரணமான கருதப்படுகின்ற நீரினை தரமறுத்த கர்நாடகா அரசை எஸ்.டி.பி.ஐ கட்சி வன்மையாக கண்டிக்கிறது.தமிழக அரசு நஷ்டமடைந்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை உடனே வழங்க வேண்டும் விவசாயிகள் இது போன்ற பிரச்சினைகளுக்காக தற்கொலை என்ற தவாறான முடிவை எடுக்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.

    சமீபகாலமாக பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளது வேதனை அளிக்கிறது.டெல்லியில் மருத்துவகல்லூரி மாணவி பாலியல் வன்முறைக்கு இலக்காகியிருக்கிறார்.அதைவிட கொடுமை தூத்துக்குடி மாவட்ட சிறுமி புனிதா பலாத்காரப்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.தமிழகத்தில் பாலியல் வன்முறைகள் அதிகரித்து கொண்டே இருக்கிறது.எனவே பாலியல் குற்றங்களுக்கு உச்சபட்ச தண்டனைதரும் வகையில் சட்டங்களை மத்திய,மாநில அரசுகள் இயற்ற வேண்டும்.அனைத்து குற்றங்களுக்கும் காரணம் மதுவாக இருக்கிறது.எனவே தமிழகத்தில் மதுவினை தடை செய்வதும்,பூரண மதுவிலக்கை அமல்படுத்துவதும் ஒன்றே தீர்வாகும்.

    மேலும் தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்திவரும் இலங்கை ராணுவத்தினரையும், காரணமான இலங்கை அரசையும்,தடுக்க தவறிய மத்திய அரசையும் எஸ்.டி.பி.ஐ கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஊழல் அரசு இயந்திரங்களால் சட்டங்களை செயல்படுத்த முடியுமா?


       Dec 31: மருத்துவ மாணவி ஆறு பேர் கும்பலால் கற்பழிக்கப்பட்டு, மரணம் அடைந்ததை அடுத்து, இதுபோன்ற குற்றங்களை தடுக்க சட்டங்கள் திருத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

     இதுபோன்ற குற்றங்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை ஆய்வு செய்வதற்காக, நீதிபதி, ஜே.எஸ்.வர்மா தலைமையில் குழுவை, மத்திய அரசு அமைத்துள்ளது. கற்பழிப்பு குற்றங்களில் ஈடுபடுவோருக்கு, "ஐரோப்பிய நாடுகளில் உள்ளதைப் போல் காயடிப்பு முறை மற்றும் 30 ஆண்டு சிறை தண்டனை வழங்கலாம்' என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

     கற்பழிப்பு தொடர்பான வழக்குகளை, விரைவு கோர்ட்டுகள் மூலம் விசாரித்து, மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு வழங்க வேண்டும் என்பது உட்பட, பல விதிமுறைகள் சேர்க்கப்பட்டுள்ளன.மேலும், சிறார்களுக்கான வயது வரம்பை குறைக்கவும், 15 வயதுக்கு உட்பட்டோரை மட்டும், சிறார் சட்ட வரம்புக்குள் கொண்டு வரவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

    சிந்திக்கவும்: இருக்கிற சட்டங்களே போதுமானவை அதை கொண்டே தண்டிக்க முடியும். கற்பழிப்பு குற்றத்தில் ஈடுபட்டதற்கு புதுக்கோட்டை செசன்சு நீதிமன்றம் பிரேமானந்தா சாமியாருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்தது.

     இதுபோல் தீர்ப்புகள் பல வழங்கப்பட்டுள்ளன அதனால் இருக்கும் சட்டங்கள் போதுமானது அதை வைத்து நடவடிக்கைகளை எடுப்பது யார்? என்பதே இங்கே கேள்வி. ராணுவ மற்றும் போலீஸ் பொறுக்கிகள் இதுபோன்று கற்பழிப்பு சம்பவங்களில் ஈடுபடும்பொழுது இதே சட்டம் பாராபட்சம் இல்லாமல் பாயுமா?

     ஆயிரம் சட்டங்களை போட்டு எதற்கு அதை செயல்படுத்தும் அரசு இயந்திரம் சாக்கடையாக இருக்கும் பட்ச்சத்தில் அது சாதாரண பலவீனமான குடிமக்கள் மேல்தான் பாயும் என்பதில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. இதே கற்பழிப்பு சம்பவங்களில் ஒரு மந்திரியின் மகனோ அல்லது ஒரு அதிகாரியின் மகனோ ஈடுபட்டால் சட்டம் வளைந்து கொடுத்து விடும் என்பதே இதில் உண்மை.


*இந்த சாக்கடை அரசு இயந்திரங்களா சட்டங்களை செயல்படுத்த போகின்றன. என்று லஞ்சம் ஒழிகிறதோ அப்பொழுதுதான் இது போன்ற சட்டங்கள் செயல்பட ஆரம்பிக்கும்*
*மலர் விழி*

எகிப்து:எதிர்கட்சியினருக்கு எதிரான தேசத்துரோக குற்றம் ரத்து!

31 Dec 2012 Egypt drops treason charges against opposition
 
    கெய்ரோ:சர்வதேச அணுசக்தி ஏஜன்சியின் முன்னாள் தலைவர் முஹம்மது அல் பராதி, முன்னாள் அரபு லீக் பொதுச் செயலாளர் அம்ர் மூஸா, டிக்னிடி கட்சியின் தலைவர் ஹம்தீன் ஸபாஹி ஆகியோர் மீதான தேசத்துரோக குற்றத்தை எகிப்திய அரசு வாபஸ் பெற்றுள்ளது.
 
    அதிபர் முர்ஸியின் அரசை கவிழ்க்க முயற்சி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டதை தொடர்ந்து இவர்கள் மீது தேசத்துரோக குற்றம் சுமத்தப்பட்டது. அரசியல் சாசனத்திற்கு எதிராக எகிப்தின் பல்வேறு பகுதிகளில் எதிர்கட்சியினர் நடத்திய போராட்டம் வன்முறையில் முடிந்ததை தொடர்ந்து வழக்கறிஞரான அஸ்கலானி என்பவர் எதிர்கட்சி தலைவர்கள் மீது வழக்கு தொடர்ந்தார்.
 
    முர்ஸியை கவிழ்க்க எதிர்கட்சி தலைவர்கள் சதித்திட்டம் தீட்டினார்கள் என்பது அஸ்கலானியின் குற்றச்சாட்டு. ஆனால், புகாரை வாபஸ் பெற அஸ்கலானி முடிவுச் செய்ததால் அரசு இவர்கள் மீதான தேசத்துரோக குற்றத்தை வாபஸ் பெற தீர்மானித்தது. ஜனநாயக தத்துவங்களை மதிப்பதால் வழக்கை வாபஸ் பெறுவதாக அஸ்கலானி தெரிவித்தார். நன்றி. தூது

பள்ளிகளுக்கு துப்பாக்கி எடுத்துச்செல்ல அமெரிக்காவில் ஆசிரியர்களுக்கு அனுமதி!

31 Dec 2012 US School Teachers Could Carry Guns To School
 
    வாஷிங்டன்:சாண்டி ஹூக் பள்ளியில் ஆடம் லான்சா என்பவனால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 20 குழந்தைகள் உட்பட 26 பேர் கொல்லப்பட்டதை அடுத்து அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்கள் ஆசிரியர்களை துப்பாக்கி எடுத்துவர அனுமதிப்பது குறித்து ஆலோசைனை செய்து வருகின்றனர்.
 
    இதனைத் தொடர்ந்து உதாஹ் ஷூட்டிங் ஸ்போர்ட்ஸ் கவுன்சில் கடந்த வியாழன் அன்று ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க கட்டணம் தேவையில்லை என்று அறிவித்துள்ளது. இதுபற்றி அந்நிறுவனத்தின் நிர்வாக உறுப்பினர் பில் ஸ்காட் தங்களிடம் 180 இடங்கள் மட்டுமே உள்ளது என்றும் ஆனால் 400 இடங்கள் தேவைப்படுவதாகவும். மேலும் தாம் அனைத்து ஆசிரியர்களும் ஆயுதம் வைத்திருக்குமாறு கூறவில்லை ஆனால் அவர்கள் பயிற்சி எடுக்க விரும்பினால் உதாஹில் பயிற்சி எடுக்க அவர்களுக்கு முழு உரிமை உண்டு என்று கூறியுள்ளார்.
 
   இதற்கிடையில் அரிசோனாவின் அட்டர்னி ஜெனரல் டோம் ஹோர்னே ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு ஆசியரையோ அல்லது நிர்வாகியையோ சாண்டி ஹூக் துப்பாக்கி சூடு சம்பவங்கள் மாதிரி நடைபெறாமல் இருக்க பயிற்சி அளிக்கலாம் என்று திட்டத்தை முன்வைத்துள்ளார்.
 
    மேலும் ப்ளோரிடா, மின்னெசோட்டா, ஒரேகோன் தெற்கு டகோட்டா மற்றும் டென்னிசி ஆகிய மாகாணங்களில் பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் துப்பாக்கி எடுத்துவர அனுமதி அளிக்கும் சட்டத்தை ஏற்ற சட்டவல்லுனர்கள் வாக்குறுதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒவ்வொரு பள்ளியிலும் ஆயுதம் ஏந்திய போலிஸ் அதிகாரி ஒருவரை நியமிக்க தேசிய ரைபிள் கழகத்தின் நிர்வாக இயக்குனர் வைனே லா பிஎர்ரெ பரிந்துரை செய்துள்ளார். அமெரிக்காவில் இதுவரை 4.5 மில்லியன் ஆயுதங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நன்றி, தூது

மலேகான் குண்டுவெடிப்பு:ஹிந்துத்துவா தீவிரவாதி குற்றத்தை ஒப்புக்கொண்டான்!

31 Dec 2012 Key accused Manohar Singh admits involvement in 2006 Malegaon bomb blasts
 
    மும்பை:2006-ஆம் ஆண்டு மலேகானில் குண்டுவைத்ததை அண்மையில் கைது செய்யப்பட்ட ஹிந்துத்துவா தீவிரவாதி மனோகர் சிங் ஒப்புக்கொண்டதாக என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இருந்து கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்ட மனோகரை என்.ஐ.ஏ மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. மலேகான் குண்டுவெடிப்பில் சங்க்பரிவார அமைப்புகளின் பங்கு வெளியான பிறகு நடக்கும் முதல் கைது இதுவாகும்.
 
    மனோகர் சிங்கிடமிருந்து ஏராளமான தகவல்கள் கிடைத்துள்ளதாக சிறப்பு அரசு தரப்பு வழக்குரைஞர் ரோஹிணி ஸாலியான் கூறினார். மனோகர் சிங்கை கஸ்டடியில் வைத்து விசாரித்தால் இதர குற்றவாளிகளைக் குறித்த தகவல் கிடைக்கும் என்று என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
 
    2007-ஆம் ஆண்டு சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயில் குண்டுவெடிப்பு வழக்கில் கைதான ராஜேந்தர் சவுதரியிடமிருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் மனோகர் சிங் கைது செய்யப்பட்டான். சவுதரிக்கு எதிராக நீதிமன்றம் ப்ரொடக்‌ஷன் வாரண்டை பிறப்பித்திருந்தது.
மாலேகானில் 2006-ஆம் ஆண்டு செப்டம்பர் 8ஆம் தேதி நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 37 பேர் உயிரிழந்தனர்; 100க்கும் அதிகமானோர் காயமுற்றனர். நன்றி, தூது

ஜந்தர்மந்தரில் ஏ.பி.வி.பி தீவிரவாதிகளின் வன்முறை! கைது செய்தவர்களை விடுவித்த போலீஸ்!

31 Dec 2012 Violence mars peaceful protests as ABVP clash with cops
 
     புதுடெல்லி:டெல்லி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு எதிராக ஜந்தர்மந்தரில் ஞாயிற்றுக்கிழமை நடந்த போராட்டத்தில் வன்முறையை கட்டவிழ்த்துவிட்ட ஏ.பி.வி.பி ஹிந்த்துவா தீவிரவாதிகளை போலீஸ் கைது செய்துவிட்டு மேலிட உத்தரவின்பேரில் விடுவித்துள்ளது.
    
    ஜந்தர் மந்தரில் இருந்து கன்னாட்ப்ளேஸை நோக்கி ஊர்வலம் செல்ல முயன்றதை போலீஸ் தடுத்தபொழுது வன்முறை உருவானது. போலீஸ் வைத்திருந்த இரும்பு தடுப்புகளை அகற்றிவிட்டு முன்னேறிய ஏ.பி.வி.பியினரை கூடுதல் போலீசார் வந்து தடுத்தனர். வன்முறைக்கு தலைமை தாங்கிய ஐந்து பேரை போலீஸ் கைது செய்தது. ஆனால்,மேலிட உத்தரவால் பின்னர் விடுவித்தது.
 
     மாணவியின் மரணத்திற்கு அனுதாபம் தெரிவிக்க ஜந்தர்மந்தருக்கு வந்த டெல்லி முதல்வர் ஷீலா தீட்ஷித்தை மற்றொரு ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்பான பகத்சிங் க்ராந்தி சேனாவின் உறுப்பினர்கள் தடுத்து திருப்பி அனுப்பினர். ஷீலா தீட்ஷித்தை தடுக்கும்போது ஏற்பட்ட ரகளைக்கு இடையே போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணொருவரை அவமதிக்கும் சம்பவமும் நடந்தது. ஷீலா தீட்ஷித்தை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுற்றி வளைக்கும் காட்சியை கேமராவில் பதிவுச் செய்துகொண்டிருந்த பெண்ணை, வெறிப்பிடித்த இளைஞன் ஒருவன் சில்மிஷம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நன்றி, தூது

குண்டுவெடிப்புகளுக்கு மூளையாக செயல்பட்ட ஹிந்துத்துவா அறிவுஜீவிகளை தேடும் பணி தீவிரம்!

31 Dec 2012 hindutva-terrorism
 
    புதுடெல்லி:இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் குண்டுவெடிப்புகளையும், கொலைகளையும் நிகழ்த்திய ஹிந்துத்துவா தீவிரவாத இயக்கங்களுக்கு ஆலோசனைகளை வழங்கிய அறிவுஜீவிகளை தேடும் பணியை தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ)தீவிரப்படுத்தியுள்ளது.
 
    குண்டுவைப்பதில் நிபுணர்களான ராஜேந்தர் சவுத்ரி, மனோகர்சிங் ஆகியோரை கைது செய்த என்.ஐ.ஏ, தலைமறைவாக உள்ள ராம்ஜி கல்சங்கரா, சந்தீப் டாங்கே ஆகியோரை விரைவாக பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
 
    இவர்களை கைது செய்தால் நாசவேலைகளின் பின்னணியில் மூளையாக செயல்பட்ட ஹிந்துத்துவா அறிவிஜீவிகளையும், சித்தாந்தவாதிகளையும் கைது செய்ய முடியும் என கருதுவதாக என்.ஐ.ஏ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
    மத்தியபிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்ஸின் பிரச்சாரக்காக பணியாற்றியவன் டாங்கே. எலக்ட்ரிகல் நிபுணரான ராம்ஜி கல்சங்கரா, ஹிந்துத்துவா பிரிகேடுகளுக்கு தேவையான குண்டுகளை தயாரித்துக் கொடுத்தவன் ஆவான். ஏராளமான இளைஞர்களுக்கு எலக்ட்ரிகல் நிறுவனங்களை துவக்க கல்சங்கரா உதவிச் செய்துள்ளான்.
 
    டாங்கே, ஜோஷி, ராம்ஜி கல்சங்கரா ஆகியோர் அடங்கிய ஹிந்துத்துவா தீவிரவாத கும்பல்தான் பல்வேறு முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் 2004 முதல் 2008 வரை வெடிக்குண்டு தாக்குதல்களுக்கு தலைமை வகித்தவர்கள் ஆவர். ஆனால், பாதுகாப்பு குறித்த பீதியால் டீம் லீடரான சுனில்ஜோஷியை ஹிந்துத்துவா கும்பல் கொலைச் செய்தது.
 
    ஹிந்துத்துவா பிரிகேடின் சித்தாந்தவாதி சுவாமி அஸிமானந்தா உள்ளிட்ட இன்னும் பல பெயர் வெளியில் வராத ஹிந்துத்துவா அறிவுஜீவிகளின் உத்தரவுகளை கீழ்மட்டத்தில் செயல்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தவர்கள் தாம் டாங்கேயும், ராம்ஜியும் ஆவர். இவர்களை கைது செய்தால் ஹிந்துத்துவா அறிவுஜீவிகளை குறித்த தகவல்கள் கிடைக்கும் என்று என்.ஐ.ஏ கருதுகிறது நன்றி, தூது

சிறை நிரப்பும் போராட்டம் : TNTJவின் மூடநம்பிக்கையை தகர்க்க ஜெயலலிதா திட்டம்!

   DEC29, மக்களின் மூடநம்பிக்கைகளை போக்க பிரச்சாரம் செய்த TNTJவினர் மீது தடியடி நடத்தியும், விழிப்படையாத TNTJவினர் "சிறை நிரப்பும் போராட்டம்" மூலம் தீர்வு காணமுடியும் என்ற, அவர்களது "மூடநம்பிக்கை"யை முறியடிக்கும் வகையில், முதல்வரின் நடவடிக்கை இருக்கும், என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

     கைது செய்யப்பட்டவர்களின் மீதான வழக்குகளையே வாபஸ் வாங்காத அரசு, உயரதிகாரிகளை இடைநீக்கம் செய்யவேண்டும் என்ற கோரிக்கையை எப்படி ஏற்கும்? எனவும் கேட்கின்றனர்.

    ஆளும் அதிமுக அரசு, சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுக்கும் மனநிலையில் இல்லை என்பதையும் கடந்து, அவர்களுக்கு "பதவி உயர்வு" வழங்கலாமா? எனவும் யோசித்து வருவதாகவும் தெரிகிறது.

    TNTJ அமைப்பினர், அனைத்து அமைப்புக்களோடும் ஒன்றுபட்டு செயல்பட்டால், நிலைமையே வேறாக இருக்கும், எனவும் விவரமறிந்தவர்கள் விவரிக்கின்றனர்.

    சம்மந்தப்பட்டவர்கள் சிந்திப்பார்களா?

Saturday, December 29, 2012

தமிழகத்தில் தொடரும் பெண்களுக்கு எதிரான பயங்கரம்!- வேலூரில் 4-ஆம் வகுப்பு மாணவியின் சடலம் மீட்பு!

29 Dec 2012
 
     வேலூர்:பெண் முதல்வர் ஆளும் தமிழகத்தில் மகளிருக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் தீவிரமடைந்து வருகின்றன. வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே 9 வயதான 4-ஆம் வகுப்பு மாணவி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். திருப்பத்தூர் அருகே ஆண்டியப்பனூரைச் சேர்ந்த ராமச்சந்திரனின் மகள் காயத்ரி, நேற்று மாலை விளையாடச் செல்வதாக கூறிவிட்டு வெளியே சென்றிருக்கிறார்.
 
    ஆனால் வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து சிறுமியை தேடிப் பார்த்த போது அருகிலுள்ள வாழைத்தோட்டத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது. இரவு 7.30 மணியளவில் உடலை கைப்பற்றிய குறிஞ்சாலப்பட்டு காவல்துறையினர் இன்று காலைதான் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளதாக கூறப்படுகிறது.
 
    கொலைசெய்யப்பட்ட மாணவியின் கன்னத்தில் காயங்கள் இருப்பதால் பாலியல் வன்கொடுமை முயற்சி நடந்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பாலியல் வன்கொடுமைக்கு சிறுமி ஆளாக்கப்பட்டாரா? என்பது பிரேத பரிசோதனை அறிக்கையில் தான் தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்தனர். மாணவி கொலை தொடர்பாக 10-ஆம் வகுப்பு மாணவர் ஒருவரிடம் குறிஞ்சாலப்பட்டு காவல்துறையினர் விசாரித்துவருகின்றனர். நன்றி, தூது

பெண்களுக்கு எதிரான குற்றங்கள்: ஜன-4க்குள் அறிக்கை அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

29 Dec 2012
 
    சென்னை:தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து வரும் 4 ஆம் தேதிக்குள் அறிக்கை அளிக்குமாறு தமிழக உள்துறை செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் தாதன்குளத்தைச் சேர்ந்த பேச்சியம்மாள் மகள் புனிதா பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யபட்டார்.
 
    இந்த சம்பவம் தொடர்பாக சுப்பையா என்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர் இந்த கொலை வழக்கு குறித்து நீதிமன்றம் தானே முன்வந்து விசாரனைக்கு எடுக்க கோரி வியாழக்கிழமை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி வெங்கட்ராமன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
 
    வழக்கை விசாரித்த நீதிபதி, தூத்துக்குடி மாணவி வழக்கை விசாரிக்கக் கோரி தொடரப்பட்ட பொது நல மனுவில் எந்த வித உள்நோக்கமும் இருப்பதாக தெரியவில்லை, எனவே இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது என்றார். மேலும் தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் குறித்து வருகிற 4-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கூறினார். நன்றி, தூது

செய்தி தொலைக்காட்சி சானல்கள் நீதிபதிகளா?: திக் விஜய் சிங் கடும் தாக்கு!

29 Dec 2012
 
     புதுடெல்லி:நீதிபதிகள் செய்ய வேண்டிய பணிகளை செய்தித் தொலைக்காட்சிகள் செய்கின்றன என்று காங்கிரஸ் பொது செயலாளர் திக்விஜய் சிங் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார். இளம் பெண் பாலியல் பலாத்கார சம்பவத்தை அடுத்து டெல்லியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பாக செய்தித் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பிய செய்திகளை அவர் இவ்வாறு விமர்சித்துள்ளார்.
 
     மத்தியப் பிரதேசத் தலைநகர் போபாலில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய திக்விஜய் சிங் இது தொடர்பாக மேலும் கூறியது:டெல்லியில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்ற போது காவல் நிலையம், வழக்குரைஞர்கள், நீதிபதிகள் ஆகியோர் செய்ய வேண்டிய வேலைகளை செய்தித் தொலைக்காட்சி உள்ளிட்ட மின்னணு ஊடகங்கள் மேற்கொண்டன.
 
     24 மணி நேரமும் செயல்படும் அவர்களுக்கு பரபரப்பான செய்திகள் வேண்டும் என்பதற்காக எல்லை மீறி நடக்கிறார்கள் என்றும், பரபட்சமாக செயல்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுகள் ஏற்கெனவே இந்தவகை ஊடகங்கள் மீது எழுந்துள்ளன.
 
     டெல்லி சம்பவத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்கியதில், காவலர் ஒருவர் மரணமடைந்தார். இது அவரது குடும்பத்துக்கு மிகப்பெரிய சோகம். காவல்துறைக்கு இழப்பு. ஆனால் அந்த போலீஸ்காரர் ஆர்ப்பாட்டக்காரர்களால் தாக்கப்படவில்லை என்று கூற தொலைக்காட்சி சேனல்களுக்கு பல சாட்சிகள் கிடைத்தார்கள். ஆனால் அவர் தாக்குதலுக்கு உள்ளானார் என்று கூற அந்த தொலைக்காட்சிகளுக்கு ஒருவர் கூட கிடைக்கவில்லை. ஒட்டுமொத்தமாக இவையெல்லாம் செய்தித் தொலைக்காட்சிகளுக்கான வேலை கிடையாது என்பதை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
 
     இதுபோன்ற தொலைக்காட்சி சேனல்களை நடத்துவர்களின் கருணையை தேசமே எதிர்பார்க்க வேண்டும் என்பதே அவர்களின் நோக்கமாக உள்ளது. இது போன்ற சேனல்களை நடத்துபவர்கள் குறுகிய நோக்கத்துடன் தங்கள் சுயநலத்துக்காக எதையும் செய்வார்கள் என்பதை மக்கள் உணர வேண்டும். அதே நேரத்தில் பத்திரிகைகள் இந்த விஷயத்தில் மிகவும் பொறுப்புடன் நடந்து கொண்டன என்று திக்விஜய் சிங் கூறினார். நன்றி, தூது

பா.ஜ.கவுடன் காங்கிரஸுக்கு ரகசிய உறவு: அரசு குழுக்களில் இருந்து ஷப்னம் ஹாஸ்மி ராஜினாமா!

Activist Shabnam Hashmi quits govt panels   29 Dec 2012
 
    புதுடெல்லி:சமூக ஆர்வலர் ஷப்னம் ஹாஸ்மி, அட்வைசரி போர்ட் ஆஃப் எஜுகேஷன்(சி.எ.பி.இ) உள்ளிட்ட ஐந்து அரசு குழுக்களில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் மோடியின் வெற்றிக்கு சாதகமாக காங்கிரஸ் கட்சி செயல்பட்டது என குற்றம் சாட்டி அவர் ராஜினாமா செய்துள்ளார்.
 
    அரசு சாரா அமைப்பான அன்ஹதின் ஸ்தாபக உறுப்பினரான ஷப்னம் ஹாஸ்மி, சி.எ.பி.இ , மவ்லானா ஆஸாத் எஜுகேஷன் ஃபவுண்டேசன், நேசனல் மானிட்டரிங் கமிட்டி ஃபார் மைனாரிட்டி எஜுகேஷன், தேசிய எழுத்தறிவு மிஷன் கவுன்சில், அஸெஸ்மெண்ட் அண்ட் மானிட்டரிங் அதாரிட்டி ஆஃப் ப்ளானிங் ஆகிய குழுக்களில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.
 
     மோடி அரசை வீழ்த்த நினைத்த ஒடுக்கப்பட மக்களுக்கு இழைக்கப்பட்ட வஞ்சனைக்கு தனது எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக அரசு குழுக்களில் இருந்து ராஜினாமா செய்துள்ளதாக ஷப்னம் ஹாஸ்மி தெரிவித்தார். மோடிக்கு எதிரான அலை வீசியது. ஆனால், தேர்தல் முடிவுகளில் மோடி எதிர்ப்பை காணமுடியவில்லை.
 
     மோடி வெற்றிப்பெற எவ்வித வாய்ப்பும் இல்லாமலிருந்தது. முறைகேடுகள் பலவும் நடந்துள்ளன. அதில் ஒரு பகுதியை நிறைவேற்றியது ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் முக்கிய கட்சியாகும் என்று காங்கிரஸ் கட்சியின் பெயரைக் குறிப்பிடாமல் ஷப்னம் ஹாஸ்மி தெரிவித்தார். நன்றி, தூது

சிறுபான்மையினரை பாதுகாப்பது அரசின் கடமை!: அஹ்லே ஹதீஸ் பொது செயலாளர்!

     29 Dec 2012 கோழிக்கோடு:சிறுபான்மை சமூகத்தினருக்கு உரிய அரசியல் சாசன ரீதியிலான உரிமைகளை அனுமதிப்பது மாறி மாறி வரும் அரசுகளின் கடமை என்று ஆல் இந்தியா அஹ்லே ஹதீஸ் அமைப்பின் பொது செயலாளர் மவ்லானா மஹ்தி அஸ்ஸலஃபி கூறியுள்ளார்.
 
     கேரள மாநிலத்தில் முஜாஹித் இயக்கத்தின் மாநில மாநாட்டையொட்டி நடந்த இளைஞர்கள் மாநாட்டை துவக்கி வைத்து மவ்லானா மஹ்தி உரையாற்றினார்.
 
     அவர் தனது உரையில் கூறியது:இளைஞர்கள் தீவிரவாத செயல்களின் பக்கம் செல்வதற்கு காரணம் சமூக சூழல் ஆகும். இந்த உண்மையை ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும். இந்திய மதசார்பற்ற கொள்கையின் மகத்துவத்தை பாதுகாக்க வேண்டும். இந்தியாவின் மதசார்பற்ற கொள்கை உலகிற்கு முன்மாதிரியாகும்.
 
    ஜனநாயகம் இந்தியாவில் இருப்பதால் தான் பன்முகத்தன்மையும் நீடிக்கிறது. நாட்டின் உயர்ந்த அரசியல்சாசனத்தின் நிழலில் தான் இந்தியாவில் முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் சலுகைகளை அனுபவிக்கின்றனர். ஜனநாயகத்தையும், மதசார்பற்ற கொள்கைகளையும் பலவீனப்படுத்தும் அணுகுமுறைகள் எவரிடமிருந்தும் உருவாக கூடாது. இவ்வாறு அவர் கூறினார். நன்றி, தூது

முஸ்லிம்கள் மீது தீவிரவாத குற்றம்:திட்டமிட்ட சூழ்ச்சி – காஸ்மி!

 journalist syed mohammed ahmad kazmi   29 Dec 2012
 
    மலப்புரம்:தீவிரவாத குற்றம் சாட்டி நாட்டின் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள நிரபராதிகளின் விடுதலைக்காக பொது அமைப்பு ஒன்று உருவாக்கப்படும் என்று பிரபல மூத்த பத்திரிகையாளரும், இஸ்ரேல் தூதரக அதிகாரியின் காரில் குண்டுவெடித்த சம்பவத்தில் அநியாயமாக கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலையான செய்யத் முஹம்மது அஹ்மத் காஸ்மி கூறியுள்ளார்.
 
    கேரள மாநிலம் மலப்புரத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் காஸ்மி கூறியது:ஜோடிக்கப்பட்ட வழக்குகளில் தீவிரவாதத்தின் இரைகளாக ஏராளமான முஸ்லிம் இளைஞர்கள் இந்தியாவின் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இஸ்ரேல் தூதரக கார் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு நான், 7 மாதம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது இதைப்போல ஏராளமானோரை சிறையில் காண நேர்ந்தது.
 
    முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளுக்கு வரும் சிலர் இஸ்ரேல்-அமெரிக்க எதிர்ப்புணர்வை ஊட்டி இளைஞர்களை தீவிரவாதத்தின் பக்கம் இழுத்து பிரயோகிக்கின்றனர். இவ்வாறு முஸ்லிம் இளைஞர்களிடம் தீவிரவாத சிந்தனையை வளர்த்தி அவர்கள் பொய்வழக்குகளில் சிறையில் அடைக்கப்படும் போது சம்பந்தப்பட்டவர்கள் மாயமாகிவிடுவார்கள். மிகவும் திட்டமிட்ட சூழ்ச்சி இந்த நடவடிக்கைகளின் பின்னால் உள்ளது. ஊடகவியலாளர்களில் சிலர் புலனாய்வு ஏஜன்சிகளின் கண்டுபிடிப்புகளை உண்மையான செய்திகளாக வெளியிடுகின்றனர்.
 
    அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக தொடர்ந்து எழுதியதால் இஸ்ரேல் தூதரக குண்டுவெடிப்பு வழக்கில் என்னை குற்றவாளியாக்கி சிறையில் அடைத்தனர். முஸ்லிம் நாடுகளில் ஜனநாயகத்திற்காக நடக்கும் போராட்டங்களை அதிகமாக அஞ்சுவது அமெரிக்காவும், இஸ்ரேலும் ஆகும். பிராந்தியத்தில் இவர்களின் கட்டுப்பாடு கைவிட்டுப் போகும் என்பதே இதற்கு காரணம்.
 
    எகிப்தில் தஹ்ரீர் சதுக்கத்தில் நடந்த புரட்சியின் அலை ஒலிகள் இந்தியாவிலும் எட்டிவிட்டது என்பதன் அடையாளம் தான் கடந்த சில தினங்களாக டெல்லியில் நடக்கும் போராட்டங்கள் சுட்டிக்காட்டுகின்றன. அராஜகத்திற்கு எதிரான இளைஞர்களின் கோபத்தை கண்டும் காணாமல் நடிப்பதற்கு ஆட்சியாளர்களால் முடியாது. இவ்வாறு காஸ்மி கூறினார். நன்றி, தூது

ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் சார்பாக இன்று(29-12-2012) சென்னையில் இஸ்லாமிய கலாச்சார பாதுகாப்பு மாநாடு!

 aiic   29 Dec 2012
 
    சென்னை:நாடு மற்றும் சமூகத்தில் நிலவும் கலாச்சார சீரழிவுகளை களையவும், களங்கமில்லா கலாச்சாரத்தை பாதுகாக்கும் நோக்குடனும் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் சார்பாக இன்று (29-12-2012) சென்னையில் இஸ்லாமிய கலாச்சார பாதுகாப்பு மாநாடு நடைபெற உள்ளது.
 
     இது தொடர்பாக ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் நிர்வாகிகள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பது:
 
    கலாச்சார பாரம்பரியமிக்க நம் நாட்டின் இன்றைய நிலை மிகவும் வேதனையளிப்பதாக உள்ளது. தனி மனித ஒழுக்கங்கள், குடும்ப உறவு முறைகள், சமூக வாழ்வு என அனைத்தும் சிதைந்து வருகிறது. சுயநலம், பாலியல் வன்கொடுமைகள், தகாத உறவுகள், கொலை, கொள்ளை, மது, விபச்சாரம், பெண்களை போகப்பொருளாக பயன்படுத்துதல், கற்பழிப்பு போன்ற சமூக தீமைகள் தினமும் அரங்கேறிக் கொண்டே இருக்கிறது.
 
    நம் நாட்டில் புரையோடிக் கொண்டிருக்கின்ற இத்தகைய கலாச்சார சீரழிவுகளை முற்றிலும் களைந்து, களங்கமில்லா கலாச்சாரத்தை பாதுகாக்கும் நோக்கத்தோடு ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் சார்பாக வருகின்ற 29-12-2012 அன்று சென்னை எழும்பூரில் உள்ள ஃபைஸ் மஹாலில் இஸ்லாமிய கலாச்சார பாதுகாப்பு மாநாடு நடைபெறவுள்ளது.
 
    மாநில அளவில் இஸ்லாமிய அறிஞர்கள் பங்கேற்கும் இம்மாநாட்டில் ஆலிம்கள் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் எனும் தலைப்பில் கருத்தரங்கமும், கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் கண்காட்சி, மலர் வெளியீடு மற்றும் மாபெரும் பொதுக்கூட்டமும் நடைபெறவுள்ளது.
 
    ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் தேசிய தலைவர் மெளலானா மெளலவி உஸ்மான் பேக் ரஷாதி, தேசிய நிர்வாகிகள் மற்றும் தமிழகத்தின் தலை சிறந்த ஆலிம்கள் அறிஞர்கள் கலந்து கொண்டு கருத்துரை மற்றும் சிறப்புரையாற்ற இருக்கின்றனர். அடுத்த தலைமுறையை ஒழுக்க விழுமியங்களோடு வார்த்தெடுக்கவும், அநாகரீக கலாச்சாரங்களை விட்டு நம் நாட்டை பாதுகாக்கவும் நடத்தப்படும் இம்மாநாட்டில் அனைவரும் கலந்து பயனடைய ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தீபால்பூர்:ஹிந்துத்துவா தீவிரவாதிகளின் புகலிடம்!

OLYMPUS DIGITAL CAMERA   29 Dec 2012 

 
     புதுடெல்லி:இந்தியாவில் பல்வேறு பெயர்களில் இயங்கும் ஹிந்துத்துவா தீவிரவாதிகளுக்கு புகலிடமாக மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டத்தில் உள்ள தீபால்பூர் திகழுகிறது. அண்மையில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த குண்டு வெடிப்புகள் தொடர்பாக தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) இப்பகுதியில் இருந்து 3 ஹிந்துத்துவா தீவிரவாதிகளை கைது செய்தது.
 
    ஹிந்துத்துவா தீவிரவாதிகள் குண்டு வெடிப்புகளையும், கொலைகளையும் சதித்திட்டம் தீட்டுவதும், செயல்படுத்துவதும், அவற்றை நடத்திவிட்டு தலைமறைவாக இருப்பதும் தீபால்பூரில் ஆகும். சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயில் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியான ஹிந்துத்துவா தீவிரவாதி ராஜேந்தர் சவுத்ரி என்ற சமுந்தரை என்.ஐ.ஏ சில தினங்களுக்கு முன்பாக தீபால் பூரில் இருந்து கைது செய்தது.
 
    கொல்லப்பட்ட ஆர்.எஸ்.எஸ் தீவிரவாத இயக்கத்தின் பிரச்சாரக் சுனில் ஜோஷிதான் இந்தியாவில் நடந்த பல்வேறு குண்டு வெடிப்புகளின் பின்னணியில் முக்கிய சூத்திரதாரியாக செயல்பட்டான் என்று ராஜேந்தர் சவுத்ரி என்.ஐ.ஏவுக்கு வாக்குமூலம் அளித்துள்ளான்.
 
    1999-2000 காலக்கட்டத்தில் சுனில் ஜோஷி தீபால்பூருக்கு வந்துள்ளான். பின்னர் முஸ்லிம்களுக்கு எதிராக தாக்குதல்கள் நடத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு பெயர்களில் அமைப்புகளை உருவாக்கி அவற்றை ஒருங்கிணைப்பதில் முனைப்புடன் செயல்பட்டுள்ளான். அந்தந்த பகுதிகளில் ஹிந்துத்துவா தீவிரவாத குழுக்களுக்கு முக்கிய பணிகளை அளித்தவனும் சுனில் ஜோஷி ஆவான்.
 
   2003-ஆம் ஆண்டு குர்தி கிராமத்தில் காங்கிரஸ் தலைவர் ப்யார்சிங் நினாமாவின் கொலையில் ஜோஷியின் தொடர்பு வெளியானதை தொடர்ந்து அவன் தீபால்பூரில் தலைமறைவாக இருந்துள்ளான். நினாமாவின் கொலை வழக்கை தற்போது என்.ஐ.ஏ விசாரித்து வருகிறது. நினாமாவின் கொலையில் அண்மை பகுதிகளைச் சார்ந்த மேலும் 2 பேருக்கு தொடர்பு இருப்பதாக என்.ஐ.ஏவிடம் சவுத்ரி வாக்குமூலம் அளித்துள்ளான்.
 
    தீபால்பூரில் உள்ள ரெஷம் கேந்த்ரா என்ற பகுதியில் வைத்து வெடி குண்டுகளை வெடிக்க வைத்து சுனில் ஜோஷி சோதனை நடத்தியுள்ளான். ஆனால், இச்சோதனை தோல்வியை தழுவியது. கிராம எல்லையில் உள்ள ஒரு பசுக்களை கட்டும் இடத்தில் குண்டுகளை ஜோஷி பதுக்கி வைத்துள்ளான். 2007 டிசம்பர் மாதம் ஜோஷி மர்மமான முறையில் கொல்லப்பட்டான்.
 
    ஜோஷி பல தகவல்களின் ரகசியங்கள் குறித்து அலட்சியமாக செயல்பட்டதால் ராஜேந்தர் சவுத்ரியே அவனை கொலை செய்திருக்கலாம் என கருதப்படுகிறது. ஆனால், ஜோஷி கொல்லப்பட்டவுடன் கமல் சவுகான், டான் சிங், தேஜ்ராம், சஞ்சீவ் உபாத்யாய் ஆகியோர் அவ்விடத்தை காலி செய்துவிட்டனர்.
 
    சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு, மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு, மலேகான் குண்டுவெடிப்பு, அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடைய இதர நான்கு பேரையும் தீபால் பூரில் இருந்து என்.ஐ.ஏ கைது செய்துள்ளது.
 
    இப்பகுதியில் வேறு சிலரும் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் கைதுகள் நிகழும் எனவும் என்.ஐ.ஏ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 நன்றி, தூதூ

தடா, பொடாவைவிட கொடுமைமையான சட்டமான யு.ஏ.பி.ஏ உடனே நீக்க வேண்டும்-என்.சி.ஹெச்.ஆர்.ஓ




      மனித உரிமை இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பு (என்.சி.ஹெச்.ஆர்.ஓ) சார்பாக ‘சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம்’ பற்றிய கலந்தாய்வுக் கூட்டம் 20.12.2012 மாலை 5.00 மணியளவில் சென்னையில் நடைபெற்றது.என்.சி.ஹெச்.ஆர்.ஓ.வின் மாநில செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர். ஏ. ராஜா முஹம்மது வரவேற்புரையாற்றினார். மாநில பொதுச்செயலாளர் வழக்கறிஞர் ஏ. முஹம்மது யூசுப் துவக்கவுரையாற்றினார். மனித உரிமைகளுக்கான மக்கள் கழகத்தின் தலைவர் (PUHR) பேரா. அ. மார்க்ஸ் யு.ஏ.பி.ஏ. சட்டத்தின் கொடூரத்தன்மை குறித்து அறிமுக உரையாற்றி விவாதத்தை துவக்கி வைத்தார்.


     வழக்கறிஞர் சத்ய சந்திரன் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற மனித உரிமை வழக்கறிஞர்கள், சிவில் உரிமைகளுக்கான மக்கள் கழகம் (PUCL), அரசியல் கைதிகள் விடுதலைக்கான கூட்டமைப்பு (CRPP) உள்ளிட்ட மனித உரிமை அமைப்புகளைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்கள், சட்டக்கல்லூரி மாணவர்கள், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, கேம்பஸ் ஃப்ரண்ட் மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
    மனித உரிமைகளுக்கு எதிரான சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் [Unlawful Activities (Prevention) Act, 1967 ] தற்போது 3வது முறையாக திருத்தப்பட்டுள்ளது. நடப்பு பாராளுமன்ற கூட்டத்தொடரில் மக்களவையில் கடந்த நவம்பர் 30 அன்று மத்திய அரசு விரிவான விவாதங்களை அனுமதிக்காமல் திருத்தியுள்ளது.

     1967ம் ஆண்டு இயற்றப்பட்ட இந்தச் சட்டத்தில் கடந்த 2004ம் ஆண்டு ‘பொடா சட்டம்’ ரத்து செய்யப்பட்டவுடன் அதில் இருந்த கொடும் பிரிவுகள் சட்டத்திருத்தம் என்ற பெயரில் யு.ஏ.பி.ஏ. சட்டத்தில் சேர்க்கப்பட்டன. அதன்பிறகு 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் மும்பை தாஜ் ஹோட்டல் தாக்குதல் சம்பவத்தின் போது தேசத்தில் நிலவிய தீவிரவாத பீதியை சாதகமாக்கிக்கொண்டு மத்திய அரசு 2வது முறையாக இச்சட்டத்தை திருத்தி அதன் கடுமையை அதிகரித்தது. இப்போது 3வது முறையாக மீண்டும் திருத்தப்பட்டு இன்னும் பல கொடும் பிரிவுகள் சேர்க்கப்பட்டன.

     தடா, பொடா போன்ற கருப்புச் சட்டங்களை பற்றி மக்களிடையே இருந்த விழிப்புணர்வு போன்று இந்த யு.ஏ.பி.ஏ. சட்டத்தை பற்றி விழிப்புணர்வு இல்லை. தீவிரவாதம் என்ற பெயரில் முஸ்லிம் இளைஞர்களும், மாவோயிசம், நக்சலிசம் என்ற பெயரில் தலித் மற்றும் பழங்குடியின மக்களும் இந்த சட்டத்திற்கு இரையாகிக் கொண்டிருக்கின்றனர்.
    கருத்துரிமை (Freedom of Expression), அமைப்பாக ஒன்று சேர்ந்து செயல்படும் உரிமை (Freedom of Association) போன்ற அரசியலமைப்புச் சட்ட உரிமைகளும், அரசியல் உரிமைகளும் , ஜனநாயக உரிமைகளும் (Democratic Rights) இச்சட்டத்தின் மூலம் நிர்மூலமாக்கப்படுகின்றன.

     இச்சட்டம் பற்றி மக்களிடையே நிலவும் விழிப்புணர்வின்மை, இச்சட்டத்தை எதிர்த்து எதுவும் பேசாமல்அமைதி காக்கும் மவுனமான நிலை அல்லது இந்த கருப்புச் சட்டத்திற்கு எதிரான போராட்டக்களத்தில்வெறும் பார்வையாளர்களாக மட்டும் இருக்கும் நிலை ஆகியவை ஜனநாயகத்திற்கு ஏற்பட்டிருக்கும் மிகப்பெரும் ஆபத்தாகும். அதுமட்டுமல்ல, ஜனநாயகத்தை பின்பற்றும் மக்களுக்கும் இது ஆபத்தான அறிகுறியாகும்.

     எனவே, இந்த யு.ஏ.பி.ஏ. சட்டத்தின் கொடூரம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், இச்சட்டத்திற்கெதிராக வீரியமிக்க மக்கள் திரள் போராட்டத்தை பொதுத்தளங்களில் எடுத்துச் செல்லவும், இச்சட்டத்தை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தி ஒரு தொடர் பிரச்சார இயக்கத்தை துவக்க இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.“யு.ஏ.பி.ஏ. எதிர்ப்பு கூட்டியக்கம்” என்ற பெயரில் இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தையும், போராட்டத்தையும் எடுத்துச் செல்ல தீர்மானிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் உள்ள மனித உரிமை ஆர்வலர்கள்,வழக்கறிஞர்கள், மனித உரிமை அமைப்புகள், சமூக இயக்கங்கள், தலித் அமைப்புகள், ஒத்த கருத்துடைய அரசியல் கட்சிகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர் பிரச்சாரம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.

     துண்டறிக்கை விநியோகம், மாவட்ட வாரியாக அரங்கக்கூட்டங்கள், அறிவுசார் விவாதங்கள், அச்சு ஊடகம் மற்றும் காட்சி ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடல், கல்லூரி மாணவ, மாணவிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது உள்ளிட்ட பிரச்சார நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன.மேலும், இப்பிரச்சாரத்தில் யு.ஏ.பி.ஏ.வைப் போன்ற மற்றொரு கருப்புச்சட்டமான ‘ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தையும்’ (AFSPA) ரத்து செய்ய இந்த இயக்கம் மத்திய அரசை வலியுறுத்தும்.இந்தப் போராட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் தங்களை இணைத்துக் கொண்டு யு.ஏ.பி.ஏ. என்ற கருப்புச் சட்டத்திற்கெதிரான வலுவான போராட்டத்தை எடுத்துச் செலுமாறு ‘யு.ஏ.பி.ஏ. எதிர்ப்பு கூட்டியக்கம்’ கேட்டுக் கொள்கிறது.





கலந்து கொண்டவர்கள்:


1. வழக்கறிஞர். ஏ. முஹம்மது யூசுப், மாநில பொதுச்செயலாளர், (NCHRO)
2. பேரா. அ. மார்க்ஸ், தலைவர், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம் (PUHR)
3. வழக்கறிஞர். சத்ய சந்திரன், சென்னை உயர்நீதிமன்றம்
4. வழக்கறிஞர். கேசவன், செயலாளர், அரசியல் கைதிகள் விடுதலைக்கான கூட்டமைப்பு (CRPP)
5. வழக்கறிஞர். உதய பானு, சென்னை உயர்நீதிமன்றம்
6. வழக்கறிஞர். எஸ். ரஜினிகாந்த், சென்னை உயர்நீதிமன்றம்,
7. கே.எஸ்.எம். இப்ராஹிம் (எ) அஸ்கர், மாநில பொருளாளர், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
8. வழக்கறிஞர். எம். ஜெய்னுலாப்தீன், சென்னை உயர்நீதிமன்றம்
9. வழக்கறிஞர். எஸ்.டி. முகம்மது முஸ்தகீம் ராஜா, சென்னை உயர்நீதிமன்றம்,
10. வழக்கறிஞர். நாகா ஷைலா, சென்னை உயர்நீதிமன்றம், சிவில் உரிமைகளுக்கான மக்கள் கழகம்
(PUCL)
11. வழக்கறிஞர். எஸ். முகம்மது அன்ஸர், சென்னை உயர்நீதிமன்றம்,
12. வழக்கறிஞர். டி. அசந்தாமணி, சென்னை உயர்நீதிமன்றம்,
13. வழக்கறிஞர். ஏ. ராவுத்தர் நயினா முகம்மது, சென்னை உயர்நீதிமன்றம்,
14. வழக்கறிஞர். ஏ. ராஜா முகம்மது, சென்னை உயர்நீதிமன்றம், (NCHRO, State Executive Committee Member)
15. முஹம்மது தம்பி, சட்டக்கல்லூரி மாணவர், திருச்சி (மாநில தலைவர், கேம்பஸ் ஃப்ரண்ட்)
16. வழக்கறிஞர். முஹம்மது ஃபைசல், சென்னை உயர்நீதிமன்றம்
17. வழக்கறிஞர். ஆர்.ஏ. சக்கூர், சென்னை உயர்நீதிமன்றம்
18. வழக்கறிஞர். எஸ்.கே. முஹம்மது சாகுல் ஹமீது, சென்னை உயர்நீதிமன்றம், (SDPI)
19. எஸ்.கே. சையது இல்யாஸ், சட்டக்கல்லூரி மாணவர், சென்னை
20. வழக்கறிஞர். பி. விமல் ராஜ், சென்னை உயர்நீதிமன்றம்

குஜராத் : ஓட்டுப்பதிவின்போது "துப்பாக்கிச்சூடு" நடத்தி வெற்றி பெற்ற "பாஜக. எம்.எல்.ஏ" கைது!

   DEC29, குஜராத்தில் தேர்தல் நாளன்று 8 ரவுண்டு துப்பாக்கிச்சூடு நடத்தி, வன்முறையால் மக்களை அச்சுறுத்தி, வெற்றி பெற்ற "சஹேரா" தொகுதி எம்.எல்.ஏ. "ஜெட்டாபாய் பர்வாட்" நேற்று (28/12) கைது செய்யப்பட்டார்.

     குஜராத் "தேர்தல் வன்முறை வெறியாட்டங்கள்" குறித்து எந்த மீடியாவும் வாய் திறக்காத நிலையில், இதுபோன்ற பிரச்சினைகள் தற்போது வெளிவரத்துவங்கியுள்ளது.

     தேர்தல் நாளன்று துப்பாக்கிச்சூடு நடத்தி, வன்முறையில் ஈடுபட்டு வெற்றி பெற்ற ஜெட்டாபாய், அன்றே தலைமறைவாகி விட்டார்.

     தலைமறைவு குற்றவாளியான "நரேந்திரமோடி"யின் நண்பர் ஜெட்டா பாயின் "முன்ஜாமீன்" மனுவை மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்ததையடுத்து, நேற்று பா.ஜ.க. எம்.எல்.ஏ. "ஜெட்டாபாய் பர்வாட்" கைது செய்யப்பட்டார்.
 
     கைது செய்யப்பட்டுள்ள பாஜக எம்.எல்.ஏ. இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

     "சஹேரா" தொகுதி வன்முறை தொடர்பான இந்த வழக்கில், எம்.எல்.ஏ.உடன் மேலும் 9 குண்டர்கள் தேடப்பட்டு வருகிறார்கள், என்பதும் குறிப்பிடத்தக்கது.

"ஸ்லீப்பர் செல்" : தினமணியின் விஷமச்சொல்!

DEC29, துப்பாக்கி திரைப்படத்தில், முஸ்லிம்களுக்கெதிராக சித்தரிக்கப்பட்ட "ஸ்லீப்பர் செல்" என்ற சொல்லாடலை, டெல்லி காவல்துறை கமிஷனர் சொன்னதாக, பொய்யான "விஷமம்" செய்து, தனது அரிப்பை தீர்த்துக்கொண்டுள்ளது, தினமணி.
 
     டெல்லி மாநகர காவல் துறை சிறப்பு ஆணையர் பி.என்.அகர்வால் அளித்த பேட்டியில், "ஒரு இடத்தில் கூட ஸ்லீப்பர் செல் என்ற வார்த்தையை பயன்படுத்தாத நிலையில்" வேண்டுமென்றே "விஷம" எண்ணத்துடன் இணைய தளத்தில் செய்தி வெளியிட்டுள்ளது தினமணி.
     அது மட்டுமல்ல, கமிஷனரின் பேட்டி முழுவதும் சிதைக்கப்பட்டு, தனது கற்பனைக்கேற்ப முஸ்லிம் விரோத எண்ணத்துடன் "கதை" அளந்துள்ளது, காவி பத்திரிகை.

Friday, December 28, 2012

இஸ்ரேல் இவ்வாண்டு கைது செய்த ஃபலஸ்தீன் குழந்தைகளின் எண்ணிக்கை – 900!

Israel arrests 900 Palestinian children in 2012   28 Dec 2012       
 
    டெல் அவீவ்:இஸ்ரேல் ராணுவம் இவ்வாண்டு 900 ஃபலஸ்தீன் சிறார்களை கைது செய்துள்ளதாக ஃபலஸ்தீன் சிறைக்கைதிகளின் விவகாரங்களுக்கான அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது.
 
     கடந்த ஆண்டு கைது செய்யப்பட்ட சிறார்கள் 700 பேர் ஆவர். ஃபலஸ்தீன் சிறார்களை இஸ்ரேல் ராணுவம் கொடூரமாக சித்திரவதைச் செய்வதாக அறிக்கை கூறுகிறது. கையும், காலும் கட்டி பல மணிநேரம் சிறையில் விசாரிக்கப்படுவது வழக்கமாகும். குற்றங்களை ஒப்புக்கொள்வதற்காக இஸ்ரேல் ராணுவம் கொடூரமாக சித்திரவதைச் செய்கிறது. சில சிறார்களை அதிக நேரம் மழையில் நிறுத்துவார்கள்.
 
    விடுதலையாகும் பெரும்பாலான குழந்தைகளுக்கு மனநோய் பீடிக்கப்பட்டுள்ளது. சிறையில் பாதிக்கப்படும் சிறார்களுக்கு மருத்துவ சிகிட்சை அளிப்பதையும் இஸ்ரேல் ராணுவம் அனுமதிப்பதில்லை.
 
     பல குழந்தைகளை அவர்களது உறவினர்கள் சந்திப்பதும் மறுக்கப்படுகிறது. பல சிறார்களும் சக கைதிகளால் பாலியல் ரீதியாக சித்திரவதைச் செய்யப்படுகின்றனர். இவ்வாறு அந்த அறிக்கை கூறுகிறது.
 
     குழந்தைகளை பாதுகாப்பதற்கான சட்டமும், சர்வதேச சட்டங்களையும் மீறித்தான் இஸ்ரேல் இத்தகைய காரியங்களை புரிவதாக ஃபலஸ்தீன் அமைச்சர் ஈஸா கராகியா தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் புகார் அளிப்பது தொடர்பாக ஆலோசித்து வருவதாக அவர் கூறினார். சர்வதேச அளவில் குழந்தைகளுக்கு அளிக்கும் உரிமைகளும், பாதுகாப்பும் ஃபலஸ்தீன் குழந்தைகளுக்கு வழங்க முடியாது என்று அண்மையில் இஸ்ரேல் திமிராக கூறியிருந்தது. நன்றி, தூது

நிதி நெருக்கடி! – டீசல், மண்ணெண்ணெய் விலையை மாதம் ஒருமுறை உயர்த்த முடிவு?

28 Dec 2012    India Considers Diesel, Kerosene Price Increase
 
     டெல்லி:டீசல்,மண்ணெண்ணெய் ஆகியவை மானிய விலையில் விற்கப்படுவதால் அரசுக்கு கடும் நிதி தட்டுப்பாடு ஏற்ப்படுகிறது. இதனை தவிர்க்க, டீசல் விலையை மாதம் ஒரு ரூபாய் வீதம் அடுத்த 10 மாதத்தில் ரூ.10 வரை உயர்த்தலாம் என பெட்ரோலிய அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.
பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரம் பெட்ரோலிய நிறுவனங்களிடம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், டீசல், மண்ணெண்ணெய் விலை நிர்ணயம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இவை இரண்டும் மானிய விலையில் விற்கப்படுவதால், அரசுக்கு கடும் நிதி தட்டுப்பாடு ஏற்படுகிறது. இந்த ஆண்டில் மட்டும் ரூ.1,60,000 கோடி பற்றாக்குறை ஏற்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
    
     டீசல் விலையை லிட்டருக்கு மாதம்தோறும் ரூ.1 என்ற வீதத்தில், அடுத்த 10 மாதங்களுக்குள் ரூ.10 உயர்த்தலாம் என்றும், இதேபோல் அடுத்த 2 ஆண்டுகளுக்கு மண்ணெண்ணெய் விலையை இதே அளவுக்கு உயர்த்தலாம் என்றும் பெட்ரோலியத் துறையால் ஒரு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
    
     இதுகுறித்து, பெட்ரோலியத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “எண்ணெய் நிறுவனங்களுக்கு டீசல் விற்பனையில் லிட்டருக்கு ரூ.9.28 நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. எனவே, டீசல் விலையை மாதம் ரூ.1 வீதம் 10 மாதத்தில் 10 ரூபாய் உயர்த்தும்போது நஷ்டம் முழுவதும் சமாளிக்கப்படும். மண்ணெண்ணெய்க்கும் 2 ஆண்டு காலத்தில் 24 மாதத்தத்துக்கு லிட்டருக்கு சுமார் 42 பைசா என்ற அளவில் உயர்த்துவதன் மூலம் ரூ.10 கூடுதலாக கிடைக்கும். இதனால் மண்ணெண்ணெய் விற்பனையில் ஏற்பட்டு வரும் நஷ்டத்தையும் சமாளிக்க முடியும். விலை உயர்வு திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தால் விலை உயர்வு அமலுக்கு வரும்” என்றார். நன்றி, தூது 

ஜம்மு-கஷ்மீர் குண்டுவெடிப்புகளின் பின்னணியிலும் ஹிந்துத்துவா தீவிரவாதிகள்!

 Samjhauta accused also involved in Jammu blast    28 Dec 2012
 
     புதுடெல்லி:ஜம்மு-கஷ்மீரில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளிலும் ஹிந்துத்துவா தீவிரவாதிகளுக்கு பங்கிருப்பது தெரியவந்துள்ளது. முதல் மலேகான், சம்ஜோதா எக்ஸ்பிரஸ், மக்கா மஸ்ஜித், அஜ்மீர் தர்கா, 2-வது மலேகான் உள்ளிட்ட குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய, அண்மையில் என்.ஐ.ஏவால் கைது செய்யப்பட்ட ஹிந்துத்துவா தீவிரவாதிகள் இதனை தெரிவித்துள்ளனர்.
 
    ஹிந்துத்துவா தீவிரவாத குழுக்கள் குண்டுவெடிப்புகளை நடத்தி விட்டு முஸ்லிம்கள் மீது பழியை சுமத்தும் பல்வேறு குண்டுவெடிப்பு சம்பவங்களில் உண்மை வெளிவந்துகொண்டிருக்கிறது.
2
     004 வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு ஜம்மு கஷ்மீரில் உள்ள பீர்மித்தா அஹ்லே ஹதீஸ் மஸ்ஜிதில் திரண்டவர்கள் மீது வெளியே இருந்து க்ரேனேடை வீசியவர்கள் தங்களின் குழுவைச் சார்ந்தவர்கள் தாம் என்பதை ஹிந்துத்துவா தீவிரவாதிகள் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தில் க்ரேனேடு வெடித்து 2 பேர் பலியானார்கள். ஏராளமானோருக்கு காயம் ஏற்பட்டது.
 
     தெஹ்ரீக்குல் முஜாஹிதீன் என்ற அமைப்பு இச்சம்பவத்திற்கு காரணம் என்று அன்று போலீஸ் கூறியது. இவ்வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கையை ஜம்மு-கஷ்மீர் போலீசாரிடம் என்.ஐ.ஏ கேட்டுள்ளது. விசாரணை அறிக்கையில் ஹிந்துத்துவா தீவிரவாதிகள் குறித்து ஏதேனும் விபரங்கள் கூறப்பட்டுள்ளனவா?என்பதை ஆராயவே இந்த அறிக்கை கேட்கப்பட்டுள்ளது.
 
     சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயிலில் குண்டுவைத்த ராஜேந்தர் சவுத்ரி அண்மையில் மத்தியபிரதேச மாநிலம் உஜ்ஜையினில் இருந்து கைது செய்யப்பட்டான். இந்தியாவில் நடந்த பல்வேறு குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் சுனில் ஜோஷி கொலை, பேராசிரியர் எஸ்.ஏ.ஆர் ஜிலானியை கொல்ல முயன்றது உள்ளிட்ட வழக்குகளில் தொடர்பிருப்பதை முந்தைய தினங்களில் என்.ஐ.ஏவிடம் சவுத்ரி வாக்குமூலம் அளித்திருந்தான். நன்றி, தூது

அதிரையில் பெரும் உயிர் இழப்பை தடுத்த இளைஞர்கள்! (புகைபடங்கள்)

நேற்று மாலை 6 மணி அளவில் நமதூர் CMP லைன் கல்லுகொள்ளை VKM ஸ்டோர் எதிரே உள்ள மின் கம்பத்திலிருந்து மின் கம்பி அறுந்துவிழுந்தது. இதை பார்த்த இளைஞர்கள் உடனடியாக துரித நடவடிக்கை எடுத்து அந்த வழியாக செல்ல கூடிய வாகனங்கள் மற்றும் பொதுமக்களை தடுத்து மாற்று வழியில் அனுப்பினர். பிறகு மின்சா(வு)ர வாரியத்திற்கு தகவல் தெருவிக்கப்பட்டது. இதன் பின்னர் விரைந்து வந்த மின் ஊழியர்கள் அறுந்த மின் கம்பியை சரிசெய்தனர். இறைவனின் அருளால் இளைஞர்கள் செய்த இந்த சேவையை நாம் பாராட்டியே ஆகவேண்டும். இதுபோல் பல சமூதாய பணிகள் செய்ய இளைஞர்கள் முன்வர வேண்டும்.
 மின் கம்பியை சரி செய்யும் ஊழியர்கள்

Thursday, December 27, 2012

கேரளாவில் நடைபெற்ற தேசிய பொதுக்குழு கூட்டத்தில் புதிய தேசிய நிர்வாகிகள் தேர்வு





     பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொதுக்குழு டிசம்பர் 22.23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் கேரள மாநிலம் புத்தனத்தானியில் மலபார் ஹவுஸில் வைத்து தேசிய தலைவர் இ.எம். அப்துர்ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது.இப்பொதுக்குழுவில் துவக்க உரையாற்றிய தேசிய தலைவர் தனதுரையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வேகமாக வளர்ந்து வரும் நவீன சமூக இயக்கம் என்பதையும் பாப்புலர் ஃப்ரண்டின் செயல்பாடுகள் மற்றும் கொள்கைகளுக்கு மக்களுக்கு மத்தியில் அமோகமான ஆதரவு கிடைத்து வருகின்றது என்றும் குறிப்பாக வட மாநிலங்களில் நல்ல ஆதரவு கிடைத்து வருகின்றது, சமீபத்தில் நடைபெற்ற பாப்புலர் ஃப்ரண்ட் ஏன்? பிரச்சாரத்திற்கு கலந்து கொண்ட மக்கள் வெள்ளமே இதற்கு சாட்சிய் என்றார்.சமூக நீதிக்கான போராட்டத்தில் மக்கள் பாப்புலர் ஃப்ரண்ட் உடன் இருக்கின்றார்கள் என்று கூறிய தேசிய தலைவர் பாப்புலர் ஃப்ரண்டின் "சமூக மாற்றம்" என்ற உன்னத பணியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் செயல் வீரர்கள் காட்டி வரும் தியாகம், போராட்டம் ஆகியவற்றை கோடிட்டு காட்டியதுடன் ஒவ்வொரு உறுப்பினரும் மென்மேலும் தங்களை செம்மைப்படுத்தி சமூகத்தின் உதாரண புருஷர்களாக மாற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இவ்விஷயத்தில் தலைவர்கள் போதிய கவனம் செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

     பின்பு, தேசிய பொதுச்செயலாலர் கே.எம். ஷரீஃப் ஆண்டறிக்கையை சமர்பித்தார். அறிக்கையில் பாப்புலர் ஃப்ரண்டின் உறுப்பினர்களின் எண்ணிக்கை நல்ல முன்னேற்றத்தையும், வளர்ச்சியையும் கண்டுள்ளது. குறிப்பாக வட இந்தியாவில் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது என்றும் சமூக மேம்பாட்டு பணிகளும், ஸ்கூல் சலோ, கல்வி உதவித்தொகை வழங்குதல் போன்றவை சமூகத்திற்கு மிகவும் உதவிகரமாகவும் பயனுள்ளதாகவும் அமைந்திருந்தது என்றார்.

     மேலும் பொதுக்குழு சமூக, பொருளாதார, அரசியல் ரீதியான விவாதங்களையும் எதிர்காலத்தில் பாப்புலர் ஃப்ரண்டின் முன்னேற்றம், நிகழ்ச்சிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. அதன்பின் அடுத்த இரண்டாண்டிற்கான தேசிய செயற்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது.

     புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தேசிய செயற்குழு உறுப்பினர்கள் தேசிய தலைவர், பொதுச்செயலாளர், துணைத்தலைவர் உள்ளிட்ட தேசிய நிர்வாகிகளை தேர்ந்தெடுத்தனர்.

     இதில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கே.எம். ஷரீஃப் தேசிய தலைவராகவும், கேரள மாநிலத்தைச் சேர்ந்த பி.கோயா துணைத்தலைவராகவும், ஓ.எம்.ஏ சலாம் பொதுச்செயலாளராகவும், தமிழகத்தைச் சேர்ந்த முஹம்மது அலி ஜின்னா மற்றும் கர்நாடகாவைச்சேர்ந்த முஹம்மது இலியாஸ் தும்பே ஆகிய இருவரும் செயலாளர்களாகவும், மேற்கு வங்கத்தைச்சேர்ந்த முஹம்மது ஷஹாபுதீன் பொருளாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.


    தேசிய செயற்குழு உறுப்பினர்களாக இ.எம். அப்துர்ரஹ்மான், யா முஹைதீன், ஹாமித் முஹம்மது, முஹம்மது ரோஷன், எம். முஹம்மது இஸ்மாயில், எம். அப்துஸ் சமது, அனீஸ் முஹம்மது, மெளலானா உஸ்மான் பேக், வழக்கறிஞர் முஹம்மது யூசுஃப் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

     ஐ. நா சபையில் ஃபலஸ்தீனுக்கு பார்வையாளர் நாடு என்ற ஸ்தானத்திற்கு இந்தியா அளித்துள்ள ஆதரவு சரியான முடிவு என்றும், முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு அரசின் மதச்சார்பற்ற தன்மைக்கான சோதனைக் களம் என்றும், யு.ஏ.பி.ஏ போன்ற கருப்புச் சட்டங்கள் இந்திய ஜனநாயகத்திற்கு ஆபத்தனது என்று பாபரி மஸ்ஜித் விவகாரத்தில் சரியான நீதியை வழங்குவது மக்களுக்கு அரசியல் சாசனத்தின் மீதான நம்பிக்கையை வலுப்படுத்தும் எனவும், ஃபலஸ்தீனில் போர்க்குற்றங்களை நிகழ்த்தியதற்காக இஸ்ரேலிய தலைவர்களை சர்வதேச கிரிமினல் நீதி மன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டும், இந்திய சிறைகளில் வாடும் அப்பாவி விசாரணை கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும், கலவரத்தால் பாதிக்கப்பட்ட அஸ்ஸாம் மக்களின் மறுவாழ்வுக்கு ஏற்பாடு செய்திட வேண்டும் என தீர்மானங்கல் நிறைவேற்றப்பட்டது.

    இறுதியில் புதிய தலைவர் மற்றும் தேசிய செயற்குழு உறுப்பினர்கள் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். தேசிய தலைவர் கே.எம். ஷரீஃப் அவர்கள் தனது உரையில் மக்களின் பிரச்சனைகளை கையில் எடுத்து உத்வேகத்துடன் செயல்பட வேண்டும் என அனைத்து உறுப்பினர்களையும் கேட்டுக்கொண்டார். மூன்று நாட்கள் நடைபெற்ற இப்பொதுக்குழுவில் நாட்டின் பல பாகங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 190 பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கே.எம். ஷரீஃப்
தேசிய தலைவர் (கர்நாடகம்)




ஓ.எம். ஏ. ஸலாம்
பொதுச்செயலாளர் (கேரளம்)




முஹம்மது இலியாஸ் தும்பே
செயலாளர் - கர்நாடகம்




முஹம்மது அலி ஜின்னா
செயலாளர் - தமிழகம்




முஹம்மது ஷஹாபுதீன்
பொருளாளர் - மேற்கு வங்கம்



பேராசிரியர். கோயா
துணைத்தலை

புதிய அரசியல் சாசனத்தில் முர்ஸி கையெழுத்திட்டார்!

president mohamed mursi    27 Dec 2012
 
      கெய்ரோ:மக்கள் விருப்ப வாக்கெடுப்பில் அங்கீகரிக்கப்பட்ட புதிய அரசியல் சாசனத்தில் எகிப்து அதிபர் முஹம்மது முர்ஸி கையெழுத்திட்டார். தேசம் சந்திக்கும் அரசியல் நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என அறிவித்த முர்ஸி, எகிப்தின் பொருளாதார கட்டமைப்பை மேம்படுத்துவதில் இனி கவனம் செலுத்தப்போவதாக தெரிவித்தார்.
 
     கடுமையான செலவுகளை குறைக்கும் நடவடிக்கையை விரைவில் அறிவிக்கப்படும் என்று அவர் சூசகமாக தெரிவித்தார். 2 கட்டங்களாக நடந்த மக்கள் விருப்ப வாக்கெடுப்பில் 63.8 சதவீத வாக்காளர்கள் அரசியல் சாசனத்தை ஆதரித்து வாக்களித்ததாக தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. 2 மாதத்திற்குள் பாராளுமன்ற தேர்தல் நடைபெறும்.
 
     புதிய அரசியல் சாசனத்தின் கீழ் பாராளுமன்றத்தின் துணை அவையான ஷூரா கவுன்சில் நேற்று கூடியது. தேர்தல் நடக்கும் வரை ஷூரா கவுன்சிலுக்கு சட்டமியற்றும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், அரசியல் சாசனத்திற்கு எதிரான போராட்டத்தில் இருந்து எதிர்கட்சியினர் வாபஸ் பெற்றுள்ளனர்.
 
     செலவு சுருக்கும் நடவடிக்கைகளை அறிவிப்பதற்கு முன்னோடியாக தொழிலதிபர்கள், தொழிலாளர் யூனியன்கள், அரசு சாரா அமைப்புகள் ஆகியோருடன் அரசு நேற்று பேச்சுவார்த்தை நடத்தியது. நாணய கட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 10 ஆயிரம் டாலருக்கு அதிகமாக நாட்டை விட்டு வெளியேறவோ, நாட்டிற்கு உள்ளேயோ வர அனுமதி கிடையாது.
 
    அனைத்து பிரிவு மக்களும் ஒன்றிணைந்து நாட்டை முன்னேற்றத்தின் பாதையில் அழைத்து செல்ல வேண்டும் என்று இஃவான் முஸ்லிமீன் தலைவர் முஹம்மது பதாஇ கோரிக்கை விடுத்துள்ளார். நன்றி, தூது

ஃபலஸ்தீன்: சிறைக்கைதிகளுக்கு ஆதரவாக குழந்தைகள் நடத்திய பேரணி!

childrens protest in palastine   27 Dec 2012
 
    காஸ்ஸா சிட்டி:இஸ்ரேல் அதிகாரிகளால் சட்டவிரோதமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஃபலஸ்தீனர்களின் குழந்தைகள் காஸ்ஸாவில் மெழுகு வர்த்தி ஏந்தி பேரணி நடத்தினர். தங்களின் உற்றார்களை காலவரையற்று சிறையில் அடைத்துள்ள நடவடிக்கையை இஸ்ரேல் நிறுத்தி, அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று குழந்தைகள் இஸ்ரேல் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
     சட்டவிரோத சிறைக்கு எதிராக இஸ்ரேல் சிறையில் பல மாதங்களாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் ஸமர் இஸாவி மற்றும் அய்மன் ஷர்வான் ஆகியோரின் படங்களை ஏந்தியவாறு காஸ்ஸாவில் உள்ள ரெட்க்ராஸ் தலைமையகம் நோக்கி குழந்தைகள் பேரணி நடத்தினர். 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஃபலஸ்தீனர்கள் இஸ்ரேல் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர் என்று புள்ளி விபரங்கள் கூறுகின்றன.
 
     இவர்களில் பெரும்பாலோர் விசாரணையோ, வழக்கு பதிவோ இல்லாமல் இஸ்ரேல் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இஸ்ரேல், ஃபலஸ்தீன் சிறைக் கைதிகளை தனிமை சிறையில் அடைத்து சித்திரவதைச் செய்வதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன. அடிப்படை வசதிகளை மறுத்து, குடும்பத்தினரை சந்திப்பதற்கு அனுமதி மறுத்து பல வருடங்களாக சிறையில் அடைத்து சித்திரவதை செய்வதற்கு எதிராக சிறைக்குள்ளேயே ஃபலஸ்தீன் மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கினர்.
 
     ஆறு ஃபலஸ்தீன் கைதிகள் இன்னமும் உண்ணாவிரதத்தை தொடருகின்றனர். இவர்கள விடுவிக்க சர்வதேச சமூகம், இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கடந்த வாரம் ஃபலஸ்தீன் லிபரேசன் ஆர்கனைசேசன் கோரிக்கை விடுத்திருந்தது. நன்றி, தூது

குஜராத் தேர்தலில் முறைகேடு: ஷப்னம் ஹாஷ்மி குற்றச்சாட்டு!

 sapnam hashmi    27 Dec 2012
 
     புதுடெல்லி:குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், சி.ஐ.ஏ உள்ளிட்ட அமெரிக்க ஏஜன்சிகளுக்கு இதில் பங்கிருப்பதாகவும் பிரபல மனித உரிமை ஆர்வலரும், அரசு சாரா அமைப்பான அன்ஹதின் தலைவருமான ஷப்னம் ஹாஷ்மி குற்றம் சாட்டியுள்ளார்.
 
     இதுக் குறித்து அவர் டெல்லி கான்ஸ்டியூசன் க்ளப்பில் டெபுட்டி ஸ்பீக்கர்ஸ் ஹாலில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியது: டிசம்பர் 15 மற்றும் 17-ம் தேதிகளில் நடந்த முறைகேடுகள் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும். ஏழ்மையும், குடிநீர் தட்டுப்பாடும், ஆரோக்கிய பிரச்சனைகளையும் அனுபவிக்கும் கிராம மக்கள் இத்தேர்தலில் ஒன்று திரண்டு மோடி அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.
 
     பிரச்சாரத்திற்கு இறங்கிய ஒரு மாதமும் மோடி அச்சத்துடன் காணப்பட்டார். முதல் கட்ட வாக்குப்பதிவு முடிந்த பிறகு ஏராளமான கோப்புகள்(ஃபைல்கள்) மோடியின் அலுவலகத்தில் இருந்து மாற்றப்பட்டதாக ஊடகங்களும் தெரிவித்திருந்தன. ஆனால், 2-ஆம் கட்ட வாக்குப்பதிவு முடிந்து டிசம்பர் 17-ஆம் தேதி மோடி தன்னம்பிக்கையுடன் தான் வெற்றிப்பெறுவேன் என்று பகிரங்கமாக அறிவித்தார்.
 
     டிசம்பர் 15 மற்றும் டிசம்பர் 17-ஆம் தேதிக்கு இடையே நிகழ்ந்த சில சம்பவங்கள் தாம் மோடி இவ்வாறு அறிவிக்க தூண்டியது. 20 தொகுதிகளில் நடந்த வாக்கெடுப்பில் மோசடி நடந்துள்ளதாக நாங்கள் கருதுகிறோம். தேர்தல் முடிவுகள் வந்த வேளையில் காங்கிரஸ் கட்சி உறுதியாக வெற்றிப் பெறும் என கருதப்பட்ட 20 தொகுதிகளில் அக்கட்சி தோல்வியை தழுவியது.
 
     எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு எந்திரங்களின் ப்ரோக்ராமில் மோசடி நடந்துள்ளதாக நாங்கள் கருதுகிறோம். எதிர்காலத்தில் எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு தடை ஏற்படுத்த வேண்டும். சில அமெரிக்க பிரதிநிதிகள் தேர்தலுக்கு சற்று முன்பாக குஜராத்தில் முகாமிட்டு என்ன செய்தனர் என்பதை வெளியிட வேண்டும். இவ்வாறு ஷப்னம் ஹாஷ்மி கூறினார்.
 
     குஜராத்தில் தேர்தலின்போது நரேந்திர மோடிக்கு எதிராக ’போலே குஜராத்’ என்ற பிரச்சாரத்தை ஷப்னம் ஹாஷ்மி நடத்தி வந்தார். நன்றி, தூது

மொபைலில் ஏற்பட்ட நட்பு பாலியல் பலாத்காரத்தில் முடிந்தது: கர்நாடகா பெண்ணிற்கு கேரளாவில் ஏற்பட்ட கொடுமை!

 un safety    27 Dec 2012
 
     கும்பளா(கேரளா):மொபைல் ஃபோனில் அறிமுகமான இளைஞரை சந்திக்க கேரளா மாநிலம் உப்பளாவிற்கு வந்த கர்நாடகா மாநிலத்தைச் சார்ந்த இளம் பெண்ணொருவரை காம வெறிப்பிடித்த கயவர்கள் பாலியல் வல்லுறவு செய்துள்ளனர். போனில் அறிமுகமான இளைஞனும், அவனது இரண்டு நண்பர்களும் சேர்ந்து ஆம்னி வேனில் இளம் பெண்ணை உப்பளாவில் இருந்து மங்களூர் வரை அழைத்து சென்று பாலியல் வல்லுறவு செய்துள்ளனர்.
 
      கும்பளாவில் நடக்க கூட முடியாமல் சோர்ந்து போய் இறக்கிவிடப்பட்ட பெண், அங்கு வந்த ஆட்டோவில் ஏறி அனாதை நிலையத்திற்கு கொண்டு போகுமாறு கூறியுள்ளார். ஆனால், ஆட்டோ டிரைவரும் ஒரு காம வெறிப்பிடித்த கயவன் ஆவான். அவன், இப்பெண்ணை தனது வீட்டிற்கு அழைத்துஸ் சென்று பாலியல் வல்லுறவில் ஈடுபட்டுள்ளான். கிறிஸ்துமஸ் இரவில் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
 
     இவ்வழக்கில் கும்பளாவில் உள்ள ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநரான கணேஷனை போலீஸ் கைது செய்துள்ளது. கர்நாடகா மாநிலம் கன்யானா பகுதியை சார்ந்த இளம்பெண், தந்தை மரணித்தவுடன், தாயார் மறு திருமணம் புரிந்துள்ளார். இதனால், மங்களூரில் ஒரு வீட்டில் வேலைக்கு சேர்ந்துள்ளார். அப்பொழுது ஃபோனில் அறிமுகமான இளைஞர், அப்பெண்ணை உப்பளாவிற்கு வருமாறு அழைத்துள்ளார்.
 
     உப்பளாவிற்கு வந்த பொழுது அந்த இளைஞர் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஆம்னி வேனில் கடத்திச் சென்று பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கிவிட்டு ரெயில்வே ஸ்டேசனில் தள்ளிவிட்டு சென்றுள்ளனர். அப்பொழுது அந்த பெண் பேருந்து நிலையத்திற்கு வந்த ஆட்டோ டிரைவர் கணேஷனிடம் தன்னை அனாதை நிலையத்திற்கு கொண்டு விடுமாறு கூறிய பொழுதும், கணேஷன் அந்த பெண்ணை ஏமாற்றி தனது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீஸ் கூறுகிறது.
 
     கணேஷன் அழைத்து சென்ற வேறு சிலரும் அந்த பெண்ணை வேட்டையாடியதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் கூட்டு பாலியல் வல்லுறவுக்கு காரணமான குற்றவாளிகளை போலீஸ் பாதுகாப்பதாக குற்றம் சாட்டி டி.ஒய்.எஃப்.ஐ தர்ணா போராட்டம் நடத்தியது. நன்றி, தூது

டெல்லி: காவலர் மரணத்திற்கு யார் காரணம்?- முரண்பட்ட தகவலகள்!

 constable subhash sandh   27 Dec 2012
 
     புதுடெல்லி:டெல்லியில் பெண் ஒருவர் ஒடும் பேருந்தில், பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதை எதிர்த்து கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆர்பாட்டங்களில் நடந்த வன்முறையின் போது, காவலர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக புதிய சர்ச்சைகள் எழுந்துள்ளன. வன்முறை கும்பலால் தாக்கப்பட்டதால் தான் அவர் உயிரிழந்தார் என்றும், தலையிலும், வயிற்றிலும் காயம் ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளியான நிலையில், அந்த நிலைப்பாட்டை ஒருதரப்பினர் மறுக்கிறார்கள்.
 
      உயிரிழந்த கான்ஸ்டபிள் சுபாஷ் சந்த் தோமருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை என்றும், அவர் மாரடைப்பால்தான் உயிரிழந்ததாகவும், சம்பவத்தை நேரில் பார்த்த, அந்தக் காவலருக்கு உதவி செய்ய முயன்றதாக கூறும் ஆர்ப்பாட்டக்காரர்களில் சிலர் தெரிவித்துள்ளனர். ஊடகத்துறை மாணவர் யோகேந்திரா என்பவரும், அவரது தோழி பவோலைனும்தான் சுபாஷ் சந்தை மருத்துவமனையில் சேர்த்தவர்கள்.
 
     போராட்டக்காரர்கள் தாக்கி அவர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் கூறுவது தவறு என்று அவர்கள் கூறினர். ஆனால், சுபாஷ் சந்த் தோமரின் குடும்பத்தினர் அந்த வாதத்தை ஏற்க மறுக்கின்றனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் தனது தந்தையை கீழே தள்ளி, மிதித்துவிட்டு ஓடியதால் தான் படுகாயமடைந்து உயிரிழந்ததாக அவரது மகன் ஆதித்யா தோமர் கூறினார்.
 
     டெல்லி போலீஸ் கமிஷனர் நீரஜ்குமார் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் பேசும்போது, தோமரின் நெஞ்சிலும், வயிற்றிலும் காயங்கள் இருந்ததாகவும் அதனால்தான் உயிரிழந்ததாகவும் தெரிவித்தார். அதேநேரம், சுபாஷ் சந்த் அனுமதிக்கப்பட்டிருந்த ராம் மனோகர் லோகியா மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் டி.எஸ். சித்து, “எங்களது ஆவணங்களின் அடிப்படையில், சிறிய காயங்களைத் தவிர காவலரின் உடலில் பெரிய காயங்கள் ஏதும் இல்லை.
 
    ஆனால், பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தான் முழுமையான விவரம் தெரியும்’ என்றார். உயிரிழந்த சுபாஷ் சந்த் தோமரின் உடல் முழு அரசு மரியாதையுடன் செவ்வாய்க்கிழமை அடக்கம் செய்யப்பட்ட நிலையில், புதன்கிழமை மாலை, பிரேத பரிசோதனை அறிக்கையை ஊடகங்ளுக்கு வெளியிட்டார் கூடுதல் காவல்துறை ஆணையர் திவேதி.
 
     “கடுமையாகத் தாக்கப்பட்டதன் எதிரொலியாக கழுத்திலும், நெஞ்சிலும் காயங்கள் ஏற்பட்டு அதன் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்”, என்றார் கூடுதல் திவேதி.
 
     காவலர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, அரவிந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவர் உள்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, டெல்லியில் திடீரென நடந்த ஆர்ப்பாட்டம் போன்ற சம்பவங்களைக் கையாள தயாரான திட்டம் ஏதும் இல்லை என்றும், அவற்றை உருவாக்க வேண்டும் என்றும் நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்திருக்கிறார்.
 
     அதே நேரத்தில், பாலியல் வல்லுறவு சம்பவம் தொடர்பாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய விசாரணைக் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாக சிதம்பரம் அறிவித்தார். நடந்த சம்பவம் தொடர்பாகவும், காவலரின் தவறுகள் ஏதாவது இருக்கிறதா என்பது குறித்தும், டெல்லி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான வழிகாட்டு முறைகள் குறித்தும் அந்த ஆணையம் மூன்று மாதங்களில் பரிந்துரை அளிக்கும் என்றும் சிதம்பரம் தெரிவித்தார். நன்றி, தூது

கூட்டு பாலியல் வல்லுறவில் ஈடுபடுவோரை கல் எறிந்து கொல்ல வேண்டும்: ஆஸம்கான்!

 azam khan   27 Dec 2012
 
     மெயின்பூரி:பாலியல் வல்லுறவில் ஈடுபடுவோரை இஸ்லாமிய ஷரீஅத் சட்டம் கூறுவது போல பகிரங்கமாக கல் எறிந்து கொலை செய்ய வேண்டும் என்று சமாஜ்வாதிக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான ஆஸம்கான் கூறியுள்ளார்.
 
    இத்தகைய காட்டுமிராண்டித்தனமான செயல்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை கூடுதலான தண்டனை அல்ல என்று அவர் கூறினார். செய்தியாளர்களிடம் பேசும் பொழுது, டெல்லி பாலியல் வல்லுறவு சம்பவம் குறித்து எழுப்பிய கேள்விக்கு அளித்த பதிலில் ஆஸம்கான் இவ்வாறு கூறினார். நன்றி, தூது

மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு: மேலும் ஒரு ஹிந்துத்துவா தீவிரவாதி கைது!

 makka masjid blast   27 Dec 2012
 
     புதுடெல்லி:2007-ஆம் ஆண்டு ஒன்பது பேர் பலியான மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் மேலும் ஒரு ஹிந்துத்துவா தீவிரவாதி கைது செய்யப்பட்டுள்ளான். மக்கா மஸ்ஜிதில் குண்டுவைத்தவர்களில் ஒருவரான தேஜ்ராம் பர்மர் என்பவனை மத்திய பிரதேச மாநிலம் தீபால்பூரில் இருந்து என்.ஐ.ஏ கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட பர்மர், ஹைதராபாத்தில் உள்ள என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டான்.
 
     அண்மையில் மத்தியபிரதேச மாநிலத்தில் இருந்து கைது செய்யப்பட்ட ஹிந்துத்துவா பயங்கரவாதிகளான ராஜேந்தர் சவுத்ரி மற்றும் டான்சிங் ஆகியோரின் நெருங்கிய தோழர் தாம் பர்மர். ஆர்.எஸ்.எஸ் தீவிரவாத இயக்கத்தின் தீவிர உறுப்பினர்களான இவர்கள், கொலை செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் சுனில் ஜோஷியின் தலைமையில் நாச வேலைகளில் ஈடுபட்டவர்கள் ஆவர். இவர்களில் சவுத்ரியும், பர்மரும் ஹைதராபாத்தில் உள்ள மக்கா மஸ்ஜிதில் குண்டு வைத்தவர்கள் ஆவர். நன்றி, தூது

பேராசிரியர் கிலானியை சுட்டவர்கள் ஹிந்துத்துவா தீவிரவாதிகள்!

 profs geelani   27 Dec 2012
 
     புதுடெல்லி:பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் குற்றமற்றவர் என விடுதலை செய்த பேராசிரியர் கிலானியை துப்பாக்கியால் சுட்டு கொல்ல முயன்றவர்கள் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயில் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளிகளான ஹிந்துத்துவா தீவிரவாதிகள் ஆவர். கிலானியை தாங்கள் தாம் துப்பாக்கியால் சுட்டதாக சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கில் அண்மையில் என்.ஐ.ஏவால் கைது செய்யப்பட்ட ஹிந்துத்துவா தீவிரவாதி ராஜேந்தர் சவுத்ரி ஒப்பு கொண்டுள்ளான்.
 
    பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் 2001-ஆம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றம் கிலானியை விடுதலை செய்தது. 2005-ஆம் ஆண்டு பிப்ரவரி 8-ம் தேதி வழக்கறிஞரை சந்திக்கும் வேளையில் ஹிந்துத்துவா தீவிரவாதிகள் அவரை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்ய முயன்றனர். அஜ்மீர் தர்கா மற்றும் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளியான லோகேஷ் சர்மா அப்பொழுது ராஜேந்தர் சவுத்ரியுடன் இருந்துள்ளான்.
 
     2003-ஆம் ஆண்டு சதித்திட்டம் தீட்டிய கொலை முயற்சிக்கு 2007-ஆம் ஆண்டு ராஜேந்தர் சவுத்ரியால் கொலை செய்யபட்ட ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் சுனில் ஜோஷி தலைமை வகித்துள்ளான். கிலானியை சுட்டவர்கள் ஹிந்துத்துவா தீவிரவாதிகள் என்று என்.ஐ.ஏ, டெல்லி போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளது. அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு வழக்கில் ஜெய்ப்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள லோகேஷ் சர்மா, டெல்லி போலீசிடம் ஒப்படைக்கப்படுவார்.
 
    அதே வேளையில், தன் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட பிறகும் போலீஸ் தன்னிடம் விபரங்களை கேட்கவோ, விசாரணை நடத்தவோ செய்யவில்லை என்று கிலானி நினைவுக் கூர்ந்தார். அதற்கு பதிலாக, குற்றமற்றவர் என நீதிமன்றம் விடுவித்த தன்னை போலீஸ் தீவிரவாதியாக சித்தரித்ததுடன் தனது குடும்பத்தை கொடுமைப்படுத்தியதாக அவர் குற்றம் சாட்டினார். நன்றி, தூது

ஒசாமா பின்லேடனை சுட்டுக்கொன்ற அமெரிக்க "கமாண்டர்" தற்கொலை!

    DEC27, ஆப்கானில் செயல்பட்டுவரும் 9 அமெரிக்க கமாண்டர்களில் முக்கியமானவன், ஜான் டபுள்யூ பிரைஸ் (42), பாகிஸ்தானுக்கு சென்று "ஒசாமா"வை சுட்டுக்கொன்ற குழுவுக்கு தலைமை வகித்த இவன், நேற்றுமுன்தினம் "கிறிஸ்மஸ்" அன்று தற்கொலை செய்துக்கொண்டான்.

    ஆப்கான் நாட்டில் அமெரிக்கப்படைகள், 9 குழுக்களாக பிரிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

     அதில் முக்கியமான 4வது செல்லின் கமாண்டர் ஜான் டபுள்யூ பிரைஸ். ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் இருப்பதை உறுதி செய்தவனும், தாக்குதலுக்கு நேரடியாக தலைமையேற்றவனும் இவன் தான்.

     கடந்த 23 வருடங்களாக அமெரிக்க ராணுவத்தில் பணிபுரிந்து வந்த இவன், நேற்று முன்தினம், ஆப்கானில் அவனது குடியிருப்பில் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு "தற்கொலை" செய்து கொண்டான்.
 
     அவனுக்கு ஸ்டைபன் என்ற மனைவியும் ஜேலியான் என்ற 9 வயது பெண் குழந்தையும் உள்ளது.
 
     சொந்த ஊர், அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தின் போயிஸ் டவுன்.

Wednesday, December 26, 2012

செய்துங்கநல்லூர் அருகே சிறுமி புனிதா மானபங்கம்- பொதுமக்களோடு களத்தில் இறங்கி போராடிய எஸ் டி பி ஐ

                                
                                                     தினகரன் வந்த செய்தி

     தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரை அடுத்த கிளாக்குளம் கிராமத்தைச்சேர்ந்தவர் சவுந்தரராஜன். அவருடைய மனைவி இசக்கியம்மாள். இவர்களுக்கு 2 மகள்கள் மூத்த மகள் புனிதா ( வயது 13). நாசரேத்தில் உள்ள மகளிர் பள்ளிக்கூடத்தில் 7ம் வகுப்பு படித்து வந்தாள். கணவர் சவுந்தரராஜன் ஒரு ஆண்டுக்கு முன்பு இறந்துவிட்டார். எனவே, மகள்களுடன் உள்ளூரில் உள்ள தனது தந்தை வீட்டில் வசித்து வந்தார் இசக்கியம்மாள்.இவர் அந்த பகுதியில் மிகவும் குறைந்த ஊதியத்தில் சத்துணவு தற்காலிக ஊழியராக பணி புரிந்து வருகிறார் இங்கு உள்ள தாத்தா வீட்டில் இருந்து ரயில் மூலம் நாசரேத்தில் உள்ள பள்ளிக்கு சென்று வந்தாள் புனிதா. கிளாக்குளத்தில் இருந்து தாதன் குளத்தில் இருக்கும் ரயில் நிலையத்திற்கு அரை கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டும். இந்த வழி காட்டுப்பாதை அதனால் மாணவிகள் குழுவாக சேர்ந்துதான் ரயில் நிலையத்திற்கு செல்வார்கள்.ஆனால் சம்பவம் நடத்த அன்று அரையாண்டு தேர்வு நடந்து வருவதால் காலை 7 மணி அளவில் புனிதா தனியாக புறப்பட்டு சென்றாள். காட்டுப்பாதையில் ரயில் நிலையத்தை நோக்கி சென்றாள். சென்றவள் மாலையில் வீடு திரும்பவில்லை இந்த நிலையில் புனிதாவை தேடி செய்துங்கநல்லூநல்லூர் காவல்துறையிடம் புகார் கொடுத்தனர்.
                                         
 
                           
     SDPI யினர் பொது மக்களோடு இணைந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொழுது
 
     இந்த நிலையில் காட்டு பகுதியில் மிகவும் மோசமான நிலையில் மானபங்கபடுத்தப்பட்ட நிலையில் பிணமாக புனிதா கிடந்தார் இந்த நிலையில் காவல்துறை அந்த பகுதிக்கு உடனே வந்து புனிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.உடனே கொலை செய்யப்பட்ட புனிதாவின் குடுமபத்தினரை SDPI மாவட்ட பொது செயலாளர் பாசில்சமீர் ,மாவட்ட செயலாளர் காதர்,நகர செயலாளர் முத்து வாப்பா ,மாவட்ட செயற்குழு உறுப்பினர் உஸ்மான் உள்பட மாவட்ட நிர்வாகிகள் பலர் சென்று ஆறுதல் கூறினர்.அதே நேரத்தில் கொலையாளிகளை பிடிப்பதில் காலதாமதம் ஏற்படவே எஸ்.டி.பி.ஐ பொது மக்களுடன் இணைந்து கிளாக்குளத்தில் இருந்து கருங்குளம் நோக்கி சுமார் 6 கிலோமீட்டர் வரை கண்டன பேரணி நடத்தினர்.பின்னர் SDPI மற்றும் பொதுமக்களும் இணைந்து கொலையாளிகளை பிடிக்க வலியுறுத்தியும் மற்றும் பொதுமக்களின் 5 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற கருங்குளம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட பட்டனர் .
                                   
                                      
                                     காவல்துறையுடன் SDPI பேச்சுவார்த்தை நடத்திய பொழுது
 
     அங்கு வந்த காவல்துறை மக்களோடு பேச்சுவார்த்தை நடத்தியது அப்பொழுது காவல்துறையினர் கொலையாளியை பிடித்து விட்டதாக கூறினார் அப்பொழுது மக்கள் கொலையாளியை கண்ணால் காணமல் நாங்கள் போகமாட்டோம் என பொது மக்கள் உறுதியாக கூறினர் இந்த நிலையில் காவல்துறை அதிகாரி ADSP கண்ணன் உங்களில் 20 பேர் மட்டும் எங்களுடன் வாருங்கள் கொலையாளியை காண்பிக்கிறோம் எனக்கூறினார் அப்பொழுது SDPI நிர்வாகிகள் பொதுமக்களோடு இணைந்து கொலையாளியை சிறைசாலையில் சென்று கணடனர்.கண்ட பின்னர் மக்களோடு கூறி போராட்டத்தை வாபஸ் பெற்றனர் பின்னர் அங்கு வந்த தாசிதாரிடம் பொது மக்கள் இனி இதே போல் சம்பவம் நடக்காமல் இருக்க எங்கள் முக்கியமான கோரிக்கையை நிறைவேற்றுமாறு கோரினர்.

கோரிக்கைகள் :

     1.உயிரிழந்த புனிதாவின் குடும்பத்திற்கு நிவாரண தொகையாக ரூபாய் 10 லட்சம் கொடுக்க வேண்டும் இதற்கு மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்ய வேண்டும்
     2.புனிதாவின் தாயார் மிகவும் குறைந்த ஊதியத்தில் வேலை செய்து வருகிறார் அதனால் அவருடைய பணியை உயர்த்த வேண்டும்
    3.இந்த பகுதியில் அதிக மின் விளக்கு அமைத்து தர வேண்டும்
  4.பேருந்து மற்றும் சாலை வசதி இல்லாமல் இந்த மாணவி காட்டு வழியே நடத்து சென்றுள்ளார் அதனால் இந்த பகுதியில் மேலும் வேறு சம்பவம் நடவாமல் இருக்க சாலி வசதி மற்றும் பேருந்து வசதி செய்து தர வேண்டும்
   5.சமுக விரோதிகள் குடியேறும் இடமாக மாறுவதால் இங்கு காவல்துறை பாதுகாப்பை அதிகபடுத்த வேண்டும்
     6.இனி இதே போல் பாலியல் சம்பவம் நடவாமல் இருக்க தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும்
தாசில்தாரிடம் மக்கள் கொடுத்த கோரிக்கை






SDPI மாவட்ட பொது செயலாளர் பாசில் சமீர் பேட்டி கொடுத்த பொழுது